தொடர் நாவல்: வன்னி மண் (14 -18) – வ.ந.கிரிதரன் –

‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.

அத்தியாயம் பதினான்கு: காட்டில் கரடி!

காடு ஆரம்பமாகும் இடம் வந்தது. ஒற்றையடிப் பாதை தெரிந்தது. குமரன் பகடியாகக் கூறினான்.

“டே ராகவா. நல்லா ஒருக்கா ஆசை தீரத் திரும்பிப் பார்த்துக்கோ. காட்டுக்குள்ளை போனால். வரும் வரைக்கும் ஊரையோ மனிசங்களையோ பார்க்க முடியாது”

ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். அப்பொழுதுதான் முதன் முறையாக ஒருவித திகில் படர்ந்த உணர்வு நெஞ்சை வெட்டியோடியது. பயணத்தின் யதார்த்தம் புரிந்தது. காடு, பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் காடு! எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் செல்கின்றோம். திரும்பி வருவோமா. ஒரு கணம் தான்! மறுகணமே நெஞ்சில் ஆர்வம் குடிகொண்டு விட்டது. புதியனவற்றைப் பார்க்கப் போகின்றோமே என்று சந்தோஷம் பரவியது. ஒருவித எதிர்ப்பார்ப்புடன், ஒருவித களிப்புடன் விரிந்திருந்த காட்டை ஊடறுத்த ஒற்றையடிப் பாதையினுள் காலடியெடுத்து வைத்தோம். மனித சஞ்சாரமேயற்ற புதியதோருலகினுள் மெல்ல நுழைந்து கொண்டோம். திரும்பின பக்கமெல்லாம் மரங்கள். பெரிய சிறிய, ஓங்கிய, வீங்கிய, மரங்கள், ‘மிக்க நலமுடைய மரங்கள், பல விந்தைச் சுவையுடைய கனிகள். நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள். மதி வஞ்சித்திடு மகழிச்சுனைகள். முட்கள் மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்” மலிந்த திக்குத் தெரியாத காடு. காலையிளஞ் சூரிய ஒளியினை பெருவிருட்சங்கள் மறைத்து விட்டன. இலேசாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பல்வேறு விதமான பறவைகளின் கீச்சொலிகள். இடையிடையே காற்றிலசையும் இலைகளின் ஓசைகள். தொலைவிலெங்கோ தாவிய மந்திகளின் ஒலிகள். இவை தவிர ஒருவிதமான மோன அமைதியெங்கும் பரவிக்கிடந்தது.

Continue Reading →

ஆய்வு: சொல் உருவாக்கத்தில் சாதியம் – முனைவர் ஞா.குருசாமி –

- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -சொற்கள் ஒவ்வொன்றும் வெறும் எழுத்துகளின் கூட்டமைவு மட்டுமல்ல. அவற்றுக்குள் நுணுக்கமான வரலாறு ஒளிந்திருக்கிறது. சற்று ஆழ்ந்து உற்று நோக்கும் போது சொற்களுக்கு உள்ளான புரிதலை வரலாறு என்பதோடு மட்டும் நிறுத்தி விட முடியவில்லை. சமநிலைச் சமூகத்திற்கு எதிரான சாதிக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி பல சொற்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. எல்லாச் சொற்களுக்குள்ளும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சொற்பகுப்பு பெயர், வினை, இடை, உரி என விரிந்த தளத்தினுடையதாக இருப்பதால் சொற்களின் பின்புலப் புரிதலை முழுமையான வகை, தொகை ஆய்வுகளுக்குப் பின்னரே வரையறுத்து இனங் காணமுடியும்.

சமூக அமைப்பு அதிகாரமும,; பொருளும் பரவலாகி விடக்கூடாது என்ற நுணுக்கமான சிந்தனைசார் சாதியத்தில் தோய்ந்து இருக்கிறது. கட்டமைக்கப்பட்ட காலம் தொட்டே அதிகாரத்தையும,; பொருளையும் பரவலாகச் செய்யவிடாமல் தடுத்தே வந்த சாதியம், காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளவும் தவறவில்லை. எண்ணும் எழுத்தும் (கல்வி) சமீப காலம் வரை பிராமணர்களிடமும,; ஆதிக்கச் சாதியினரிடமும் இருந்து வந்தது. இவர்களிடம் இயல்பாக இருந்த ஆதிக்கக்குணம் இவர்களின் கையில் இருந்த கல்வியிலும் இருந்தது. குருகுலக் கல்விப் போதனையை வெறுமனே கல்விப் போதனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்து, அவர்களுக்கு மட்டும் கல்வி புகட்டிய குருக்களின் எண்ணம், புத்தி ஆகியவையும் கல்வியாகப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம், பொருள் ஆகியவற்றைப் பரவலாக விடாமல் தடுத்த சாதியச் சமூகத்தில் கல்வியின் மூலம் தன் சுகபோக வாழ்வைத் தக்கவைத்துக் கொண்ட குருக்கள், சொற்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். இத்தகு சூழலில் தான் சாதியக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி சொற்களுக்குள் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்தப் புரிதலோடு சொற்களை அணுகும் போது சில உண்மைகள் வெளிப்படலாம்.

‘கிழக்கு’ என்ற சொல் சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவே தமிழகத்தின் நிலம் என்பதால் மேற்கு மேடானதாகவும் கிழக்கு கீழானதாகவும் இருக்கிறது. மேட்டில் (மேற்கு (அ) மலை) பெய்கின்ற மழைநீர் கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது என்ற கற்பிதம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. ‘கிழக்கு’ என்ற சொல் சாதியப் புரிதலில் ‘தாழ்ந்த’ என்னும் பொருண்மையில் உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ : லெனின் விருது – 2017

நண்பர்களே, சுயாதீன திரைப்பட கலைஞர்களை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோவால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் லெனின் விருது வழங்ம் விழாவிற்கான அழைப்பிதழை இத்துடன் பகிர்ந்திருக்கிறோம். வருகை புரிந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது வெறுமனே விருது மட்டுமல்ல, இந்திய சினிமாவின் மிக போற்றுதலுக்குரிய கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கலை, கலாச்சார பரிவர்த்தனை மேற்கொள்ளும் மிக முக்கிய நிகழ்வு. சென்ற ஆண்டு அனுராக் காஷ்யப் வந்திருந்தார். இந்த ஆண்டு மலையாள சினிமாவின் முன்னோடி இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் சென்னை வருகிறார். வாருங்கள் மலையாள சினிமா குறித்தும் உரையாடுவோம். சுயாதீன கலைஞர்களை போற்றுவோம்.

Continue Reading →

அஞ்சலி: ‘அருவி’ பாபு பரதராஜா மறைவு!

'அருவி' பாபு பரதராஜா‘டொராண்டோ’ கலை, இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாபு பரதராஜா இன்று (08-08-2017) மறைந்த செய்தியை முகநூல் தாங்கி வந்தது. பாபு பரதராஜாவின் பங்களிப்பு பற்றிய தேடகம் அமைப்பு வெளியிட்ட முகநூற் செய்தியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். கனடாக் கலை, இலக்கிய வரலாற்றில் நடிகராக, அருவி நிறுவனம் மூலம் ‘யுத்தத்தைத் தின்போம்’ கவிதைத்தொகுப்பையும், ‘காற்றோடு பேசு’, மற்றும் ‘புலரும் வேளையிலே’ இசை இறுவட்டுகளையும் வெளியிட்டதன் மூலம் பதிப்பக நிறுவனராக, மனவெளி கலையாற்றுக் குழுவைத் தன் நண்பர்கள் துணையுடன் உருவாக்கியதன் மூலம் கனடாத் தமிழ் நாடக உலகை நவீனப்படுத்தியவர்களில் ஒருவராகக் காத்திரமாகத் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார் பாபு பரதராஜா. அவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.

தேடகத்தின் அறிக்கை:

” நண்பர் பாபு பரதராஜா இன்று செவ்வாய்க் கிழமை (08-08-2017) காலமானார் என்கிற துயர்மிகு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். தமிழர் வகைதுறைவள நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினராகவிருந்து நிலையத்தின் பல செயற்பாடுகளிலும் பங்காற்றியதோடு, தேடக நூலகத்தை நிர்வகிப்பதிலும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கும் உந்து சக்தியாக திகழ்ந்தவர். நிலையத்தின் கலை நிகழ்வுகளில் மிகுந்த உற்சாகத்தோடு செயலாற்றியதோடு மட்டுமல்லாது ‘பலிக்கடாக்கள்’, ‘பொடிச்சி’ ஆகிய நாடகங்களிலும் சிறப்புற நடித்துமிருந்தார். தேடகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் பட்டறைகளிலும் பங்குபற்றி தன்னையொரு வளமிகு நடிகனாக வளர்த்துமிருந்தார். நாடகத்தின்பால் கொண்ட ஈடுபாட்டால் ரொரன்டோவில் தீவிர நாடகத்திற்காக ‘மனவெளி கலையாற்றுக் குழு’ வை தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உருவாக்கி ‘அரங்காடல்’ எனும் தீவிர மேடை நாடக நிகழ்வை நிகழ்த்துவதுற்கு முன்னோடியாக நின்றவர். தவநி, அரங்காடல், நாளை நாடக அரங்கப்பட்டறை. கருமையம் என பல தீவிர நாடக இயக்கங்களுடன் பணியாற்றியவர்.

Continue Reading →

‘பதிவுக’ளில் அன்று: கமரா எழுதிய கவிதைகள் (குறுந்திரைப்பட விழா யூரோமூவிஸ்) ! – ரவி (சுவிஸ்) –

'பதிவுக'ளில் அன்று: கமரா எழுதிய கவிதைகள் (குறுந்திரைப்பட விழா யூரோமூவிஸ்) ! ஏப்ரில் 2003 இதழ் 40 -மாத இதழ் – பனிக்கால விடுமுறையில் உயிர்ப்பித்தலின்றி மரங்கள் அமைதியாய் உறக்கமுற்றிருந்தன. கிராமத்தின் எளிமை பார்வைமீது இதமாக வீச, தேவாலயத்தை அண்மித்தேன். எந்த அசுமாத்தமும் இல்லை. அமைதி என்னை தொந்தரவு செய்ய மண்டப வாசல் தேடினேன். நேரம் பத்து மணியை தாண்டியிருந்தது.  இருள் வேண்டப்பட்ட அந்த மண்டபத்துள் நுழைந்து ஒரு இருப்பிடம் தேடவும் ஆங்கில மொழியில் விவரணம் சூழ்ந்து என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது.  நேதாஜி சுபாஸ் சநதிரபோஸ் பற்றியும் அவரின் ஜ.என்.ஏ (இந்திய தேசிய இராணுவம்) பற்றியுமான விவரணப் படம் போய்க் கொண்டிருந்தது.

யூரோ மூவிஸ் இந்த குறும்பட விழாவை நடத்திக்கொண்டிருந்தது. இந்திய, இலங்கை, புலம்பெயர் குறும் படங்கள் (விவரணப் படங்கள் உட்பட) இந்த மண்டபத்தின் உள்ளிடத்தை திரையரங்காக மாற்றிப் போட்டிருந்தன. ஒரு இந்திய தமிழ்ச் சினிமா என்றால் அரங்கு களைகட்டியிருக்கும். திரை மட்டுமன்றி அருகில் இருப்பவனும் கதையளந்துகொண்டிருப்பான். தமிழ்த் திரையரங்குக்கு விசிலடி, கத்தல், இரைச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்பதெல்லாம் ஆசுவாசமான விசயம் தமிழ் ரசிகர்களுக்கு. ஆனால் இந்த குறுந்திரை அமைதி கிரகிப்பு உற்றுக் கேட்டல் என்பதையெல்லாம் எம்மிடம் தந்துவிட்டு தான் மட்டும் பேசிக்கொண்டிருந்தது. எனது எதிர்பார்ப்பையும் மீறி இருக்கைகள் நிறைந்திருந்தன. சுமார் 150இலிருந்து 200 பேர்வரை பார்வையாளர்களை உள்வாங்கியிருந்தது அந்த மண்டபம்.

Continue Reading →