வாசிப்பும், யோசிப்பும் 258: 32 நாடுகளைச்சேர்ந்த 1000 கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு!

32  நாடுகளைச்சேர்ந்த 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து செல்லமுத்து வெளியீட்டகம் (வள்ளுவர்புரம்) என்னும் பதிப்பகம் வெளியிடவுள்ளது. இத்தொகுப்பின் வெளியீட்டுக்கான செயலியக்குநராக இருக்கின்றார் இளம் எழுத்தாளர் யோ.புரட்சி. ஈழத்தமிழர்…

Continue Reading →

ஆய்வு: உயிரின பரிணாம வளர்ச்சி சிந்தனையும், பண்டையத் தமிழரின் கருத்தமைவும்.

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இயற்கை, இயற்கைச் சார்ந்தப் பொருட்களின் இயக்கமே பொதுவிதியாம்.  இவ்வியற்கை விதியில்  மனித குலத்தின் தோற்றமும் அடங்கும்.  புவியில்  ஓரு  செல் உயிரிகள் தோற்றம் பெற்று, பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து,  அவை நீர் வாழ்வன, நீர், நில வாழ்வன, நிலவாழ்வன எனப் பன்முகப்பட்டு, மெல்லுடலி, குடலுடலி, முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை, குட்டி ஈனுபவை, முது நாண் அற்றவை, முது நாண் உடையவை எனப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.    இவற்றுள் ‘மனிதனின் பரிணாம வளர்ச்சி’ வியக்கத்தக்கது. 

மனிதக்குரங்கு மனிதனாக மாறிய வளர்ச்சி நிலையை, டார்வின் கோட்பாடும், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கருத்தியலும் தெளிவுற எடுத்துரைத்தன.  டார்வினின் ‘தக்கவை பிழைத்தல்’ கோட்பாடானது, இவ்வியற்கை உலகில் ‘தம்மைத் திருத்திக் கொண்டு வாழத் தகுதியற்ற உயிரினங்கள் மடிந்து போகும்’ என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டோடு விளக்கியது.  இக்கருத்தியல் மதக்கருத்துக்களுக்கு நேர்மாறாக,பல்வேறு புதிய சிந்தனைகளையும், உண்மைகளையும் உலகிற்கு எடுத்துரைத்தது.

பண்டைக் காலத்தில் மனிதன் வளர்ச்சியடைந்தப் பின்னர், அதாவது நாடோடி வாழ்க்கைக்குப் பின்னர் நிலையான குடியிருப்பை அமைத்து,உற்பத்திக் கருவிகளை உருவாக்கிய காலக் கட்டத்திலும், அதற்குப் பின்னரும் இயற்கை பொருட்களையும், அதன் மாறுபாடுகளையும் தொடர்ச்சியாக ஆராய்ந்துள்ளான்.  மதவாதிகள் ஒருபுறமும், இயற்கையியலாளர்கள் மறுபுறமுமாய் இவ்வுலகைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

Continue Reading →

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும் ! – பகுதி 2: அகிலாவின் கதை (1 – 5)

– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது.

பகுதி இரண்டு  – அகிலாவின் கதை: அத்தியாயம் ஒன்று –   குழம்பிய நெஞ்சம்

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். நித்திரையோ வரவே மாட்டேன் என்கிறது. இரவோ நள்ளிரவையும் தாண்டி விட்டது. அப்பா கூடத்தில் குறட்டை விட்டுத் தூங்குவது இலேசாகக் கேட்கிறது. என் நெஞ்சிலோ அமைதியில்லை. அமைதி எப்படி வரும்? நத்து ஒன்று விட்டு விட்டுக் கத்துவது இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு காதில் கேட்கிறது. மீண்டுமொரு முறை புரண்டு படுக்கிறேன். பல்வேறு வகைப்பட்ட எண்ணங்கள். எண்ணங்கள். மனது அன்று மாலை குளக்கரையில் நடந்த சம்பவத்தையே அசை போட்டபடி. கருணாகரனின் உருவம் நெஞ்சில் வந்து சிரிக்கின்றது. உயர்ந்து திடகாத்திரமான அந்த உருவம். இதயத்தையே துளைத்து விடும் அந்தக் கண்கள். சதா சிந்தனையிலேயே மூழ்கிவிடும் அந்த அழகு வதனம். என்னால் நம்பவே முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. கருணாகரன் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி என்பது முன்பே தெரிந்து தானிருந்தது. ஆனால் அவன் செய்த குற்றம் இத்தகைய கொடுமையானதாயிருக்குமென்று நான் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தன் குழந்தையைப் போல அவனை வளர்த்து வந்த சுப்பிரமணிய வாத்தியாரிற்கு அவன் செய்த கைம்மாறு. காயத்ரீக்கு அவன் செய்த மன்னிக்கவே முடியாத அந்தக் கொடுமை. எப்படி அவனால் அவ்விதம் செய்ய முடிந்தது. கருணாகரன். எழுத்தாளன் நீலவண்ணனின் மறுபக்கம் இத்தனை கொடுமையானதாயிருக்க வேண்டும். என்னால் நம்பவே முடியவில்லையே. அவன் முகத்தில் விழிப்பதே பாவம் போலவிருக்கின்றது. பெண்களின் உணர்வுகளைச் சிறிதும் மதிக்காத ஆண்கள் வாழும் உலகின் ஒரு பிரதிநிதிதானே அவனும். செய்த தவறிற்காக அவன் மனம் வருந்துவது உண்மையாக இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சிதைந்துவிட்ட காயத்ரீயின் வாழ்வு. நடைப்பிணமாகவே மாறிவிட்ட சுப்பிரமணிய மாஸ்டரின் நிலைமை. கருணாகரன் மேல் வெறுப்பு வெறுப்பாக வந்தது. செய்த பாவங்களிற்குப் பரிகாரமாகத்தான் சமூகவேலை. அது இதென்று அலைகின்றானோ. இருக்கலாம். சிந்தித்து சிந்தித்து புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். தெளிவுபெறுவதற்குப் பதில் மேலும் மேலும் குழம்பிப்போனதுதான் மிச்சம். எங்கோ ஒரு சேவல் கூவியது. அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று சேவல்களின் கூவல்கள்.தொடர்ந்து இரவின் நிசப்தம்.இப்படித்தான் சிலவேளைகளில் சில சேவல்கள் நேரம் மாறிக் கூவிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க ஆரம்பத்தில் கருணாகரன் மேல் இருந்த வெறுப்பு சிறிதுசிறிதாக குறைவதுபோல் பட்டது. மனிதர்கள் அடிக்கடி தவறு செய்துவிடுகிறார்கள். சிலவேளைகளில் செய்யும் தவறுகள் சிறிதாக இருந்துவிடுகின்றன. இன்னும் சிலவேளைகளிலோ பெரிதாக இருந்துவிடுகின்றன. ஆனால் செய்ததென்னவோ தவறு தவறு தானே. மனிதனின் மனதில் நல்ல உணர்வுகளும் கெட்ட உணர்வுகளும் உறைந்து கிடக்கின்றன. சில கணங்களில் சில கெட்ட குணங்கள்,உணர்வுகள் ஆட்சி செலுத்தி விடுகின்றன. அந்தக் கணங்களில் மனிதன் தன் மனிதத்துவத்தை இழந்து மிருகமாகி விடுகிறான். பின்னால் கிடந்து வேதனையினால் வெந்து துடித்துப் போகின்றான். கருணாகரனின் கதையும் இதுதானே.

தொடர் நாவல்: மண்ணின் குரல் (6 -10)

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -– 1984  இல் ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’.  ‘புரட்சிப்பாதை’ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் ‘புரட்சிப்பாதை’ நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. –

அத்தியாயம் ஆறு: கமலா எங்கே?

நாட்கள்தான் எவ்விதம் உருண்டோடி விடுகின்றன. ‘காலம் தான் காத்து நிற்பதில்லையே. கமலா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்து ஏறத்தாள ஒரு வாரம் கழிந்து விட்டது. இந்த ஒரு வாரமாக அவளடைந்த  மன வேதனை  வார்த்தையில் அடங்காது. கிராமத்தவர்கள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வந்தபடி ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்கள். நடராஜா வாத்தியாரோ எதிலுமே பற்றற்றவராய் சுருட்டொன்றைப் புகைத்தபடி திண்னையில் குந்திவிடுவாராயின் அவரை எழுப்புவதே பெரும்பாடாகப் போய்விடும். சாரதாதான் ‘அப்பு உள்ளுக்கு வந்து இரணை”. என்று வற்புறுத்தி ஒரு மாதிரி அவரை உள்ளுக்குள் கொண்டு வந்து விடுவாள். அதன் பிறகுதான் அவளுக்கு ஓரளவாவது ஆறுதல். கமலாவின் போக்கும் முன்பு மாதிரியில்லை. பெரிதும் மாறித்தான் போய்விட்டாள். சாரதாவே வீட்டு வேலைகளையெல்லாம் கவனித்துக் கொண்டாள். எவ்வளவுதான் முற்போக்காய் இருந்தபோதிலும் கமலாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவளை அச்சம்பவம் பெரிதும் பாதித்து விட்டது.

எந்நேரமும் சிந்தனையில் மூழ்கியவளாகவேயிருந்தாள். ஒருகணம் “இனியும் நான் வாழ்வதில் என்ன பயன்?” என எண்ணுவாள். மறுகணமே “நான் சாவதால் மட்டும் பெண்களின். எம் தமிழ்ப் பெண்களின் அவலநிலை மாறிவிடுமா?” இவ்விதம் எண்ணமிடுவாள். ‘இதுவரையில் ஈஸ்வரனின் நினைவொன்றுடன் வீட்டிற்காக உழைத்தேன். ஆனால் இனிமேலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பழைய வாழ்வினில் என்னால் இறங்கவே முடியாது. பெண்களும் அக்கிரமங்களுக்கெதிரான போரில் ஆண்களுடன் சேர வேண்டிய காலம் வந்துவிட்ட்து’. முரண்பட்ட எண்ணப் போக்குகளுக்குள் சிக்கியவளாக அலைமோதிக் கொண்டிருந்த கமலாவின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக இருந்தது. இதே சமயம் சிங்கள இராணுவத்தினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருந்தன. நீண்டதொரு தற்காப்பு போர் முறையைப் பற்றியதொரு சிந்தனைக்குச் சகல தமிழர்களும் தள்ளப்பட்டிருந்தார்கள். உணர்ச்சி வெறியில் மேற்கொள்ளப்படும் சிங்கள இராணுவத்தினர் மீதான சிறுதாக்குதல்கள் ஏற்படுத்திய அழிவுகள் தமிழ் மக்களை விடுதலைப் போராட்டம் பற்றிய தீவிர சிந்தனைக்குத் தள்ளியது. பல்வேறு வகைப்பட்ட சித்தாந்த வேறுபாடுகளைக் கொண்டதாக விளங்கிய விடுதலை இயக்கங்களைப் பற்றி நன்கு புரிந்து எடை போடுவதற்கு முதன் முதலாக சகல தமிழர்களும் முயன்றார்கள். நாளுக்கு நாள் சீர்குலைந்து கொண்டுவந்த தமிழீழத்தின் நிலமை தமிழர்களை ஒற்றுமையின் அவசியம் பற்றியும் நீண்ட கால தற்பாதுகாப்புடன் கூடியதொரு போர்முறை பற்றியும் முன்னெப்போதையும் விட மிக அதிகமாகவே இப்போது சிந்திக்க வைத்தன.

Continue Reading →