Statements by the Prime Minister of Canada on Sri Lanka

The Canadian PM Justin Trudeau -Accountability needed in Sri Lanka – Canadian PM Justin Trudeau

July 24, 2017  – The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the anniversary of Black July:
“Between July 24 and 29, 1983, anti-Tamil pogroms were carried out in Colombo and other parts of Sri Lanka resulting in thousands of deaths and the displacement of countless victims. Today, we join Canadians of Tamil descent and members of the Tamil community to commemorate the 34th anniversary of the events of Black July. As we pause to reflect on the dark days of the Sri Lankan Civil War, we must continue to work to heal the wounds of all those who suffered. Canada welcomes international efforts underway to achieve long-term reconciliation and peace for all Sri Lankans, but we reiterate the need to establish a process of accountability that will have the trust and the confidence of the victims of this war. Canada’s cultural diversity is one of our greatest strengths and sources of pride. As we mark the 150th anniversary of Confederation, let us take the time to recognize the contributions of all who have made Canada their home regardless of their cultural, religious or linguistic background. On behalf of the Government of Canada, I extend my deepest sympathy and support to all those who have suffered immeasurable loss during the Sri Lankan Civil War.”

http://www.adaderana.lk/news/42123/accountability-needed-in-sri-lanka-canadian-pm-justin-trudeau

Continue Reading →

சிறுகதை: மான்ஹோல் ! – வ.ந.கிரிதரன் –

சிறுகதை: மான்ஹோல்  - வ.ந.கிரிதரன் -– இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான ‘அமெரிக்கா’த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. –


ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. “கொட் டோக்” (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்’தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், ‘சிக்கிட்ஸ்’ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்’ என்றேன் ‘பார்த்தாயா காலத்தின் கூத்தை. ‘

‘காலத்தின் கூத்தா…’ ‘காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன’

சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.

நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில ‘கஸ்டமர்’கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.

‘ஹாய். எப்படியிருக்கிறாய் ‘சீவ் (Chief)’ வென்றேன்.

‘பிரிட்டி குட் மான். நீஎப்படி’ யென்றான்.

‘எனக்கென்ன. நான் எப்பொழுதுமே ஓ.கே.தான்’ என்று விட்டுச் சிரித்தான். அருகிலிருந்த சாமியும் சிரித்தான்.

Continue Reading →

சிறுகதை: மான்ஹோல் ! – வ.ந.கிரிதரன் –

சிறுகதை: மான்ஹோல்  - வ.ந.கிரிதரன் -– இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான ‘அமெரிக்கா’த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. –


ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. “கொட் டோக்” (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்’தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், ‘சிக்கிட்ஸ்’ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்’ என்றேன் ‘பார்த்தாயா காலத்தின் கூத்தை. ‘

‘காலத்தின் கூத்தா…’ ‘காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன’

சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.

நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில ‘கஸ்டமர்’கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.

‘ஹாய். எப்படியிருக்கிறாய் ‘சீவ் (Chief)’ வென்றேன்.

‘பிரிட்டி குட் மான். நீஎப்படி’ யென்றான்.

‘எனக்கென்ன. நான் எப்பொழுதுமே ஓ.கே.தான்’ என்று விட்டுச் சிரித்தான். அருகிலிருந்த சாமியும் சிரித்தான்.

Continue Reading →

பயணியின் பார்வையில் : “காற்று வாங்கப்போனேன் ஒரு செய்தி வாங்கி வந்தேன்”- இலங்கையில் மூத்த பத்திரிகையாளரின் அனுபவமும் கப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் வார்த்தைகளும் ,கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பில் கலந்துரையாடலும்! – முருகபூபதி –

எழுத்தாளர் முருகபூபதிஇந்த அங்கத்தை ஒரு சொல்ல மறந்த கதையுடன் ஆரம்பிக்கலாம். தென்னிலங்கையிலிருந்து பலவருடகாலமாக  வெளியாகிறது அந்தப்பத்திரிகை. ஒரு இந்தியத்தன வந்தரினால்  தொடங்கப்பட்டு காலப்போக்கில்  பல  தனவந்தர்களின் பங்குடன் வளர்ந்து, பலதரப்பட்ட  வர்த்தகத்துறை  செல்வந்தர்களிடம் கைமாறிச்சென்று ஒரு கால கட்டத்தில் அரச மற்றும்  அரசியல் கட்சிகளின் மட்டத்திலும் செல்வாக்குச்செலுத்தி,  இலங்கை  வர்த்தகத்துறையில் தேர்ந்த ஞானமும்  பெற்றவரின் தலைமைப்பொறுப்பிற்கு வருகிறது அந்தப்பத்திரிகை. ஒரு காலகட்டத்தில் அவருக்கு,  அந்தப்பத்திரிகை ” இன்னாரின் பத்திரிகை ” என்ற பெரும் புகழுக்கும் அப்பால், தமிழ்  மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்ற ஊடகம் என்பதிலும் பெருமிதம் நீடித்திருந்தது. உலகவங்கியும் அவரது இதர வர்த்தகத்துறைகளின் அபிவிருத்திக்கு  கடன் வழங்குவதற்கு முன்வந்திருந்தது.

அந்தப்பத்திரிகையில்  இடதுசாரி சிந்தனையுள்ள  ஒரு பத்திரிகையாளர் பராளுமன்ற நிருபராக  நீண்ட காலம்  பணியாற்றினார். அவர் அந்த நிருவாகத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கும் பின்னின்று உழைத்திருந்தவர். அதனால், வர்த்தக ஞானம் மிக்கவரான அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் தலைவருக்கு  குறிப்பிட்ட  இடதுசாரியின் மீது ஒரு கடைக்கண் பார்வை இருந்தது. பாராளுமன்றில் ஒரு விவாதம் வந்தபோது இனக்குரோதம் கக்கும் ஒரு அரசியல்வாதி, ” அரசாங்கமும்  உலகவங்கியும் குறிப்பிட்ட வர்த்தக பிரமுகருக்கு மறைமுகமாக  உதவிவருகிறது”  என்று சொல்லிவிட்டார். அத்துடன் அந்தப் பிரமுகரின் குலத்தையும் இழுத்துப்பேசிவிட்டார். குறிப்பிட்ட  பத்திரிகையாளரும் அந்தச்செய்தியை  பத்திரிகையில் எழுதிவிட்டார். செய்தி வெளியான பத்திரிகையின் பிரதி வழக்கம்போல் காலைவேளையிலேயே அதன் உரிமையாளரான பிரமுகரின்  வாசஸ்தலத்திற்கு  சென்றுவிட்டது. அவர் காலையில் எழுந்ததும் அருகிலிருக்கும் கடற்கரையோரமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்.  நடைப்பயிற்சியின்போது   அன்று காலையில்  அவர்  வாசித்த  அவர் பற்றிய  செய்திதான்  மூளையை குடைந்திருக்கிறது. உண்மையிலேயே அந்த இனக்குரோத  அரசியல்வாதி அப்படித்தான் பேசியிருப்பாரா..? என்ற கேள்விதான் அவரது சிந்தனையில் ஊடுறுவியிருந்தது. அன்று காலை தமது மற்றும் ஒரு அலுவலகம் வந்ததும், தனது செயலாளரை பாராளுமன்றம் அனுப்பி, பாராளுமன்ற பதிவேட்டினை (ஹன்சார்ட்) எடுத்துவரச்செய்து பார்த்தார். அதில் தமிழ் வர்த்தகர் என்றுதான் இருந்ததே தவிர அவரது குலம் பற்றி எதுவும்  இல்லை. அப்படியானால், குறிப்பிட்ட பத்திரிகையாளர் வேண்டுமென்றே தன்னை இழிவுபடுத்திவிட்டார் என நினைத்துக்கொண்டு,  அவரிடம் விளக்கம் கோருமாறு பிரதம ஆசிரியரிடம் வலியுறுத்தினார். செய்தித்துறையில் ஆற்றல் மிக்க அந்த இடதுசாரி பத்திரிகையாளருக்கு  ஆபத்துவரப்போகிறது என்பதை தெரிந்துகொண்ட  ஆசிரியரும்  சாதுரியமாக நடந்துகொண்டார். குறிப்பிட்ட  அரசியல்வாதியை தொடர்புகொண்டு, ” நீங்கள் அவ்வாறு உரையாற்றினீர்களா..? எனக்கேட்டு உறுதிசெய்துகொண்டார். அவரும் “ஆமாம்”  என்றார்.    “ஆனால், பாராளுமன்ற பதிவேட்டில் அவ்வாறு இல்லையே என்றதும். ” அப்படியா…? நான் மீண்டும்  இதனையும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டி  மீண்டும் பேசுகின்றேன்”  என்றார். அவ்வாறே மீண்டும்  பேசினார். இதிலிருந்து  சில உண்மைகள் தெளிவாகின்றன.

Continue Reading →

நபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு – வெலிகம ரிம்ஸா முஹம்மத் –

'நபிகள் நாயகம்' எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது. ‘நபிகள் நாயகம்’ எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது.

முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் வெளியீடான இந்நூலுக்கு கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் தொகுப்பாசிரியராகவும் கவிஞர் ஏ.எம். கஸ்புள்ளா உதவியாளராகவும் இருந்து நெறிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் தொகுப்பாக்க ஆலோசனை கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி, பிரதம நூலகர் எம்.ரீ. சபருள்ளாக்கான் போன்றோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கவிஞர்களின் கவிதைகள் ஒன்றுதிரட்டப்பட்டு நூலுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இதில் சகோதர இனத்துக் கவிஞர்களது கவிதைகளும் இடம்பெற்றிருப்பதானது இந்நூலின் மதிப்பினை மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது.

இந்நூலுக்கு கணிப்புரை வழங்கியுள்ள கவிஞரும், விரிவுரையாளருமான எப்.எச்.ஏ. ஷிப்லி ‘உலக மக்களால் அறிவிலிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அரேபிய பாலைவனப் பூமியில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்நிலையை அடைய முடிந்தது எப்படி? என்ற கேள்விக்கான விடையை இந்நூலில் நீங்கள் பெறலாம்’  மேலும் ‘நபிகள் நாயகம் போன்று ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்? நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அப்படியே இன்றும் பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விக்கான விடைகளும் கவிதை வடிவில் இந்நூல் எங்கும் விரவிக் கிடக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading →

இலக்கிய அநுபவ அலசல் – 14

அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!– வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘பூங்காவனம்’ சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் ‘இலக்கிய அனுபவ அலசல்’ தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள்  –


இலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.

01
1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ”மனக்கண்” என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.

”உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது” என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள்,  நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட வைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும்.

Continue Reading →