நினைவுகளின் தடத்தில் – 12, 13, 14 & 15

- வெங்கட் சாமிநாதன் -– அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்‘ இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். – பதிவுகள் –


நினைவுகளின் தடத்தில் – 12

மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க வந்து சேர்ந்தவர்கள் அவர்கள். இரவு இரண்டு மணிநேரம் படிப்பார்கள். இது ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கே நடக்கும். பெற்றோர்களுக்கு தம் பையன்கள் எப்படியாவது கவர்ன்மெண்ட் பரிச்சையில் பாஸ் செய்யவேண்டும். பள்ளிப் பரிட்சையாக இருந்தால் கவலை இல்லை. ஒரு வருஷத்திற்கு இரண்டு வருஷன் ஒரு வகுப்பில் படித்துவிட்டுப் போகட்டும் கவலை இல்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்துப் பட்டி தொட்டிகளிலிருந்து வருபவர்கள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரகள். உள்ளூர் பையன்களோ, சிறு வியாபாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வத்தலக்குண்டுக்கு அனுப்பி ஹைஸ்கூலில் சேர்த்து அவன் படித்து என்ன கிழிக்கப்போகிறான். உள்ளூர்ப் படிப்பே போதும் என்று நினைப்பவர்கள். ஆனாலும் பாஸ் செய்து விடவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள். இந்த மூணு நாலு மாச ட்யூஷனை வைத்துக்கொண்டு மாமா படும் அவஸ்தை மிக பரிதாபமானது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது தான் அதன் பரிதாபம் மனதில் படுகிறது. என் ஞாபகத்தில் ட்யூஷன் சம்பளம் மாதம் ஒரு ரூபாய். அதை மாமா வாங்கப் பட்ட பாடு பெரும்பாடாக இருக்கும்.

Continue Reading →

நினைவுகளின் தடத்தில் (8, 9, 10, &11)!

- வெங்கட் சாமிநாதன் -– அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்‘ இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். – பதிவுகள் –


 

நினைவுகளின் தடத்தில் – (8)

அடுத்த நாள் காலையில் பரிட்சை. அப்போது இரவு மணி ஏழோ ஏதோ இருக்கும். படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சத்திரத்திற்கு உடனே ஒடிப்போய் தண்டபாணி தேசிகர் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் தனக்கு இருந்த பிரேமையைப் பற்றியும் அவரது வயலின் வாசிப்பில் தான் உருகியது பற்றியும் சொல்வதைக் கேட்க ராத்திரி பத்து பதினோரு மணி வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது எனக்கு மிக அவசியமாகியிருந்திருக்கிறது. இது சரியில்லை என்று எனக்கு படவில்லை. “படிடா, நாளைக்கு பரிட்சை” என்று திட்ட அப்பாவோ, மாமாவோ, யாரும் இல்லை அங்கு எனக்கு. நான் எது சரி, எனக்கு எது பிடித்தது என்று நினைத்தேனோ அதைச் செய்ய எனக்கு சுதந்திரம் இருந்தது, அதை அனுபவிப்பதில் சந்தோஷம் இருந்தது. பரிட்சையில் தோற்றிருந்தால் என்ன ஆயிருக்கும், என்ன நினைத்திருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை. அந்த மாதிரி தேர்வுகள் என் மனத்தில் ஓடியது என்றும் சொல்வதற்கில்லை.

நிலக்கோட்டையில் கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமா கல்யாணத்திற்கு அழைத்து வந்திருந்த சங்கீத வித்வான்கள் தங்கியிருந்த கூடத்திற்குச் சென்று அவர்கள் பேச்சையும் அரட்டையையும் கேட்டுக்கொண்டும், சாயந்திரம் கல்யாண பந்தலுக்குச் சென்று அவர்கள் பாடுவதையோ வாசிப்பதையோ இரவு வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டிருந்ததும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. அவர்கள் பேசியது புரிந்ததா, சங்கீதம் எனக்கு ஏதும் தெரியுமா ரசிக்க என்பதெல்லாம் விஷயமே இல்லை. அப்படிப் பொழுது போக்குவது, விசித்திரமாகவும், புதிதாகவும் சந்தோஷம் தருவதாகவும் இவையெல்லாம் இருந்தன, அன்றாட வண்டிச் சகடை உருளலிருந்து வேறு பட்ட ஒன்று கிடைத்ததில் சந்தோஷம்.

Continue Reading →