முனைவர் நா. நளினிதேவியின் ‘இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்’ என்ற நூலை முன்வைத்து..

எழுத்தாளர் எஸ்.பொ.வின் நினைவு தினம் நவம்பர் 26. அவர் நினைவாக..

எஸ்.பொமுனைவர் நா. நளினிதேவியின் 'இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்' என்ற நூலை முன்வைத்து..ஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை எஸ். பொன்னுத்துரை ஆவார். தமிழிலக்கியத்ததின் அனைத்துத் துறைகளையும் இவர் தொட்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் தமிழுலகில் பேசப்படும் ஆகச் சிறந்த இலக்கியங்களாகும். இவை காலங்கடந்தும் நிலைத்து நின்று இமாலய வெற்றி பெறும் என்பதை  ஆராய்ந்து இந்நூலில் நிறுவியுள்ளார்.

எஸ்.பொ.அவர்களின் படைப்புகளான சிறுகதை, புதினம், நாடகம்;, கவிதை, உரைநடை, காவியம், வரலாறு மற்றும் மொழிபெயர்ப்புகள் என ஒவ்வொன்றையும் தீவிரமாகப் படித்து, அலசி ஆராய்ந்து, ‘இலக்கியப்போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும்’ என்ற தலைப்பில் நூலாக்கம் செய்தவர் முனைவர் நா.நளினிதேவி. இவரது பல சிறந்த ஆக்கங்களில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எஸ்.பொவின் நூல்கள் முழுமையும் நளினிதேவி ஆய்வுக்குட்படுத்தியதை அறிந்த எஸ்.பொ. மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, இக்கட்டுரைகளை மித்ர பதிப்பகத்திலேயே நூலாக்கம் செய்யலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்தார்.

நளினிதேவி அவர்கள் எஸ்.பொ.வின் ஒவ்வொரு படைப்புகளையும் படித்ததோடு உடனுக்குடன் ஐம்பதுஃஅறுபது பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஞானிஅய்யாவிற்கு அனுப்பிவிடுவார். எஸ்.பொ.வின் அனைத்துப் படைப்புகளையும் குறைந்தது அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார்.  அக்கட்டுரைகளை ஒளியச்சு செய்வதற்காக வாங்கிச் சென்ற நபர் எந்த தொடர்பும் கொள்ளமுடியாமல் போனதால்,  கையெழுத்துப் பிரதிகள் எதுவும் கைக்குக் கிட்டவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்டார் நளினிதேவி. எஸ்.பொ. ஆசுரேலியா சென்றுவிட்டார். உடல்நலம் குன்றிவிட்டார். எஸ்.பொ.அவர்கள் தன்கட்டுரையைப் பார்த்துவிடவேண்டும் என்று அதி விரைவாகச் செயல்பட்டார் நளினிதேவி.

Continue Reading →

பதிவுகளில் அன்று: திலகபாமா கவிதைகள்

எழுத்தாளர் திலகபாமா– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் —

– எழுத்தாளர் திலகபாமா கவிதை, சிறுகதை, விமர்சனம் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பு செய்து வருபவர்.  பட்டி வீரன் பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருபவர். இவரது கவிதைத்தொகுப்புகள்,  சிறுகதைத்தொகுப்புகள் , கட்டுரைத்தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ‘கழுவேற்றப்பட்ட மீன்கள்’ என்பது இவரது வெளிவந்த நாவலாகும். ‘பதிவுகள்’ இணைய இதழின் ஆரம்ப காலத்தில் இவர் தன்  எழுத்துலகப் பயணத்தைத்தொடங்கியவர். பதிவுகள் இணைய இதழிலும் இவரது படைப்புகள் பல வெளியாகியுள்ளன. அவ்விதம் வெளியான கவிதைகளே இங்கு பதிவாகின்றன. இவரைப்பற்றிய விரிவான விக்கிபீடியாக் குறிப்புகளுக்கு: https://ta.wikipedia.org/s/olr


1.
பதிவுகள் ஏப்ரில் 2002 இதழ் 28
தவம்

கிடக்கும் கல்
சாபம் தந்ததாய் உன்
சாணக்கிய சிரிப்பு
கட்டிய தாலிக்காய்
உடைமை ப் பொருளாய் எனை
சந்தித்த உன்னிடமிருந்து
விமோசனம் தந்த வரமாய்
என் சிந்திப்பின் தித்திப்பு
காலால் தீண்டி
பெண்ணாய் மாற்றும்
அவதாரம் நாடாது
கலையை நெஞ்சில் கொண்டு
சிலையாய் மாற்றும்
சிற்றுளிக்கும்
தாங்கிய கைதனுக்கும்
காத்திருக்கும் என் தவம்

Continue Reading →