முன்னுரை
பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்:
ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை மதம், சாதி, இன கலாச்சார பண்பாடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான நிலையைத் தோற்றுவிக்கின்றன. உடல், உளம், உணர்வு நிலை, மொழி வயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு என ஒரு பெண்ணின் அத்தனை கூறுகளையும் இயக்கும் சூத்திரதாயாக ஆண்மையக் கோட்பாடே செயற்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம் என்னும் உணர்வின்றிப் பெண்கள் அதிகார மையத்துக்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நசுங்கி வாழ்ந்தனர்.
ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகவும், பெண் கல்வியின் தாக்கத்திலும் சமூகப் பொருளாதார, மத, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் பெண் மீதான மரபுசார்ந்த சமூகக் கட்டுமானம் தகா;க்கப்பட்டுப் பெண், பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபை 1975ம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பதினொரு ஆண்டுகளை அனைத்துலக மகளிர் ஆண்டாகக் கருதலாம்.
ஈழத்துப் பெண்ணிய எழுச்சி
ஈழத்துப் பெண் கவிதைகள் 1980 களுக்குப்பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணா;வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சார்நிலையின் மீள் உருவாக்கம் போன்றவற்றைக் கூறலாம். இக்காலக்கட்டத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், ‘நமது குரல்’ (ஜேர்மனி), ‘கண்’ (பிரான்ஸ்), ‘சக்தி’ (நார்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும், பெண்ணியக் கருத்துக்களை உள்வாங்கி வெளிவந்ததுடன் ஆளுமைமிக்க பெண்ணிலக்கியப் படைப்பாளிகளையும் ஈழத்திலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தன.