யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாழ் நீதிபதி இளஞ்செழியனைக் காப்பாற்றத் தன் உயிரைக்கொடுத்ததாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் சரத் ஹேமச்சந்திரா பற்றிச் செய்திகள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற முறையினைப் பார்க்கும்போது இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த சம்பவங்கள் எதிர்பாராமல் விரிவடைந்ததன் அடிப்படையில் நிகழ்ந்தது போல்தான் தெரிகிறது. இச்சம்பவத்தில் உடனடியாக நீதிபதி இளஞ்செழியனை நோக்கித்தான் துப்பாக்கி பாவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சகலரும் எண்ணும் நிலை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புங்குடுதீவி மாணவி வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதுதான். ஏன் இச்சம்பவம் நீதிபதியை நோக்கி நிகழ்த்தப்படவில்லை என்பதற்கான காரணங்களே அதிகமாகவுள்ளன.
ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜின் பத்திரிகைக் குறிப்பு இச்சம்பவத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது: “Seeing the group of arguing persons blocking the road, Sgt.Hemachandra got off the motor cycle and went towards the group asking them to clear the way for the Judge’s vehicle to pass. A heated exchange of words occurred between Sgt.Hemachandra and the drunken Jeyanthan. At one point Sgt.Hemachandra laid his hand on the pistol in his holster in a bid to scare Jeyanthan but did not pull it out. An enraged jeyanthan engaged in a scuffle with the Policeman who then pulled out the gun. But Jeyanthan suddenly gripped the pistol and tried to seize it. The High court judge Illanchelliyan saw what was happening and got out of the vehicle shouting at Jeyanthan “Vidadaa Pistol ai, Vidadaa pistol ai” ( Let go of the pistol) in Tamil. The other policeman sgt Wimalasiri got out of the vehicle and pushed Judge Illancheliyan back into the vehicle.” [Manhunt Launched in North for Killer of Policeman in Jaffna Shooting Incident; Suspect Identified as 39 Year old Ex-Tiger Selvarasa Jeyanthan of Nallur. By DBSJeyaraj– http://dbsjeyaraj.com/dbsj/archives/54396#more-54396]