பூங்காவனம்’ சஞ்சிகை கையளிப்பு!

தென் இந்திய இசையமைப்பாளர் ஜனாப். தாஜ்நூர் அவர்களுக்கு எழுத்தாளர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ‘பூங்காவனம்’ காலாண்டு இலக்கிய சஞ்சிகை வழங்குவதையும், ‘பூங்காவனம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம…

Continue Reading →

ஆய்வு: சிவப்பிரகாச சுவாமிகள் அருளித்தந்தார் நன்னெறி

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்கம் மருவிய காலத்தின் பின்தான் நீதி இலக்கியங்கள் எழுந்தன. பல நீதிநூல்களைத் தமிழில் குழந்தைகளுக்காக எழுதிப் படைத்தவர்களில் முன்னிலையில் நின்றவர் ஒளவைப் பாட்டியாவார். அவர் வழியில் நின்று செயற்பட்டோர் பலராவர். அவர்களில் ஒருவர் சிவப்பிரகாசர் என்னும் தமிழ்ப் புலவராவர். இவர் காஞ்சிபுரம் வேளாளர் மரபினருக்குக் குருவாக விளங்கிய குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாக 17ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே தமிழில் புலமை பெற்று விளங்கியதோடு கவிதை இயற்றும் திறமையும் பெற்றிருந்தார். இவர் இல்வாழ்க்கையில் ஈடுபடாது துறவறத்தை மேற்கொண்டவர். தாமிரவருணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றுத் தேர்ந்தவர். இவரைச் சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்களம் சிவப்பிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவானுபதிச் செல்வர், சைவசித்தாந்திப் புலவர், மெய்நூல் அறிஞர், அரங்கப் புலவர் ஆகிய பெயர்களைக் கொண்டு அழைப்பர். இவர் 34 நூல்களுக்கு மேற்பட எழுதியுள்ளார். இவர் தனது 32ஆம் வயதில் சிவபதம் அடைந்தார். இனி, சிவப்பிரகாச சுவாமிகள் அருளித் தந்த நன்னெறி நூலில் காட்டப்படும் கடவுள் வாழ்த்துத் தவிர 40 பாடல்களில் அமைந்த நல்ல நெறிகளை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.

கடவுள் வாழ்த்து:- நன்னெறியின் நூலாசிரியர் சிவப்பிரகாச சுவாமிகள் மரபுவழி நின்று, வினாயகப் பெருமானை வணங்கி, நூலின் 40 நன்னெறிப் பாடல்களையும் பாடி முடித்தார்.

‘மின்எறி சடாமுடி வினாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!’

பூங்கை நாவிற்கு ஊட்டும் உணவு:- அந்த அழகிய பூங்கையானது எதிப்பார்ப்பு ஒன்றும் கருதாது, சுவை மிக்க உணவை எடுத்து நாவிற்கு ஊட்டி விடுகின்றது. இதே போன்று தீதற்ற பெரியோர் தம்மை உபசாரமொழிகள் கூறிப் புகழாதவர்களுக்கும் விருப்புடன் பொருள் கொடுத்து உதவுவர் என்று பாடல் அமைத்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.

Continue Reading →

நிகழ்வுகள்: வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடுஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் கோவை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டன. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவனரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில்   வெளிப்படுத்தி வருகிறார். சமூகச் சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை அவரின் நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இலக்கிய ரசனை என்பதை மீறி சமூகச் சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது   என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும்.உழைக்கும் பெண்கள், அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை , அவர்களுக்கான மீட்சிகளைப் பற்றி தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் பேசுகிறார்.

Continue Reading →