மரண அறிவித்தல் : மருத்துவக் கலாநிதி சுரேஷ் இரட்னேண்ஸ்வரன் (07.04.1970 – 18.07.2017)

பதிவுகள்’ இணைய இதழ் மரண அறிவித்தல்கள்.

‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  ‘பதிவுகள்’ இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  ‘பதிவுகள்’ இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். ‘பதிவுகள்’ இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப்  Pay Pal மூலம்  ‘பதிவுகள்’ விளம்பரம்‘ என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும்.


மரண அறிவித்தல்: மருத்துவக் கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன் (ஆஸ்திரேலியா)

அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் கீலோர்டவின்ஸ்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மருத்துவக் கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன் அவர்கள் கடந்த 18ஆம் திகதி (18.07.2017) அவுஸ்திரேலியா மெல்பர்னில் அகால மரணமடைந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 254: கறுப்பு ஜூலை 1983 நினைவாக – ஒரு புகைப்படமும், ஒரு கவிதையும் & ஓர் ஓவியமும் மற்றும் இரு கட்டுரைகளும்!

ஓவியர் புகழேந்தியின் கறுப்பு ஜூலை 1983 பற்றிய ஓவியம்.கறுப்பு ஜூலை 1983: கோர முகம்கறுப்பு ஜூலை அஞ்சலிஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1958, 1977, 1983 இனக்கலவரங்கள், 2009 நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரழிவுகள் எல்லாம் இரத்தக் கரை படிந்த அத்தியாயங்கள். இவற்றுகிடையிலும் அவ்வப்போது தமிழ் மக்கள் மீது இனரீதியிலான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. படையினரின் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. புகழ்பெற்ற யாழ் பொதுசன நூலகம் எரிபட்டிருக்கின்றது. இவற்றில் 1983 யூலையில் நடைபெற்ற இனக்கலவரமும், சிறைச்சாலைப் படுகொலைகளும் அதுவரை உள்நாட்டுப்பிரச்சினையாகக் கருதப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரச்சினையை உபகண்டப்பிரச்சினையாக, சர்வதேசப்பிரச்சினையாக மாற்றி வைத்தன. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை வீறுகொள்ள வைத்தன. இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை அகதிகளாக உலகின் பல நாடுகளையும் நோக்கிப்படையெடுக்க வைத்தன.

இக்கலவரத்தின் குறியீடாக இருக்கும் இந்தப்புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சில் நெஞ்சில் இனம் புரியாத வேதனை பரவும். கூனிக்குறுகி அடிபணிந்து மரணத்தின் முன்னால் ஒடுங்கி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஓரினத்தின் நிலையினை வெளிப்படுத்தும் குறியீடு. கறுப்பு ஜூலையின் கோர முகத்தின் வெளிப்பாடு.  இந்தப் புகைப்படத்தினை எடுத்தவர் ஒரு சிங்களவர். சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. மைக்கல் றொபேர்ட்ஸ் (Michael Roberts) எழுதிய கட்டுரைகள் மூலம் இந்த உண்மை தெரிய வந்தது.

Continue Reading →