திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு

முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.

கல்வெட்டுப் பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும்,  வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _

Continue Reading →

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன் – கோவில் கல்வெட்டு

வரலாறுஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்
செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால்
வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி
ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்
பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு
டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _ 

வேளான் – அரசன், அரசமரபினர், ஆட்சியாளன்.

விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேந்தன், மன்னர், அரையன், நாட்டுக் கிழான் அல்லது கோன் ஆகிய நான்கு அதிகார அடுக்கு ஆட்சியாளரும் 10 ஆம் நூற்றாண்டு அளவில் சோழர் ஆட்சியில் தம் பெயருக்குப் பின்னே வேளான் என்ற பட்டத்தை இட்டுக் கொண்டனர். வேந்தனும், மன்னனும் தந்தைக்குப் பின் மகன் என்ற மரபு வழியில் ஆள வந்தவர்கள். ஆனால் அரையர் மற்றும் நாட்டுக் கிழான்கள் வேந்தர், மன்னர் விருப்பில் அரையராக கிழானாக அமர்த்தப்பட்ட எளியோர். இது அவர்களது தகுதி, உண்மைத் தன்மை பொறுத்து அமைந்தது. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவன் மகன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன்கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ளவரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

இக்கல்வெட்டில் சந்தி விளக்கேற்ற இருவரும் சுற்றத்தாரோடு கோவிலில் நுழைந்திருக்க வேண்டும்.  இருவரும் பறையர் சாதியை சேர்ந்தவர்கள் என்பது அந்நாளில் இவர்கள் தாழ்த்தப்படவும் இல்லை, ஒடுக்கப்படவும் இல்லை. தீண்டாமையும் இல்லை. அதோடு பறையர்கள் நாட்டுக் கிழான்களாக ஆட்சியில் இருந்துள்ளனர். செயங் கொண்டன் தன்னை பாட்டாலி காவலன் என்பதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

Continue Reading →

வாசிப்பும் , யோசிப்பும் 337: செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ பற்றி…

அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய 'எழுதித்தீராப் பக்கங்கள்'அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ வாசித்தேன். தன் புகலிட அனுபவங்களுடன் சிறிது புனைவினையும் கலந்து , அங்கதச்சுவை மிக்க படைப்பாக்கியிருக்கின்றார் காலம் செல்வம். இந்நூலிலுள்ள பாத்திரங்களின் உரையாடல்கள், சம்பவங்கள் சில இந்நூல் புனைவும் கலந்ததென்ற உணர்வினையே எனக்குத் தருகின்றது. இந்நூலின் முக்கிய பலம் நூலாசிரியரின் அங்கதச்சுவை மிக்க எழுத்து. வெறும் நகைச்சுவை எழுத்தென்றில்லாமல் , நகைச்சுவையினூடு சமூகத்தையும் கிண்டலடிக்கின்றது. அதனாலேயே அங்கதச்சுவை மிக்க படைப்பாகியிருக்கின்றது இந்நூல். நூல் சுவைப்பதற்கு இன்னுமொரு காரணம் நூலில் காணப்படும் ஓவியங்கள். ஓவியங்களுடன் நூலை வாசிக்கையில் பல இடங்களில் அடக்க முடியாமல் சிரிப்பு வெடிக்கின்றது. நூலாசிரியரின் நடையும், ஓவியங்களும் இந்நூலின் சிறப்புக்கு முக்கிய காரணங்கள்.

இந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தை இந்நூலைத் தொடராக வெளியிட்ட ‘தாய்வீடு’ பத்திரிகையின் ஆசிரியர் டிலிப்குமார் இந்நூலுக்கு எழுதிய அறிமுகக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் ஈர்த்தன. அவை வருமாறு: “புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினரது துயர வாழ்வு ஒரு தொடராக எழுதப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்” ” முதல் தலைமுறையினரது அனுபவங்கள் செவிவழிக் கதைகளாக இருந்தனவேயன்றிப் பதிவுகளாகத் தெரிந்திருக்கவில்லை”

இவை தவறான கூற்றுகள். காலம் செல்வத்தின் ”எழுதித்தீராப் பக்கங்கள்’ நூல் அண்மைக்காலகட்டத்தில்தான் ‘தாய்வீடு’ பத்திரிகையில் தொடராக வெளியானது. இந்நூல் புகலிடத்தமிழர்களின் வாழ்வினை ஆவணப்படுத்துமொரு சிறப்பான நூல் என்பதில் மாற்றுக்கருத்துகளில்லை. ஆனால் இவ்விதமான நூலொன்று வெளியானது இதுவே முதல் தடவையாகும் என்பது தவறானது. இந்நூல் வெளியாவதற்குப் பல வருடங்களின் முன்னரே , தொண்ணூறுகளில் வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ கனடாவிலிருந்து வெளியாகும் ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியானது. இதுபோல் 2007 காலகட்டத்தில் திண்ணை, பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளியான வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலும் தொடராக திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இவையெல்லாம் முறையே இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், நியூயார்க் மாநகரத்தில் அலைந்து திரிந்த வாழ்வையும் பதிவு செய்தவை. இவையிரண்டுமே உண்மை அனுபவங்களின் அடிப்படையில் உருவான புனைவுகள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 336: இருவர்!

மாணிக்கதாசன்உபதிஸ்ஸ கமநாயக்க‘மக்கள் விடுதலை முன்னணி’த்தலைவர் ரோகண விஜேவீரா பற்றிய சிங்களத்திரைப்படம் பற்றிய காணொளியைப்பார்த்ததும் கூடவே ரோகண விஜேவீராவுடன் கைது செய்யப்பட்டுப் படையினரால் கொலைசெய்யப்பட்ட கட்சியின் உபதலைவரான உபதிஸ்ஸ கமநாயக்கவின் (Upatissa Gamanayake) நினைவும் தோன்றியது. கூடவே அவரது தாயாரின் சகோதரியின் மகனான இன்னுமொருவரின் நினைவும் தோன்றியது. உபதிஸ்ஸ கமநாயக்க சிங்கள சமுதாயத்தின் வர்க்க விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அரசபடையினரால் கொலைசெய்யப்பட்டால், அவரது அன்னையின் சகோதரியின் மகனோ இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காய் ஆயுதம் தாங்கிப்போரிட்ட ஒருவர். ஆரம்பத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பில் இணைந்தவர் பின்னர் அது தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம், விடுதலைப்புலிகள் என்னும் அமைப்புகளாகப்பிரிந்தபோது தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைத்துக்கொண்டவர். பின்னர் தன் இறுதிகாலத்தில் அவ்வமைப்பின் இராணுவத்தளபதியாகவும் , பிரதித்தலைவராகவுமிருந்தவர். அவர் வவுனியாவிலிருந்த கழகத்தின் முக்கிய பாசறையான லக்கி ஹவுஸுல் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் மாணிக்கதாசன்.

மாணிக்கதாசன் என்றதும் அவரது இராணுவச்செயற்பாடுகள் மற்றும் அவை காரணமாகவெழுந்த விமர்சனங்கள்தாம் முதலில் நினைவுக்கு வரும். விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அனைத்து அமைப்புகளிலும் இவை போன்ற விமர்சனங்களுள்ளன.

மாணிக்கதாசனுக்கும் வடக்கு அராலிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இவரது சகோதரியொருவர் அங்குதான் திருமணம் செய்தவர். இவரது சகோதரரொருவர் அங்கு மாணவர்களுக்கு ‘டியூசன்’ கொடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறுவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் மாணிக்கதாசனே அங்குவந்து தேடப்படும் காலங்களில் உறைந்து வாழ்ந்ததாகவும் கூறுவர். இவரைப்பற்றி 1984 -1987 காலப்பகுதியில் கழகத்தின் அப்பகுதிப்பொறுப்பாளராகவிருந்த முரளி இவரைப்பற்றிக் கூறியது இவரைப்பற்றிய இன்னுமொரு பிம்பத்தையே தந்தது.

வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம் மாணிக்கதாசன். அவ்விதமொரு நாள் அப்பகுதிப்பொறுப்பாளரான தன்னைச் சந்திக்க வந்த நிகழ்வைப்பற்றி அவர் நினைவு கூர்கையில் (யாழ் கோட்டையில் ‘புளட்’ அரண் அமைத்துக் காவல் புரிந்து கொண்டிருந்த காலகட்டமது) வழக்கம்போல் வேகமாக வாகனத்தையோட்டி வந்த அவர் அவ்விதமே தன்னையதிலேற்றி முருகமூர்த்தி ஆலயத்தடிக்கு அழைத்துச்சென்று சிறிது நேரம் உரையாடிச்சென்றதாகவும், அப்போது அப்பகுதியில் இன்னுமொரு பயிற்சி முகாம் அமைக்க வேண்டுமெனக் கூறியதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு விடயம்: ‘தோழர் சின்ன மெண்டிஸ் போராளிகளுடன் மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். மாணிக்கதாசனும் அவ்வாறே மிகவும் நட்புரீதியாகப்பழகுவார். அத்துடன் மிகவும் வேடிக்கையாகவும் உரையாடுவார்.’ இவ்விதமான அவரது ஆளுமையினால் அக்காலகட்டத்தில் கழகத்தோழர்களின் அன்புக்குரியவராகவுமிருந்தாரென்றும் அவர் மேலும் கூறினார்.

Continue Reading →

ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம்

எழுத்தாளர் பிரபஞ்சன்குடும்பத்தினரை உயர்த்தும் குலவிளக்காய் சமுதாயத்தினை வழிநடத்தும் விடிவெள்ளியாய் குவலயத்தில் திகழ்பவர்கள் பெண்களே. இத்தகு பெண்கள் கடந்து வரும் பாதைக் கரடுமுரடானது, ஏனெனில் வேறு எந்த உயிரினங்களிலும் இல்லாத ஆண், பெண் என்ற பேதம் மனித இனத்தில் மிகுதியாக வளர்ந்து வந்துள்ளது. இப்பேதத்தை உருவாக்கியுள்ள இன்றைய சமுதாயத்தில் ஆண், பெண் வேற்றுமைகளை நீக்கி காலங்காலமாக அடிமைக் கூண்டில் அகப்பட்டு அல்லலுறும் பெண்ணை விடுவித்து, அவர்களுக்கு முதலிடம் கொடுத்து, அவளுக்காகவே குரல் கொடுப்பது முன்னேற்றச் சிந்தனையாகக் கருதப்படுகிறது. இச்சிந்தனை இன்று வேரூன்றி நின்று, பரவலாகப் பேசப்பட்டு, முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இச்சிந்தனைக் காலத்தின் தேவையை உணர்ந்து எழுந்தது எனில் மிகையில்லை. பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைவது பெண்களைச் சமுதாய அளவில் முன்னேற்றுவதுதான் சமூகத்தில் பெண்களின் இடத்தை இனம் காட்டுதல், அவற்றால் பெண்கள் அடையும் பாதிப்புகள் அவற்றின் ஆழம் மற்றும் அதற்குக் காரணமான நிறுவன மரபு போன்றவற்றையே இக்கட்டுரை முன்வைக்கிறது. 

பெண்ணியம்
“Feminism” என்ற ஆங்கிலச் சொல் “Femina” என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். Femina என்ற சொல் முதலில் பெண்களின் குணாதிசயங்களைக் குறிப்பிடவே இந்த சொல் வழங்கப்பட்டது. பின்பு பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கு வழங்கப்பட்டது.

“பெண்ணியம் என்ற இச்சொல் 1890இல் இருந்து பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது”.1

பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமைப் போராட்டம், பெண்நிலை பேதம் போன்ற சொற்றொடர்கள் பெண் விடுதலையைக் குறிக்கும். பெண் விடுதலை என்ற கருத்து மேல்நாட்டுச் சிந்தனையின் தாக்கமாகும். பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்க்கும் அபாயமானக் கூறு என்று பலர் கருதுகின்றனர். காலங்காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைக் களத்திலிருந்து விடுவித்து சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் செயற்பாடாகும்.

Continue Reading →

தமிழுக்களித்த நன்கொடை!

தாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” தாமோதரம்பிள்ளை சனாதனன்தாமோதரம்பிள்ளை சனாதனன் எழுதிய, “நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியக் கலைப்பயில்வும் (1920-1990)” எனும் பெயரிலான நூல் மிக அண்மையில் வெளிவந்து, அதை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணத்தின் கலை வரலாறு பற்றியதாக அமையும் இந்த ஆய்வுநூல், காலனிய மற்றும் பின்காலனியகால யாழ்ப்பாணத் தீபகற்பம், நவீன கலைப் போசிப்பிற்கும், கலைச் செயற்பாட்டுக்குமான மையமாக அமையுமாற்றையும் அவற்றிற்கான பின்புலம் மற்றும் பேறுகளை புலமைசார் விசாரணைக்கு உட்படுத்துவதாயும் அமைந்துள்ளது. காலனியவாத, தேசியவாத முரண்களின் பின்புலத்தில் தோன்றிய நவீனமயமாதல் படிமுறையில், காண்பியக் கலையில் நிகழ்ந்தேறிய பன்முகத் தன்மைமிக்க அர்த்தம், அடையாளம், அழகியல் முதலாய மாற்றங்களைத் பல்துறைறைச்சங்கம ஆய்வொழுங்குநிலை நின்று யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியும், யாழ்ப்பாணத்துக்கப்பாலான இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் மற்றும் இந்தியப் பிராந்தியங்கள் ஆகியவற்றோடும் ஊடாடியும் வாசிப்பதாய் இந்நூல் அமைகிறது. 

காண்பியக் கலையின் கருத்துநிலையில் நிகழ்ந்த மாற்றங்களை, படைப்பு – படைப்பாளி – நிறுவனம் முதலாயவற்றுடன் தொடர்புறுத்தி ஆராயும் இந் நூல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மத்தியதரவர்க்கம் எனும் மேன்மக்கள் மற்றும் சைவ மறுமலர்ச்சி இயக்கம் முதலாக, ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி மற்றும் இராணுவ மயமாக்கம்வரையுமான சமூக வரலாற்று நிலவரங்கள், காண்பியக் கலைப்பயில்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் பெறுபேறுகள் குறித்தும் கவனஞ் செலுத்துகிறது. 

காண்பியக் கலைக் கல்வி, அதன் பழக்கம், அது பற்றிய நுகர்வு முதலாய நிலைகளில் உண்டான மாற்றங்களினூடு சாதி முதல் தேசியம் வரையான பல்வேறு அடையாள அரசியற் கூறுகளில் உண்டான மாற்றங்களையும் இந் நூல் ஆராய்கிறது. அந்தவகையில் கலைப்பயில்வு மாற்றங்களினூடு அடையாள அரசியல் மாற்றத்தையும் இந் நூல் இனங்காட்டுகிறது. 

யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தனது பொருளாதார மற்றும் அரசியல்சார் நலன்களினூடு, காலனியத்தின் விளைவாற் கிட்டிய ஓவியக் கல்வி மற்றும் மதமையக் கலையை மீள்வடிவமைப்புச் செய்ததைப் பற்றியும் இந் நூல் விபரிக்கிறது. 

‘மரபும் நவீனத்துவமும் குலத்தொழிலாகக் கலையும்’, ‘நவீனத்துவமும் மாயக்காட்சிவாதமும்’, ‘காலனியமும் தேசியமும் காண்பியற் கலை பற்றிய கருத்தாடற்புலமும்’, ‘கலைப்பயில்வும் அரச உத்தியோகமும்: நடுத்தர வர்க்கமும் ஓவியத்தின் கருத்துரு மாற்றமும்’, ‘நவவேட்கையும் உருவவாதமும்’ ஆகிய ஐந்து இயல்களில் (அறிமுகம், முடிவுரை நீங்கலாக) அமைந்த இந்நூல், 208+xxiv பக்கங்களில் அமைந்துள்ளது.

Continue Reading →