சிறுகதை: ‘ஹாக்’ செய்யப்பட்ட சித்ரகுப்தனின் கணக்கு!

சிறுகதை: சித்ரகுப்தனின் கணக்கு களவாடப்பட்டது.எம தர்ம ராஜனின் வாகனமான எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் திடீரென்று சிகப்பு வெளிச்சத்துடன்  எச்சரிக்கை  சமிக்கைச் செய்தது. அசவர வேலையாக  போய்க் கொண்டிருந்த எம தர்மன்  “என்ன !? யாரது ,என்னாயிற்று ” எனப் பதட்டமாக கேட்டார்.

அம்மணிகள் பேசவும், கேட்கவும் ,அவசர சமிக்கைச் செய்யவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

மறுமுனையில் ,சித்ரகுப்தன் “தலைவா! நம் கணிணி நிலயத்தை எவரோ ‘ஹாக்’ செய்துவிட்டார்கள்! ”

“’ஹாக்’ ..!? அப்படி என்றால் ? ,விவரமாக சொல்லுங்கள்” எனக் கேட்டார்

“எவரோ நம் கணிணியில் இருந்த சில கணக்கு பையில்களை களவாண்டு விட்டார்கள்!”

“அப்படியா! எந்த கணக்கு !!  ” என அதிர்ந்துக் கேட்டார்.

“பாவ புண்ணிய கணக்கு பையில் களவாடப்பட்டது. இந்தந்த செயலுக்கு இவ்வளவு புண்ணியம், பாவம் என அளவு கணக்கு இருந்தது அல்லவா!? அது..”

“ஓ..ஓ !! அது முக்கியமான கணக்கு ஆயிற்றே ! அதை கொண்டு தானே  ஒவ்வொரு மானிடருக்குமான  மொத்த கணக்கு ரிப்போர்ட் ,மும்மூர்த்திகளுக்கும் நாம் அனுப்புகிறோம். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா என கணிணி துறையினரிடம் கேட்டீர்களா?”

“நம் கணிணி துறை ,அசட்டு நம்பிக்கையில் அதற்கு ‘பேக்-அப்’ எடுக்கவில்லையாம் ..ஆகையால் ‘ரி-கவர்’ செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார்கள் !”

“சரி , அப்படியானால் இதை மூம்மூர்த்திகளுக்கும் உடனே தெரியப் படுத்துங்கள் ,சித்ரகுப்தன்..”

உடனே மூம்மூர்த்திகளோடு அசவர கூட்டம் கூட்டப்பட்டது.

Continue Reading →

பயணியின் பார்வையில் – அங்கம்15: கிளிநொச்சி அம்மாச்சி உணவகம் தரும் ஆரோக்கியமான உணவு. இலக்கிய உலகில் சங்கமிக்கும் அண்ணாச்சிகளும் மச்சான்களும்.

கிளிநொச்சி அம்மாச்சி உணவகம்வடமாகாண பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து அன்று காலை புறப்பட்டபோது, ” உங்களை  அம்மாச்சியிடம்  அழைத்துச்செல்லப்போகின்றேன்” என்றார் நண்பர் கருணாகரன். ” எங்கே..? ” எனக்கேட்டேன்.  ” அம்மாச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?” என்றார். அவர் என்னை அண்ணாச்சி என்றுதான் அழைப்பார். அக்காச்சி, அண்ணாச்சி, அம்மாச்சி என்பவை எமது தமிழர் வாழ்வில் பேசுபொருள். அப்படி யாரோ ஒரு அம்மாச்சியின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்போகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். வடக்கு பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்து  கிழக்கு மாகாணம் செல்லவேண்டியிருந்தது. அதற்கிடையில் கொழும்பு, கண்டி, மாத்தளை பயணங்களும் இருந்தன. எனது அவசரத்தை அவரிடம் சொன்னேன். நான் புறப்படும்வேளையில் அதிபர் பங்கயற்செல்வன் வந்து, தங்களது தொண்டு நிறுவனத்திற்கும் வந்து செல்லுமாறு கேட்டார். எனது பயணநெருக்கடியை அவரிடம் பக்குவமாகச்சொல்லிவிட்டு, கருணாகரனுடன் புறப்பட்டேன். அவர் அழைத்துச்சென்றது  அம்மாச்சி உணவகம்.  கிளிநொச்சியில் கண்டி வீதியிலிருப்பதனால்,  வெளியூர்களிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி  வருபவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களையும்  அழைக்கிறாள்.

அந்த உணவகத்தின் பெயரையும் சிங்களத்திற்கு மாற்றுவதற்கு இலங்கை அரசு எத்தனிக்கிறது என்ற குற்றச்சாட்டை வடக்கு  முதல்வர் முன்வைத்திருக்கிறார். வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருக்கும் அம்மாச்சி உணவகத்தில் அன்று காலைப்பசியை போக்கியபோது புதிய அனுபவமும் கிட்டியது. அவ்வாறு ஒரு உணவகத்திற்கு அதற்கு முன்னர் சென்றிருக்காதமையினால்தான் அந்த புதிய அனுபம் என நினைக்கின்றேன். கொட்டகை ( Cottage)  வடிவில் அம்மாச்சி இயங்குவதனால்  அப்பம், தோசை, புட்டு, இடியப்பம், இட்டலி, வடை முதலான உணவு வகையறாக்கல் பரிமாறப்படும் அழகே அலாதியானது. அனைத்தையும்        ஒரு (கொட்டேஜில் )  கொட்டகையில் பெறமுடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெண்கள் பொறுப்பாக இருந்து உடனுக்குடன் தருகிறார்கள்.    அங்கு   தனியாக காசாளரும் ( Cashier) இல்லை. யாரிடம் எதனைக்கேட்டுப்பெறுகின்றோமோ அவரிடமே அதற்கான பணத்தை தரல்வேண்டும். அதனாலும் இந்த  அம்மாச்சி வித்தியாசமானவள். தென்னிலங்கையிலிருந்து வரும் பெரும்பான்மை இனத்தவர்களையும் அம்மாச்சி பெரிதும் கவர்ந்திருக்கிறாள். அதனால்தான்போலும் இலங்கை அரசு இதற்குள்ளும் அரசியலை திணிக்கப்பார்க்கிறது. அம்மா, அம்மே, அம்மாச்சி எல்லாம் ஒன்றுதான்.

Continue Reading →

லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக…’ நூல் வெளியீடு

லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ நூல் வெளியீடு‘திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு) அவர்களின் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக…’ என்ற நூல் விடுதலை சுவர்க்க பூமிக்காக ஏங்கும் அவரது கனவின் வெளிப்பாடாகும். ஒரு வன்முறையற்ற பூமியைநோக்கி,  படுகொலைகளைக் களைந்து சமூக சௌஜன்யத்துடன் வாழும் சூழலை அவாவிய கனவு அவருடையது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறையில் நின்று நிதானமாய்ப் பரிசீலிக்கும் சிறிதரன் தொடர்ந்தும் தன் இலட்சியப்பாதையில் தொய்வின்றிப் பயணம் செய்து வருகின்றார். கடந்த முப்பது ஆண்டு கால யுத்தப் பேரழிவினை, மனத்தடைகளைக் களைந்து பார்ப்பதற்கான ஒரு கைவிளக்காக இந்த நூல் திகழ்கிறது.

இலங்கை அரசும், இராணுவமும், விடுதலைப்புலிகளும் ஏற்படுத்திய அவலங்களை அவர் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இத்துணை மனிதப் பலிகளை நிறுத்தி, 13ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழர்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் அதிகமாகவே இருந்திருக்கும் என்பதை இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்துகிறது. போலியான பிரகடனங்களின் பின்னால் செல்வதைவிடுத்து சிறிதரன் நெறிப்படுத்தியிருக்கும் அரசியல் பாதை நடைமுறை சார்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை’ என்று அரசியல் விமர்சகர் மு.நித்தியானந்தன் லண்டனில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.

‘திரு. சிறிதரனின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக … என்ற தலைப்பு எங்கள் தமிழ் சமுதாயத்தின் மிகப் பிரமாண்டமான மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு நம்பிக்கையில் பிறந்த கருத்துக்களின் தொகுப்பே என்று நினைக்கிறேன். இந்த நூலில் இலங்கையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இழந்துவிட்டவற்றை சொல்லியடங்காத துயருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு புதிய முற்போக்கான தலைமுறையை எதிர்பார்ப்பதுää தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்ட சுகுபோன்ற தன்னலமற்றவர்களிடம் இருந்து துளிர்ப்பது யதார்த்தமானதாகும்’ என்று பிரபல நாவலாசிரியை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தனது உரையின்போது தெரிவித்தார்.

Continue Reading →

ஆய்வு: சங்கப் புலவர்களின் மனிதஉரிமைகள் சிந்தனைகள்

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
பழந்தமிழ் இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியம், மனித சமூகம் உய்வதற்குரிய கருத்துக்களை உயரிய அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கின்றது. சமூக மேம்பாட்டின் பல்வேறு சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. காதலும் வீரமும் அவற்றுள் பெருமையுடையனவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பண்டைத்தமிழ் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளாக விளங்கியுள்ளன. இவ்விரு கூறுகளையும் எடுத்துரைத்துத் தமிழ்மொழியின் பெருமையினையும் உயர்வினையும் உலகறியச் செய்தவர்கள் சங்ககாலப் புலவர்கள் ஆவர். அப்புலவர்கள், தனிமனித வாழ்விலும், சமூகவாழ்விலும், சமூகத்துடன் தொடர்புடைய அரசவாழ்விலும் பெறத்தக்க மனித உரிமைகளைத் தங்கள் பாடல்களில் புலப்படுத்தியுள்ள திறத்தினைக் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

சங்ககாலப் புலவர்கள்
மனித உரிமைகள் என்ற கருத்துருவாக்கம் மனித சமூகம் குழுவாக வாழ ஆரம்பித்த நாளிலிருந்தே எழத் தொடங்கியுள்ளது. சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சமூகத்தில் உயர்வான நிலையில் வைத்துப் போற்றப்பட்டமைக்குக் காரணம் அவர்கள் மனித உரிமைகளைப் பற்றிய அறிவினைப் பெற்றிருந்தமையினால்தான். அரசியலிலும், சமூக உயர்விலும் தங்கள் பங்களிப்பினைச் சிறப்புற எடுத்துரைத்து வந்துள்ளனர். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் தேவைகளை எடுத்துரைத்ததோடு, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறவில்லை. தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள் அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கப்பட்டுள்ளன. இதில் புலவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளது. அவர்கள் தங்களது வறுமையைப் போக்கிக்கொள்ள மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளாமல் மன்னர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்யும் போது அவர்களைத் திருத்தவும், அறிவுறுத்தவும் செய்துள்ளனர்.

Continue Reading →

புத்தகக்கடை பூபாலசிங்கம் நினைவலைகள்: எழுத்தாளர்களின் தேவைகளை உணர்ந்து அறிவொளி வழங்கிய படிக்காத மேதை. தடைசெய்யப்பட்ட சமதர்மம் பத்திரிகை விற்றதற்காக சவுக்கடியும் வாங்கினார்.

புத்தகக்கடை பூபாலசிங்கம் நினைவலைகள்: எழுத்தாளர்களின் தேவைகளை உணர்ந்து அறிவொளி வழங்கிய படிக்காத மேதை. தடைசெய்யப்பட்ட சமதர்மம் பத்திரிகை விற்றதற்காக சவுக்கடியும் வாங்கினார்.” கவியரசு கண்ணதாசன் மறைந்துவிட்டார்” என்ற ஒரு தொலைபேசித் தகவல் சென்னையில் பலரையும் பரபரப்புக்குள்ளாக்கிவிட்டது. அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கவிஞரின் வீட்டுக்கு படையெடுத்துவிட்டனர். அதில் ஒருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். அவர் நெஞ்சிலே அடித்து புலம்பிக்கொண்டு ஓடிவந்துள்ளார். ஆனால், இவர்களெல்லாம் அதிசயிக்கும்வகையில் ஆசனத்தில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் கவிஞர். அந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை பலருக்கும் அனுப்பியவரே அவர்தான் என்பது தெரிந்தது. குரலை மாற்றி அவ்வாறு சொல்லி பலரையும் தான் பதட்டப்படவைத்தமைக்கு காரணமும் சொன்னாராம். தான் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை தான் உயிரோடு இருக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை நெடுநாளாக இருந்ததாம். அன்று அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டதுடன், அவ்வாறு உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக செய்தி வெளியானால் இன்னும் அதிக காலம் வாழமுடியும் என்று ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் அன்று துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சொல்லிச்சிரித்தாராம். அவர் சொன்னவாறே அதன் பிறகு பல வருடங்கள் வாழ்ந்து விட்டுத்தான் இயற்கை எய்தினார். இலங்கையில் தமிழ் புத்தக இறக்குமதி விற்பனை விநியோகத்தில் பெரும் புகழ்பெற்றிருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஸ்தாபகர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களைப்பற்றி நினைக்கும்போது கண்ணதாசனும் நினைவுக்கு வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொழும்பு பொரளையில் கொட்டாவீதியில் அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) தலைமை அலுவலகத்திற்கு 1972 – 1977 காலப்பகுதியில் அடிக்கடி சென்றுவருவேன். அங்கிருந்துதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, புதுயுகம் முதலான பத்திரிகைகளும் அத்த என்ற சிங்கள நாளேடும் வெளியாகின. தமிழ் பத்திரிகைகள், வாரவெளியீடுகள்தான். அத்த பத்திரிகையில் ஒரு நாள், யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. கொழும்பில் வசித்த கட்சியைச்சார்ந்த தமிழ்த்தோழர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு தொடர்புகொண்டபோது அந்தச்செய்தி தவறானது என்பது ஊர்ஜிதமானது. இது நிகழ்ந்து பலவருடங்களின் பின்னர்தான் 1982 இல் புத்தகக்கடை பூபாலசிங்கம் மறைந்தார். அவரது பெயரில் வாழ்ந்த மற்றும் ஒருவர் இறந்த செய்தியை அன்றைய அத்த பத்திரிகை வெளியிட்டு, பின்னர் மன்னிப்பும் கேட்டது. அத்த என்றால் தமிழ் அர்த்தம் உண்மை. உண்மைக்குப்புறம்பான செய்தியை வெளியிட்டு கட்சித்தோழர்களிடம் திட்டும் வாங்கியது அந்தப்பத்திரிகை. இதுபோன்று அ.செ. முருகானந்தனுக்கும் நடந்திருக்கிறது.

பீனிக்ஸ் பறவையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆனால், அது எரிக்கப்பட்டாலும் மீண்டும் புத்துயிர்கொள்ளும் என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக கவிஞர்கள் பீனிக்ஸ் பறவையை உவமித்து கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பூபாலசிங்கம் புத்தகசாலையையும் பீனிக்ஸ் பறவைக்கே உவமிப்பார்கள். சீதையைப்போன்று தீக்குளித்து எழுந்ததுதான் இந்த புத்தக களஞ்சியம். ஒரு தடவையல்ல மூன்று தடவைகள். யாழ்ப்பாணத்தில் நான் படித்துக்கொண்டிருந்த 1963 – 1965 காலப்பகுதியில் சனிக்கிழமைகளில் வெளியே சென்றுவருவதற்கு எங்கள் கல்லூரி ஆண்கள் விடுதியில் அனுமதி தருவார்கள். அரியாலையிலிருந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையம் சென்று பூபாலசிங்கம் புத்தகசாலையில் அம்புலி மாமா சஞ்சிகை வாங்கிவருவேன். நண்பர்களுடன் வெலிங்டன், ராஜா தியேட்டர்களுக்குச்சென்று முற்பகல், பிற்பகல் படங்களும் பார்த்துவிடுவேன். எனினும் படம் பார்ப்பதைவிட அம்புலிமாமா வாங்குவதுதான் எனக்கு முக்கியமானது.

Continue Reading →

பயணியின் பார்வையில் — அங்கம் 14: அரசியல் தலைவர்களுக்கும் சொல்ல மறந்த கதைகள் பலவுண்டு. நூலுருவில் வெளிவந்திருக்கும் முருகேசு சந்திரகுமார் நிகழ்த்திய பாராளுமன்ற உரைகள்

கிளிநொச்சி முன்னாள் எம்.பி. முருகேசு சந்திரகுமாருடன்கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பு நிறைவடைவதற்கு சற்று காலதாமதமானது. தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக  உரையாற்றுவதற்கு சில சகோதரிகள் வந்திருந்தார்கள்.    ஒரு கத்தோலிக்க மதகுருவினால் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனை அமைப்பிலிருந்து வந்திருந்த அவர்களுடைய உரை சமூகப்பெறுமதியானது. எனினும் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே  கேட்டனர் என்பது எனக்கு ஏமாற்றமே. கத்தோலிக்க மதபீடங்கள் இவ்வாறு இலங்கையில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. அத்துடன் கத்தோலிக்க வணக்கத்துக்குரிய சகோதரிகளும் அன்னையரும் பெற்றவர்களை இழந்தவர்களையும் பராமரிப்பின்றி அனாதரவான  முதியவர்களையும் ஆங்காங்கே இல்லங்கள் அமைத்து கவனித்துவருகின்றனர். மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். வன்னிப்பிரதேசங்களில் இவ்வாறு நடைபெற்றாலும், கிழக்கில் சில மதபீடங்கள் மத மாற்றவேலைகளில் கச்சிதமாக ஈடுபடுவதையும் அவதானித்தேன். அதுபற்றி கிழக்கிலங்கை பயணம் தொடர்பான பத்தியில் எழுதுவேன்.

அன்றைய  ஊடக அமையசந்திப்பு முடிந்து புறப்படும்போது, ” உங்களை சந்திக்க மேலும் சிலர் வந்து வீட்டில் காத்திருக்கிறார்கள்.” என்றார் நண்பர் கருணாகரன். மற்றும் ஒரு சந்திப்பா…?” எனக்கேட்டேன். “ஆம்,  கிளிநொச்சி முன்னாள் எம்.பி. முருகேசு சந்திரகுமார் உட்பட சில  இலக்கியவாதிகளும் பாடசாலை அதிபர்களும் அங்கு வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இப்பொழுதே மாலை ஆறு மணியும் கடந்துவிட்டது. புறப்படுவோம்” என்றார் கருணாகரன். நான் சந்திப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்தவர்தான் முருகேசு சந்திரகுமார். அதற்குப்  பல காரணங்கள் இருந்தன. அன்றைய பயணத்திற்கு முன்னர் கிளிநொச்சிக்கு 2010 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி வந்து திரும்பியிருக்கின்றேன். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் திரு. பங்கயற்செல்வன் அதிபராக இருந்த காலத்தில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக பல மாணவர்களுக்கு உதவியிருக்கின்றோம். அதற்கு முன்னர் போர்க்காலத்திலும் மாங்குளம் பங்குத்தந்தையாக இருந்த வண.பிதா ஆர். சூசைநாயகம் அவர்களின் ஊடாக சில மாணவர்களுக்கு உதவி வழங்கியிருக்கின்றோம். அதில் ஒரு மாணவர் மாவட்ட ரீதியில் சிறந்த மாணவராக தெரிவாகி முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவிடம் விருதும் பெற்றவர். பின்னாளில் இம்மாணவர் வெளிநாடொன்றில் இலங்கை தூதரகத்தில் நல்லதொரு பதவியிலிருப்பதாகவும் அறிய முடிந்தது.

இவ்வாறு கிளிநொச்சிக்கும் எமக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தபோதிலும்,  போர் முடிவுற்றதன்பின்னரே எனக்கு அங்கு சென்றுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்காலத்தில் கிளிநொச்சி பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிவோம். அங்கிருக்கும் வற்றாத ஜீவ நீர் நிலை இரணைமடுக்குளத்தை நீர்விநியோகத்திற்கு பயன்படுத்துவது   குறித்தும்  வடக்கு – வன்னி விவசாயிகளிடத்தில் ஒத்த கருத்து இல்லை. கிளிநொச்சி போருக்குப்பின்னர் வேகமாக அபிவிருத்தியடைந்த பிரதேசம். அதில் முக்கிய பங்கு மு. சந்திரகுமாருக்கும் உண்டு. எனினும் கடந்த பொதுத்தேர்தலில் அவர் தெரிவாகவில்லை என்பது எனக்கு வருத்தமே.

Continue Reading →

பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்

நீங்காத நினைவுகள்கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.

தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும் இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயின், அவர்களாலும் நல்ல கதைகளைப் படைக்க முடியும் என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகள் காட்டி நிற்கின்றன. இனி தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் பார்ப்போம்.

வறுமையின் தியாகம் (அன்னலிங்கம் கிருஷ்ணவடிவு) கதை என்னை எந்தோ காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் சென்றது. எழுத்து நடையிலும் தான். நீண்டகால இடைவெளிக்குள் நடக்கும் கதை. ஒரு நாவலுக்குரிய கரு. புளி மாங்காய் (மாலினி அரவிந்தன்) பூடகமாக பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. கழித்த கல்லும் ஒருநாள் உதவும் என்பதுமாப் போல், புளிமாங்காயும் ஒரு கட்டத்தில் தேவைப்படுகின்றது. எட்டாத பழம் புளிக்குமென்பார்கள். இங்கு எட்டிய பழமும் புளிக்கின்றது. ஒருவேளை பிஞ்சிலே பழுத்த பழமோ? கதையில் நட்பு தன் வேலையைச் செய்வதினின்றும் தவறிவிடுகின்றது. நட்பின் சந்திப்பு (தமிழ்மகள்) பள்ளித் தோழிகள் இருவர் நீண்ட நாட்களின் பின்னர் பூங்கா ஒன்றில் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகிதம் சந்தித்துக் கொள்கின்றார்கள். தமது குடும்பம், முதுமை, கனடா வாழ்க்கை என அவர்களிடையே நடைபெறும் ஊடாட்டத்தைக் கதை சொல்லிச் செல்கின்றது. மூச்சுக்காற்று (ஜெயசீலி இன்பநாயகம்) சின்னஞ்சிறிய கதை. கதையுடன், சுற்றுப்புறச்சூழலைப் பேண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. ஆசிரியர் தனது இரண்டாவது பந்தியில் இருந்தே வாசகரை உள்ளே இழுத்து விடுகின்றார் சற்றே ’த்றில்’ உடன். அந்த இரண்டு நாட்கள் (சறோ செல்வம்) எடுத்த எடுப்பிலேயே வாசகரை உள் இழுத்து விடுகின்றது. தாயகத்தில் ஊரடங்கு, ஆமியின் தொந்தரவுகளைச் சொல்லும் கதை. காவோலை (கனகம்மா) முதுமையில் புலம்பெயர் வாழ்வைச் சித்தரிக்கின்றது.

Continue Reading →

ஆய்வு: பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இப்புற உலகினைப் பற்றி மனிதன் நொடியொரு  பொழுதும் ஆராய்ந்து வருகின்றான்.  இன்றைய சூழலில் ஒரு புதிய  உலகையே படைக்கும்  வல்லமையை மனித அறிவு பெற்றிருக்கின்றது. இவற்றிற்கு  அடிப்படைக் காரணம் பண்டைய மக்களின் அறிவும்,  நுட்பமான பார்வையுமே ஆகும்.

உலக நாகரிகங்களெனக் கூறப்படும் கிரேக்கம், எகிப்து, ரோம், சிந்து சமவெளி, மெசபடோமியா போன்ற 24- ற்கும் மேற்பட்ட பகுதிகளில்  வாழ்ந்த மக்கள்  சிறந்த, நாகரிக வாழ்வை  வாழ்ந்தனர் என வரலாறு மெய்ப்பிக்கின்றது.  கி.பி.க்கு முற்பட்ட காலத்தில் உய்த்துணர்வு முறையில்  தொடங்கிய ஆய்வு பின்னர் சோதனை மூலம் கண்டறிதல் (Practical Method)  முயன்றனர். அதற்கு ஆர்க்கிமிடிஸ் தத்துவமே முதன்மைச் சான்றாகும். எனினும், உய்த்துணர் முறையில் பல ஆயிரக்கணக்கான விடையை பழங்கால மக்கள்  பெற்றிருந்தனர் என்பதற்கு  தொல்பொருள், இலக்கிய இலக்கணச் சான்றுகளும்,  இன்ன பிற சான்றுகளும்  முதன்மை ஆதாரமாகின்றன.

சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்க இலக்கிய புலவர்கள் சிலர், சீனாவில் கன்பூசியஸ்  போன்றோர் உலக கருத்துக்களை புதிய நோக்கில் ஆராய்ந்து இயற்கையின்  புறவெளியைப் பற்றியும் மக்கள் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த உலகம் எப்படிப்பட்டது? அதன் தோற்றம் என்ன? அது எதனால் உருவானது? இயற்கைப் புறவெளியில் உள்ள அண்டவெளி பிரபஞ்சத்தின் (Universe)   இயக்கப் போக்குகள் என்ன? ஐம்பூதங்கள் எப்படி தோன்றின? பகலிலும், இரவிலும் பருப்பொருள்கள் தோன்றுவதும், மறைவதுமாய் இருப்பதற்குரிய காரணம் என்ன? மனிதன் பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? என்பது போன்ற பல ஆயிரக்கணக்கான வினாக்களைத் தொடுத்து அதற்கு பல்வேறு விளக்கங்களையும் தந்துள்ளனர்.

Continue Reading →

ஆய்வு: இளிவரலெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்களின் அகநானூற்றுத்திறன்

- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில் DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்.(தொ.மெய்.3) அவற்றுள் இளிவரலெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் இளிவரலுக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரையில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.

இளிவரல் தோன்றும் களன்கள்
இளிவரலெனும் மெய்ப்பாடு தோன்றும் களனை தொல்காப்பியர்,
மூப்பே பிணியே வருத்த மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.(தொ.மெய்.நூ.6)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

உரையாசிரியர்களின் பார்வையில் இளிவரல்
மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் இளிவரலுக்குரிய பொருளாகும். இவை தன்னிடமும் பிறரிடமும் தோன்றும்(இளம்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல்.(பேரா.) இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கிறது.(பாரதி.) என உரையாசிரியர்கள் இளிவரலினைக் குறித்துக் கூறியுள்ளனர்.

மூப்பு
பிறர்மாட்டு தோன்றும் மூப்புப் பற்றி விளக்க நாலடி.14 ஆம் பாடலை இளம்பூரணர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட் டோன்றிய மூப்புப் பற்றி விளக்க பேராசிரியர். புறம்.243 ஆம் பாடலையும்,

”மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல”(அகம்.6)

எனும் பாடலையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். மேற்கண்ட அகநானூற்றுப் பாடலடிகளில் இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையுடன் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க என தலைவனிடம் தலைவி வேண்டுகின்றாள் எனும் செய்தி இடம்பெற்றுள்ளமையின் இஃது தன்னிடம் தோன்றிய முதுமைப் பொருளாயிற்று. மூப்பு என்பது முதுமை(பாரதி) என பாரதி கூறியுள்ளார்.

Continue Reading →