சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை!

மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் மானுடவியல் துறையில் முதுகலையில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச்சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் அங்கு பணி புரியும் பேராசிரியர்கள் சிலரின் பாரபட்சம் மற்று துன்புறுத்தல்கள் காரணமாகத் தற்கொலை செய்துள்ள விபரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாத்திமா தன் அலைபேசியில் தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார், பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன், மற்றும் இன்னுமொருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.  இப்பேராசிரியர்களை நிச்சயம் சட்டம் தண்டிக்க வேண்டும். இதில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மாணவி பாத்திமாவின் பாடமொன்றுக்கு முதலில் குறைந்த புள்ளிகளை இட்டிருக்கின்றார். பின்னர் மாணவி மீளாய்வு செய்யக்கூறியதும் அதிகரித்துள்ளார்.  இம்மாணவியின் தற்கொலை பற்றிய இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் இவ்விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகல பாடங்களிலும் உயர் பெறுபேறுகளைப்பெற்று வந்துள்ள மாணவி பாத்திமா இவ்விதமானதொரு முடிவினைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிய சென்னை ஐஐடி கல்வி நிறுவனப்பேராசிரியர்களால் அந்நிறுவனத்திற்கே அவமானம்.

Continue Reading →

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்!

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

1. 2015ற்குப் பின்னர் உருவான ஜனநாயகத்துக்கான வெளி தொடர்ந்தும் விரிவு படுத்தப்பட வேண்டுமா? இல்லை மீண்டும் அதற்கு முன்பு நிலவிய இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டுமா?

2. இறுதி யுத்தத்தில் மானுடப் படுகொலைகளைப்புரிந்த ஒருவர், எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் ஒருவர், இன்றும் இனவாதம் பேசும் இனவெறியர்களுடன் ஒன்றிணைந்து இனவாத அரசியலை முன்னெடுக்கும் ஒருவர் , தனது அதிகாரம் நிலவிய காலகட்டத்தில் வெள்ளைவான் கலாச்சாரத்தால் பல்லினச் சமூகங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஒருவர், நாட்டின் அரசியல் சட்டங்களை மதிக்காத ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

Continue Reading →

எம்ஜிஆரின் நடன அசைவுகள்!

எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி , இன்றும் சரி எம்ஜிஆரின் படங்களென்றால் அவை ஒரே மாதிரியானவை. கருத்துள்ள பாடல்களைக் கொண்டவை. காதல் பாடல்கள் இனிமையானவை. இவற்றுடன் தம் கருத்துகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல இன்னுமொரு விடயத்திலும் நன்கு சிறப்பாக செயற்படக்கூடியவர். அது அவரது நடனத்திறமை. திரைப்படங்கள் பலவற்றில் எம்ஜிஆரின் நடன அசைவுகளை அவதானித்தால் அக்காலகட்டக் கதாநாயக நடிகர்களில் அவரைப்போல் நடனமாடக் கூடிய நடிகர்கள் வேறு யாரையும் என்னால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. நடிப்புத்திறமை மிக்க நடிகர் திலகத்தால் ‘வண்டி தொந்தி’யுடன் விரைவாக, சிறப்பாக ஆட முடிவதில்லை. ஆனால் முறையான உடற் பயிற்சியினால் உடலைச் சிறப்பாகப்பேணிய எம்ஜிஆர் தனது இளமைப்பருவத்தில் மட்டுமல்ல வயது ஐம்பதைத்தாண்டிய நிலையிலும் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார்.

எம்ஜிஆரின் திரைப்பட நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தவையாக உடனடியாக நினைவுக்கு வருபவை: குடியிருந்த கோயிலில் எல்.விஜயலட்சுமியுடன் ‘ஆடலுடன் பாடல்’ பாடலுக்காக ஆடும் பஞ்சாபிய நடனம். இது பற்றி நேர்காணலொன்றில் எல்.விஜயலட்சுமி இப்பாடலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் வரையில் பயிற்சி செய்தே தன்னுடன் ஆடியதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடனத்திறமை மிக்க தன்னுடன் இணைந்து ஆடுவதற்காக என்று எம்ஜிஆரே கூறியதையும் அவர் நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார். ‘மதுரை வீரன்’ திரைப்படத்தில் ‘வாங்க மச்சான் வாங்க’ பாடலுக்காக அவர் இ.வி,சரோஜா குழுவினரின் கேலியைத் தொடர்ந்து ஆடும் காட்சியும் சிறப்பானது.

Continue Reading →