தொடர்நாவல்: புதிய பாதை (‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ ) (4-6) – வ.ந.கிரிதரன் –

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]

அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!

அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள்.  அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று  மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம்.  அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான்.  அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு  இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும். இதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அவனை அவள் மாற்றப் போகின்றாள். அந்த உறைதலை அவள் உருக்கப் போகின்றாள். அந்த மெளனத்தைக் கலைய வைக்கப் போகின்றாள். அவனையும் பேச வைக்கப் போகின்றாள். கலகலப்பானவனாக, துடிதுடிப்பு மிக்கவனாக ,  அவனை உருமாற்றிடப் போகின்றாள். இதற்கு ஒரு வழி …. அவனைச் சீண்டி விளையாடிடப் போகின்றாள். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி, உருகுவதிலுள்ள அர்த்தமற்ற தன்மையை அவனுக்கு போதிக்கப் போகின்றாள். இவ்விதமானதொரு முடிவுடன்தான் அவள் அன்று வந்திருந்தாள்.

‘ஹாய்…’ என்று அவனை அழைத்த விதத்தில் அவளது எண்ணத்தின் தீர்க்கம் மறைந்திருந்தது. பரிசோதனை செய்யப்போகும் ஒரு விஞ்ஞானியின் ஆவல் அதில் ஒளிந்திருந்தது.

‘வட் அ பியூட்டிபுஃல் டே’ என்றாள். அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள்.  அவர்களது இதுவரை காலமான நட்பின் விளைவாக இருவருமே ஒருவருடன் ஒருவர் நீ, நான் என்று ஒருமையில் கதைக்குமளவுக்கு நெருங்கியிருந்தார்கள்.

அவனது கண்களையே சிறிது நேரம் உற்று நோக்கினாள்.

Continue Reading →

தொடர்நாவல்: புதிய பாதை (‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ ) (1 – 3) – வ.ந.கிரிதரன் –

அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் …

‘தோர்ன்கிளிவ் பார்க்’…  ‘டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில்  அமைந்திருந்த பகுதி. ‘ஷாப்பிங் மால்’ , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், ‘டொராண்டோ டவுண் டவு’னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி.  அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான்.  அவனது மாமா மகனின் ‘அபார்ட்மென்ட்’.

தனிமையான பொழுதுகளைத் துருவித் துருவி ஆராய்ந்து , புரியாத காரணங்களுக்கு அர்த்தங்களைத் தேடுவதில் தாகமெடுத்துக் கிடக்கும் மனதின் அலைச்சலில் கழிந்து கொண்டிருந்தன பொழுதுகள் ….

கடைசியாகச் செய்துகொண்டிருந்த தொழிற்சாலை வேலை ‘லெய்ட் ஓஃப்’ ஆனதிலிருந்து  கடந்த ஆறு மாதங்களாக ‘அனெம்பிளாய்மென்ட்’டில் ஓடிக்கொன்டிருந்தது வாழ்க்கை.  கடந்த நான்கு மாதங்களாக மாலை நேரங்களில் அந்தப் ‘பார்க்கி’லேயே பெரும்பாலும் அவனது பொழுது போய்க்கொண்டிருந்தது. மாமா மகன் ‘போஸ்ட் ஆபிஸ்’இல் வேலை செய்து கொண்டிருந்தான். விரைவில் அவனும் திருமணம் செய்யவிருக்கிறான். அதற்குப் பிறகு வேறிடம் பார்க்க வேண்டியதுதான்.

பார்க்கில் நன்கு இருண்டு விட்டதும் அப்படியே படுத்துக் கிடப்பான். விரிந்திருக்கும் ஆகாயத்தில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, உருமாறிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பான். பார்க்கில் நடமாட்டம் குறைந்து அமைதி பூரணமாகக் குடிகொன்டிருக்கும்போதும் அவன் படுத்திருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டான். இடைக்கிடை ‘பட்ரோலி’ற்காக வரும்  பொலிஸ்காரும் சற்றுத் தொலைவில் நோட்டம் விட்டுச் செல்லும்.