பயணியின் பார்வையில் : “ சிங்கத் தமிழர் நாமென்றால் சிங்கக் கொடியும் நமதன்றோ ” எனக்கவிதை பாடியவரின் மனைவியின் இன்றைய நிலை! புதுவை இரத்தினதுரையின் பிறந்த திகதியை தெரிந்துவைத்திருக்கும் சிங்களப் புலனாய்வு எழுத்தாளர்…?!

மு.கனகராசன்” உங்களுடைய கையெழுத்து அழகாக  இருக்கிறது” என்றேன்.  “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான      புன்னகை.       பல  எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது  போன்று      அழகாக    அமையவில்லை   என்பது  என்னவோ  உண்மைதான். வேறு எந்தத்  தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத்    தொடங்கியவர்களின் வரிசையில்     இடம்    பெற்றவர்  மு.கனகராசன். இவர்       பணியாற்றிய   பத்திரிகைகள்   பல.       இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      நான்     அறிந்த வரையில்   மு.க.       என   எம்மால்  அழைக்கப்பட்ட    மு. கனகராசன், சுதந்திரன் – தேசாபிமானி – புதுயுகம் , தினகரன்  முதலான  பத்திரிகைககளிலும்   சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர்.  சிற்பி  சரவணபவனின்  கலைச்செல்வி,  செல்வராஜாவின்      அஞ்சலி   முதலான  இலக்கியச்  சிற்றேடுகளில்  வேலை     செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும்  மல்லிகை தொடர்பாக      அவ்வப்போது  ஆலோசகராக  இயங்கினார்.       மரணப்படுக்கையில்      விழுவதற்கு முன்னர் இறுதியாக       தினகரனில்  வாரமஞ்சரியை  கவனித்துக்கொண்டிருந்தார். கவிதை, சிறுகதை , நாடகம், மொழிபெயர்ப்பு,  இதழியல்  முதலான துறைகளில்       ஈடுபாடு      கொண்டிருந்த  மு.க  சிறிது காலம்    சோவியத் தூதுவராலயத்தின்      தகவல் பிரிவிலும்    வேலை செய்தார்.  எழுத்தாற்றல்   மிக்க  இவரது படைப்புக்கள்  நூலாக வெளிவருவதில்தான்     எத்தனை  தடைகள்,  தடங்கல்கள்  ஏமாற்றங்கள். ‘கெமுனுவின் காதலி’  என்ற  சிறிய நாடக  நூலை அச்சுக்கூடத்திலிருந்து  பெறுவதற்கு முடியாமல் பொருளாதார  நெருக்கடியில்      தவித்தார். ‘முட்கள்’      கவிதை    நூலிற்கு   பேராசிரியர்    க.கைலாசபதியின் முன்னுரையைப் பெற்று      அச்சடித்து       ஒப்புநோக்கப்பட்ட    படிகளை  மாத்திரம்      சுமார்     ஒரு   வருடகாலம்     கொண்டலைந்து இறுதியில்   ஒருவாறு      அச்சிட்டு   வெளியிட்டார். ‘பகவானின்   பாதங்கள்’  கதைத் தொகுதியும்  பல  சிரமங்களுக்கு  மத்தியில்  வெளியானது. இந்தத்தொகுப்பு  சற்று வித்தியாசமானது.      இதில் இடம்பெற்ற  ஒவ்வொரு     சிறுகதை பற்றியும்      அதனைப்படித்தவர்கள்     எழுதிய   நயப்புரையையும்   இணைத்து நூலை  தொகுத்திருந்தார்.

“சிங்கத்      தமிழர்    நாமென்றால்      சிங்கக்     கொடியும்     நமதன்றோ” என்று  துணிச்சலாக   கவிதையும்   எழுதிய மு.க.1983    இனவாத  வன்செயலின்போது   மனைவியுடன்  தமிழகம் சென்று – அண்ணா நகரில்  சிறிது காலம்  குடியிருந்தார்.” இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த படைப்பாளி, பத்திரிகையாளர் மு. கனகராசன் பற்றி எனது திரும்பிப்பார்க்கின்றேன் என்ற  தொடரில் ஒரு கட்டுரையை தொடங்கி, பின்வருமாறு அதனை  நிறைவுசெய்திருந்தேன். ” எப்பொழுதும்     விரக்தியாகச்    சிரிக்கும்     இயல்பினைக்    கொண்டிருந்த  மு.க. அறிவாலும்   ஆற்றலினாலும்  எங்கோ   உயர்ந்திருக்கவேண்டியவர்.  கரடு  முரடான மேடுபள்ளங்கள்      நிறைந்த  வரட்சியான  வாழ்க்கைப்பாதையை  அவராகத்  தேர்ந்தெடுத்தாரா   அல்லது  சூழல்  அவருக்கு   பூரண   விடுதலையை  கொடுக்கத்தவறியதா…? என்பது  அவிழ்க்க முடியாத  புதிர் முடிச்சு.

Continue Reading →

தொடர்நாவல்: வன்னி மண் (6 – 9)

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.

அத்தியாயம் ஆறு: புயல் தந்த நண்பர்கள்!

இந்தப்புயலினால் ஏற்பட்ட முக்கியமான மாற்றம், சிலாபம் நீர்க்கொழும்பு பகுதிகளிலிருந்தெல்லாம் தமிழர்கள் பெருந்தொகையாக வந்து குடியேறத் தொடங்கிவிட்டார்கள். காட்டை அழிக்கும் வேலையைப் புயல் ஏற்கனவே செய்துவிட்டிருந்தது. குடியேறுவதற்குப் பெரிதும் துணையாக விருந்தது. எங்கள் வீடுகளைச் சுற்றி ஆங்காங்கே குடிசைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதுவரை காலமும் மனித நடமாட்டம் குன்றித் தனிமையிலிருந்த குருமண் காட்டுப் பிரதேசத்தின் நிலைமை மாறிவிட்டது. புதிய மனிதர்களின் வரவு அப்பகுதிக்குக் கலகலப்பை ஏற்படுத்திவிட்டது. அப்படி வந்தவர்களில் சிலரும் உண்மையில் கலகலப்பானவர்களாகத்தானிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆறுமுகம். ஆறுமுகம் குடும்பம் நீர்க்கொழும்புப் பகுதியிலிருந்து வந்திருந்தது. ஆறுமுகத்திற்கு ஐந்து பிள்ளைகள்; இரண்டு பெண்கள். மூன்று ஆண்கள். மூத்த பெண்ணைத் தவிர மற்றெல்லோரும் ஏறத்தாழ எங்கள் வயதை ஒத்தவர்கள். இந்தப்புயலால் வந்த இன்னுமொரு இலாபம் எமக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.