ஆய்வு: தாயுமானவர் பாடல்களில் தன்னையறிதல்.

- வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -முன்னுரை
தன்னை அறிந்து கொள்வதில் ஒரு முறையான பயிற்சியும், முயற்சியும் ஒருபுறம் இருக்க இன்னும் பல்வேறு வழிகளில் பலர் தன்னை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் தேடல் என்பது புறத்தேடல் அதாவது வெளிவுலகத் தேடல் அல்ல அகத்தேடல், அதாவது மனதளவில் தேடுதல் ஆகும். இந்த அகத்தளவு தேடலில் அவர்கள் தேடியவை கிடைத்ததன் பயன்பாட்டை அவர்கள் பாடலின் மூலம் வெளி உலக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொறுத்திப்பார்த்து பயன்பெறும் வண்ணம் அமைத்திருப்பார், அந்த வகையில் தாயுமானவர் தன் அகத்தேடலின் பயனை அவர் பாடலின் மூலம் எடுத்துக் கூறுவதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தன்னையறிதல்
ஆன்மீக உலகத்தில் நான் யார்? என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒன்றாகும். எத்தனையோ அணுகு முறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் இது சம்மந்தமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியிருந்தாலும் அடிப்படை உண்மை ஒன்றுதான். நாம் அறிந்துகொள்ளும் செய்திகளைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமானால்,அதனை சரியான கோணத்தில் விவாதித்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் என்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. நமது சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. உலகமே ஒரு யுத்தகளமாக அமைந்துள்ளது, போராட்டமும் வன்முறையும் தலை விரித்து ஆடுகிறது. எல்லாவற்றிற்கும் மூல காரணம் இந்த நான் என்னும் உணர்வுதான். ‘நான் சொல்வதுதான் சரி, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்று இந்த நான் எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சினையாக உள்ளது. இந்த நான் என்னும் உணர்வுதான் நமது செயல்களை ஊக்குவிக்கும் முக்கியமான அம்சமாகவும் உள்ளது. நமது செயல்களை நிர்ணயிக்கும் அம்சமாகவும் உள்ளது.

“தன்னைஅறி யாதுசகத் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே”.
(தாயு. பு.க.பா.எ.289)

என்ற பாடலில் தன்னையறிந்தவருக்கே சுகம் கிடைக்கும் என்கிறார்.

Continue Reading →

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி 1 – கருணாகரன் கதை ( 1-6))

– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது. –

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் ஒன்று: ஒரு பயணத்தின் தொடக்கம்

ஏழு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை அவ்வளவு விரைவாகக் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவும் பகலும் மழையும் வெயிலும்.பருவங்கள் மாறியபடி கூடவே காலமும் விரைந்தபடி…முடிவற்ற வாழ்வின் பயணங்களிற்கு முடிவு தானேது. விடிவும், முடிவும், முடிவும். விடிவும்.தொடக்கமே முடிவாகவும் முடிவே தொடக்கமாகவும்.தொடரும் பயணங்கள். தொடர்ந்தபடி.தொடர்ந்தபடி. என் வாழ்க்கையில் எதிர்பாராமல் எதிர்ப்பட்டுவிட்ட.கடந்த ஏழு வருடங்கள் வாழ்வில் மறக்கமுடியாதபடி..ஒரு விதத்தில் களங்கமாகப் படிந்துவிட்ட காலத்தின் சுழற்சிகள்.எதற்காக? ஏன்? இவ்விதம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்க்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. உள் மனத் தூண்டுதல்களின் ஆவேசத் தூண்டுதலின் முன்னால் அறிவு அடிபணிந்து விடுகிறபோதுகளில் தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. செய்துவிட்ட தவறுகளிற்காகப் பின்னால் மனது கிடந்து அடித்துக் கொண்டுவிட்டபோதும். நடந்த தவறு என்னவோ நடந்ததுதானே. அதன் பாதிப்பும் விளைவுகளும் ஏற்படுத்திவிடும் ஆழமிக்க காயங்களிற்கு மருந்து.

பஸ் விரைந்து கொண்டிருக்கின்றது. வவுனியாவை நோக்கி.பின்புறத்தில்.மூலைசீட்டில் அமர்ந்தபடி யன்னலினூடு விரையும் காட்சிகளைப் பார்த்தபடி, சிந்தனையில் மூழ்கியவனாக சிலையாக உறைந்து போய்க்கிடக்கின்றேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சிந்தனைகள். உரையாடல்கள். அத்தனை பேரையும் தாங்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தரிப்பிடங்களில் இறங்க வேண்டியவர்களை இறக்கி, ஏற வேண்டியவர்களை ஏற்றி.வெற்றிலையைக் குதப்பித் துப்பியவாறே “அண்ணே ரைட்” என்ற கண்டக்டரின் குரலுடன்.குலுக்கலுடன் பஸ் விரைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மனது மூழ்கிப் போய்விடுகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நேற்றுவரை நானொரு சிறைப்பறவை. நான் செய்து விட்ட அந்தக் குற்றத்திற்கு இந்த எழு வருடங்கள் போதவே போதாது. ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் தீரக்கூடிய பாவத்தையா நான் செய்திருக்கின்றேன். எந்த ஒரு நாகரீக மனிதனுமே செய்யக்கூசுகின்ற அஞ்சுகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய என்னால், மக்களிற்காக வாழ்ந்து மடிந்த தியாகி ராஜரத்தினத்தின் மகனால் எப்படி முடிந்தது? எப்படி முடிந்தது?

தொடர் நாவல்: மண்ணின் குரல் (1 -5)

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -– 1984  இல் ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’.  ‘புரட்சிப்பாதை’ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் ‘புரட்சிப்பாதை’ நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. –

அத்தியாயம் ஒன்று: கமலா டீச்சர்!

மாரி தொடங்கிவிட்டதால் கடந்த இரு மாதங்களாகவே மப்பும் மந்தாரமாகத்தான் வானம் இருண்டு கிடக்கின்றது. தமிழரின் வாழ்வைப்போல், வேளைக்கே இருண்டுவிடும் பொழுதுகளில், கும்மிருளைக் கிழித்தபடி கவசவாகனங்கள் விரைவதும், கொள்ளிவாற் பிசாசுகளால் கிராமங்கள் எரிவதும்.ஆதிகாலத்தில் ‘கொள்ளிவாற் பிசாசுகளை சேற்றிலுருவாகும் வாயு ஒன்றின் விளைவே என்பதனை அறியாத மானுடர்கள் மருண்டு திரிந்தார்கள். இன்றும் ‘கொள்ளிவாற் பிசாசுகளின் நடமாட்டம் தமிழீழமெங்கனுமே அதிகமாகத்தான் இருக்கின்றது.ஆமாம். இவையும் ஒருவிதச் சேற்றில்தான் உருவாகின்றன.இனவாதச்சேற்றில் உருவான ‘கொள்ளிவாற் பிசாசுகள் இவை, விரைவாக வீடுசேரும் அவசரத்தில் கமலா, வயல் வெளிகளினூடே நீண்டிருக்கும் அச்சாலையில் தனிமையில் வந்து கொண்டிருந்தாள். இலேசாக இருண்டுவிட்டது. மழை வேறு மெல்லிய தூறலாக துமித்தபடி இருந்தது.ஏதோ ஒருவிதச் சோகத்தில் ஆழ்ந்திருப்பதைப்போல் பனை மரங்களெல்லாம் மெளனித்துக் கிடக்கின்றன. வழக்கமாக ஒருவித ஆனந்தத்தில் எக்காளமிடும் தவளைகள் கூட சுருதிகுறைத்து சோககீதம் இசைத்தபடி இருக்கின்றன.

கமலா ஒரு நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளமாது. வட்டுக்கோட்டையிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றுகிறாள். அவளது தந்தையும் ஒரு தமிழாசிரியரே! அவளிற்கடுத்து மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் இருக்கின்றார்கள். அவளிற்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் குடும்பநிலைமை காரணமாக கிடைத்த ஆசிரியை வேலையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். அவளிற்கடுத்த இரு சகோதரிகளும் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருக்கிறார்கள். இளவயதிலேயே தாயை இழந்து விட்ட குடும்பத்தில் அவளே தாயாக, தமக்கையாக விளங்கினாள். கடைசித் தங்கையும், தம்பியும் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள்.

Continue Reading →

தொடர் நாவல்: வன்னி மண் (1 – 5)!

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும். முதலில் ‘வன்னி மண்’ நாவல் பிரசுரமாகும்.  அதனைத்தொடர்ந்து ஏனைய நாவல்கள் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.

‘மண்ணின் குரல்’ தொகுப்புக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய அறிமுகக் குறிப்பு:

அறிமுகம்: திரு கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத் தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக்கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம். அவரது எழுத்துக்களில் இயற்கையின் ஈடுபாட்டையும் வர்ணனையையும் பரந்து காணலாம். கவிஞர்களால் என்றும் இயற்கையின் அழகையும் எழிலையும் மறந்து விடமுடியாது என்றே கூறத்தோன்றுகிறது. ‘வன்னி மண் வெறும் காடுகளின்,  பறவைகளின் வர்ணனை மட்டுமல்ல. அந்த மண்மேல், ஈழத்து மண்மேல் அவர்கொண்ட பற்றையும் கூறும். வன்னி மண் நாவலில் மட்டும் இப்போக்கு என்று கூறுவதற்கில்லை. மற்றைய மூன்று நாவல்களிலும் கூட அவரது கவித்துவப் பார்வையைக் காணலாம். அடுத்தது, மனிதாபினமானமும், செய் நன்றி உணர்வும், தவறு நடந்தபோதும் அவரது கதை மாந்தர்களின் பச்சாதாப உணர்வு முதன்மை பெற்று நிற்பதையும் நான்குகதைகளிலும். ‘வன்னி மண் சுமணதாஸ் பாஸ், “அர்ச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலிலும் வரும் சிறுவன், டீச்சர், கணங்களும் குணங்களில் வரும் கருணாகரன் மண்ணின் குரலில் வரும் கமலா யாவரிலும் தரிசிக்கலாம்.

இலங்கை மாணவர் கல்வி நிதிய குறிப்புகள்!

அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 2017 மே 10 ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் வடக்கு,…

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ : லெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்

பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன்நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு விருது வழங்கப்படும். படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே லெனின் விருதின் தனித்தன்மை.

பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்: அம்பாசமுத்திரம் பக்கத்திலுள்ள வழுதூரைச் சார்ந்த ஸ்வர்ணவேல் அவர்கள் பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அங்கு பாலு மஹேந்திராவிற்கு பல வருடங்கள் ஜூனியர். ஆவணப் படங்களின்பால் தனது கவனத்தைச் செலுத்திய சொர்ணவேல் தங்கம் (1995), ஐ.என்.ஏ. (1997), வில்லு (1997), போன்ற முக்கிய ஆவணப் படங்களின் இயக்குனர். அவரது சமீபத்திய படங்களில் முக்கியமானது அன்பினிஷ்ட் ஜர்னி: எ சிடி இன் ட்ரான்ஷிஸன் (2012) மற்றும் மைக்ரேஷன்ஸ் ஆப் இஸ்லாம் (2014). அன்பினிஷ்ட ஜர்னி, சொர்ண்வேல் தனது நண்பர் பேராசிரியர் மார்க் ஹூல்ஸ்பெக்குடன் இணையாக தயாரித்து இயக்கிய படம். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் முதல் நகரமென கருதப்படும் செயிண்ட் ஆகஸ்டினில் 1960களில் நடந்த இதுவரை அதிகம் அறியப்படாத இன/நிற வெறுப்புச் சம்பவங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பட்ட கஷ்டங்களை ஆவணப்படுத்தியிருக்கும் இப்படம் பகழ்பெற்ற (AWDFF) ஆப்ரிகன் வொர்ல்ட் பிலிம் பெஸ்டிவலினால் அமெரிக்க சிவில் ரைட்ஸ் மூவ்மெண்டின் 50வது ஆண்டுவிழாவிற்காக தெர்ந்தெடுக்கப்பட்டு பல இடங்களில், குறிப்பாக ஆப்ரிக்காவில் நைஜீரியாவிலும், இப்பொழுதும் ஆப்ரோஅமெரிக்கர்கள் நிறவெறியினால் துயறுரும் பெர்கஸனுக்குப் பக்கதிலுள்ள மிஸ்ஸூரி பல்கலைக் கழகத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரிக்க அமெரிக்க ம்யூஸியத்தில் அரங்கேறியது தமிழர்களுக்கு பெருமை.

Continue Reading →

Australia: United Tamil Youth Black July Screening – TODAY (Wednesday 26th July) @ Monash ​ Rotunda – Lecture Theatre 2

நிகழ்வுகள் கன்டு களிப்போமா?மெல்பேன் தமிழ் இளையோர்களின் உயர்ந்த நோக்கங்களிற்கும், முன்னெடுப்புக்களுக்கும் உங்களால் முடிந்த முழுமையான ஆதரவை இன்று (26ம் திகதி) வழங்குவதோடு மட்டுமல்லாமல், மண்டபம் நிறைந்த நிகழ்வாக மாற்றுவதற்கு, உங்களிற்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். கறுப்பு ஜீலையின் 34ம் ஆண்டு ஞபாகார்த்தமாக, No Fire Zone எனும் எமது இறுதிக்கட்ட போரின் போது நடாத்தப்பட்ட இனவழிப்பு விபரணச்சித்திரம் காண்பிக்கப்பட்டு, இதன்மூலம் திரட்டப்படும் பணத்தைக் கொண்டு தாயகத்தில் அல்லற்படும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவவுள்ளர்கள். அனுமதி 10 வெள்ளிகள் மாத்திரமே. மேலதிக விபரங்களிற்கு கீழே உள்ள இணைப்பையும், மின்னஞ்சலையும் பார்க்கவும்.

Please support UTY’s Event on Today (Wednesday (26th July at 6:45pm)) by attending their ‘No Fire Zone’ screening to raise awareness and help rehabilitate our Tamil families back in Sri Lanka. Help give back to those back home as proceeds help educate children through Trinco Aid.

As a responsible Tamil Citizens, Seniors of Tamil community, we should have wholeheartedly encourage the Tamil youth’s good initiatives.

Special Guest Rob Stary, who is a Criminal Defence Lawyer and Friend of the Tamil Community.

Date: Wednesday, 26th July 2017 (Time: 6..45 pm (Doors Open at 6.30pm))
Address: Rotunda – Lecture Theatre 2, 46 Exhibition Walk, Monash University, Clayton Campus
Tickets: $10 Per Person (Light Refreshments and Tea/Coffee will be available)

Continue Reading →