ஆய்வு: தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் – வாழ்வும் வரலாறும்

கவிஞர் வாணிதாசன்

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, அதன் நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலைக்கு வந்தடைகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்றழைக்கப்படும் கவிஞரேறு வாணிதாசன் என்னும் தனிமனிதன் தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கும் வகையில் பல்வேறு படைப்புகளை தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். அவற்றில், தான் வாழ்ந்த காலத்தின் மீது கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளையும், எதிர்கால சமூக மாற்றங்களையும் விரும்பி இலட்சிய நோக்கோடு பல உன்னத கருத்தாழமிக்க கவிதைகளை இனிமையும் எளிமையும் அமைந்த செந்தமிழ் நடையில் அழகுற படைத்தளித்துள்ளார். அவரது படைப்பின் வழி தமிழ்ச்சமூகமும் தமிழிலக்கியமும் அடைந்த பெரும் பயனையும், இன்னபிற சமூகசிந்தனைகளையும் வெளிக்கொணர்ந்து தமிழிலக்கியத்திற்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற எண்ணத்தில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் – வாழ்வும் பணியும்
கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் ‘அரங்கசாமி என்ற எத்திராசலு’ இவர்தம் புனைப்பெயர் ‘ரமி’ என்பதாகும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். இவர்தம் பெற்றோர் அரங்க திருக்காமு, துளசியம்மாள். இவரின் காலம் 22.7.1915 முதல் 7.8.1974. இவர், கவிஞரேறு, தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். கவிஞர் வாணிதாசன் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்த தொகுப்பில் இயற்கையைப் பற்றிய கருத்துக்கள் இவரின் பாடல்களில் மிகுதியாக காணப்பட்டதால் இவரை தமிழகத்தின் வேர்ட்;ஸ்வொர்த் என்று பாராட்டினார்கள். இந்த கவிதை தொகுப்பு பெரும்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மக்களிடம் பகுத்தறிவைத் தூண்டுவதே தன் பாடல்களின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பது இவருடைய மற்றுமொரு சிறப்பாகும்.

Continue Reading →

மரண அறிவித்தல்: தேவநாயகி சதாசிவம்பிள்ளை (ஆஸ்திரேலியா)

பதிவுகள்’ இணைய இதழ் மரண அறிவித்தல்கள்.

‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  ‘பதிவுகள்’ இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  ‘பதிவுகள்’ இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். ‘பதிவுகள்’ இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப்  Pay Pal மூலம்  ‘பதிவுகள்’ விளம்பரம்‘ என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும்.


மரண அறிவித்தல்: தேவநாயகி சதாசிவம்பிள்ளை (ஆஸ்திரேலியா)

மரண அறிவித்தல்கள்பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும் , ஆஸ்திரேலிய (Perth , Melbourne) னை வசிப்பிடமாகவும் கொண்ட தேவநாயகி சதாசிவம்பிள்ளை அவர்கள் 19.07.2017 புதன் கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சிவசுந்தரம், வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலம் சென்ற ராமசாமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,  காலம் சென்ற சதாசிவம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியாரும் ஆவார்.

ஜானகி (Melbourne), தேவகி (Perth), ஜெயராம் (Perth) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஸ்ரீஸ்கந்தராஜா (Melbourne)), நந்தகுமார் (Perth), ஜெயராம் (Perth), தணிகா (Perth) ஆகியோரின் அன்பு மாமியாரும், பிருந்தா (Perth) , சாயீசன் (Perth) , அவர்களின் அன்பு அம்மம்மாவும், பிரார்த்தி (Perth)   , பிறவீன் (Perth)  ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார். லோகநாயகி (Canada), இந்திராணி (Colombo), ராதாராணி (Vavuniya), காலம் சென்ற தேவசகாயம், காலம் சென்ற லோகசகாயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 253: பசுமை நிறைந்த நினைவுகள்: லெஸ்லி ரவிச்சந்திரா (leslie Ravichandra)

 லெஸ்லி ரவிச்சந்திரா (leslie Ravichandra)நண்பர் லெஸ்லி ரவிச்சந்திராவை பல வருடங்களுக்குப் பின்னர் அண்மையில்தான் ‘டொராண்டோ’வில் நடைபெற்ற ‘யுகதர்மம்’ நூல் வெளியீட்டின்போது கண்டேன். இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகக் கட்டடக்கலைத்துறையில் கற்றவர். இலங்கையிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பணியாற்றிப்பின் கனடா வந்திருந்தார். இங்கும் அத்துறையிலேயே வேலை பார்ப்பவர். இவர் பல்கலைக்கழகக்காலத்தில் நான் நன்கு பழகிய நண்பர்களிலொருவர். மட்டக்களப்பைச்சேர்ந்தவர். இவரைப்பாடச்சொல்லிக்கேட்டு இரசிப்பது எம் வழக்கம். இன்னுமொருவர் மோகன் அருளானந்தம். அவரும் மட்டக்களப்பைச்சேர்ந்தவர்தான். இருவருமே மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி முன்னாள் மாணவர்கள். மோகன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அவரும் நன்கு பாடுவார். இவர்களிருவருடன் இன்னுமொருவரும் நன்கு பாடுவார். அவர் எம்முடன் ஒன்றாகப் படித்த அமரர் சாந்தி சச்சிதானந்தன். எம்முடன் படித்த ஒரேயொரு தமிழ் மாணவி அவர். இவர்கள் மூவரையும் பாடங்களுக்கிடையில் ஓய்வாகவிருக்கும் சமயங்களில் பாடச்சொல்லிக்கேட்டு சுற்றியிருந்து இரசிப்போம்.

இவர் பாடும்போது அவ்வப்போது பாடல்களின் வசனங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிப்பாடிக் கலகலப்பூட்டுவார். உதாரணத்துக்கு நானூறு பூக்கள் என்று வந்தால் four hundred flowers என்று திடீரென மாற்றிப்பாடுவார். இவர் திறமையான விளையாட்டு வீரர் கூட. குறிப்பாக 100 மீற்றர் ஓட்டப் போட்டியென்றால் முதலில் வருவார்.

இவர் மிகவும் திறமையான நடிகர். பாலேந்திராவின் இயக்கத்தில் பல தடவைகள் மேடையேற்றப்பட்ட ‘யுகதர்மம்’ நாடகத்தின் பிரதான பாத்திரமான வியாபாரி வேடத்தில் நடித்தவர் இவரே. அக்காலகட்டத்தில் அந்நாடகம் பற்றி வெளியான ‘யுகதர்மம்’ பற்றிய நாடக விமர்சனங்களில் இவரது நடிப்பைப்பாராட்டி வெளிவந்த குறிப்புகள் இவரது நடிப்புத்திறமைக்குச் சான்று. ‘யுகதர்மம்’ நூலிலும் அவ்விமர்சனங்களில் சில வெளியாகியுள்ளன.

Continue Reading →

பயணியின் பார்வையில் : எல்லாம் கடந்துசெல்லும் வாழ்வில், சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். பெறாமக்களுடன் கழிந்தபொழுதுகளும் போர்க்கால துயரங்களும்.

எழுத்தாளர் முருகபூபதிநெல்லியடி பஸ் நிலையத்திலிருந்து  அச்சுவேலிக்குப்  புறப்படும்போது, ” அடுத்து எங்கே செல்கிறீர்…?” எனக்கேட்டார் நண்பர் கேதாரநாதன்.

” அச்சுவேலியில் எனக்கு ஒரு பெறா மகள் இருக்கிறாள். அவளுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. என்னால் வரமுடியவில்லை. தற்பொழுது அவள் தாய்மையடைந்துவிட்டாள். பார்த்து வாழ்த்தவேண்டும்.  உபசரிக்கவேண்டும்” என்றேன்.

” இன்றும் நாளையும் உறவுகளைத்தான் தேடிச்செல்வதற்கு நேரம் ஒதுக்கியிருக்கின்றேன். பயணங்களில் நான் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களைத்தான் பார்த்துவிட்டு திரும்புகின்றேன். உறவுகளைப்பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை எனது வீட்டில் குடும்பத்தினர் எனக்கு சுமத்துகின்றனர். சொந்தம் எப்போதும் தொடர்கதைதானே… அதனால் சொந்தங்களுக்காகவும் நேரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது” என்று மேலும் விரிவாக நண்பரிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.

குறிப்பிட்ட அச்சுவேலி  பெறாமகள், எனது மனைவியின் அக்கா மகள். இங்கும் ஒரு கதை இருக்கிறது. 1987 இல் வடமராட்சியில் லலித் அத்துலத் முதலி காலத்தில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷனில் அந்த அக்கா கொல்லப்பட்டார். அவர் பருத்தித்துறை வேலாயுதம் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது மூன்று பெண்குழந்தைகளுடன் வரும்போது பொம்மர் தாக்குதலில் படுகாயமுற்றார். குழந்தைகளுக்கும் காயம். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் தாயின் உயிர் பிரிந்தது. அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல்தான் உடனிருந்து உதவிகள் செய்ததாக பின்னர் அறிந்தேன். அந்தக்குழந்தைகளின் சித்தியான எனது மனைவி,  எங்கள் பெறாமக்களையும் இம்முறை அவசியம் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தித்தான் என்னை வழியனுப்பினாள். அந்த மகள் தற்போது ஒரு பொறியியலாளரை மணந்து  யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கியில் பணியாற்றுகிறாள். அந்த முன்னிரவு வேளையில் தனது கணவருடன் எனக்காக அச்சுவேலியில் காத்திருந்தாள் அந்தப்பெறா மகள்.

Continue Reading →