நினைவு கூர்வோம்: த.விமலேஸ்வரன்

த.விமலேஸ்வரன்யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புச் செயற்குழுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய த.விமலேஸ்வரனை நினைவூட்டிய முகநூல் உரையிது. இதனை முகநூலில் முகநூல் நண்பர் Sam Mer பகிர்ந்திருந்தார். இந்த உரையினை யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவனான  மட்டக்களப்பைச் சேர்ந்த  அ.விஜிதரன் கடத்தப்பட்டபோது  அவரது விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். பாத யாத்திரை மேற்கொண்டார்கள். சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்தார்கள். யாழ் நகரிலிருந்து வெளியான பத்திரிகைகளிலெல்லாம் விஜிதரனின் கடத்தலும், அவரது விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் முக்கிய இடத்தைப்பிடித்தன.

மாணவன் விஜிதரனுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் த.விமலேஸ்வரனும் ஒருவர். அப்போராட்டத்தின்போது விமலேஸ்வரன் ஆற்றிய உரையாக இதனை முகநூலில் பதிவு செய்த Sam Mer குறிப்பிட்டிருக்கின்றார். இந்த உரைக்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டிருந்தால் அது ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருந்திருக்கும்.

இவ்வுரை விமலேஸ்வரன் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்துகின்றது. இவரை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக, நண்பர்கள் கூற்றுகள் மூலமே அறிந்திருக்கின்றேன். 1963இல் பூநகரியில் பிறந்தவர். ஆரம்பத்தில் காலம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். தொடர்ந்தும் சமூக, அரசியற் செயற்பாடுகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கின்றார். இவரைப்போன்ற மானுட உரிமைப்போராளிகளை நினைவு கூரவேண்டிய காலகட்டமிது. நினைவு கூர்வோம்.

Continue Reading →

கணையாழி: ஆஷா பகேயின் ‘பூமி’ பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!

– கணையாழி சஞ்சிகையின் நவம்பர் 2019 இதழில் ‘ஆஷா பகேயின் ‘பூமி’! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!’ என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை. –


கணையாழி: ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!ஆஷா பகேயின் ‘பூமி’! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! | தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!மராத்திய எழுத்தாளரான ஆஷா பகேயின் முக்கியமான நாவல்களிலொன்று ‘பூமி’ பி.ஆர்.ராஜாராமின் மொழிபெயர்ப்பில் தமிழில் ‘சாகித்திய அகாதெமி’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஷா பகேயின் படைப்புகளில் நான் வாசித்த முதலாவது படைப்பு இந்த நாவல்தான். ஏற்கனவே சாகித்திய அகாதெமியினரால் வெளியிட்டப்பட்ட வங்க நாவலான ‘நீலகண்டப் பறவையைத்தேடி’, ‘தகழி சிவசங்கரம்பிளையின்’ ஏணிப்படிகள்’ மற்றும் ‘தோட்டி’, சிவராம காரந்தின் ‘மண்ணும் மனிதரும்’, எஸ்.கே.பொற்றேகாட்டின் ‘ஒரு கிராமத்தின் கதை’, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’ போன்ற நாவல்களின் வரிசையில் என்னைக்கவர்ந்த இந்திய நாவல்களிலொன்றாக ‘பூமி’ நாவலும் அமைந்து விட்டது.

இந்த நாவலின் கதையும் வித்தியாசமானது. மராத்திய டாக்டர் ஒருவருக்கும், தமிழ் நர்ஸ் ஒருவருக்கும் மகளாகப்பிறந்தவளே நாவலின் நாயகி. சிறு வயதிலேயே அவள் தந்தையை இழந்து விடுகின்றாள். தாயாரே அவளைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வருகின்றார். நாயகியின் மாணவப்பருவத்திலேயே தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகுகின்றது. தாயின் இறுதிக்காலம் மனதை அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியமான பகுதிகளில் அதுவுமொன்று. தாயாரும் இறந்து விடவே தனித்து விடப்படும் சிறுமியான நாயகியை அவளது தந்தையின் மராத்தியச் சகோதரி பம்பாய்க்குத் தன்னுடன் அழைத்துபோகின்றாள்.

நாவல் தமிழ்நாடு, பம்பாய் என இரு நகரங்களில் நடைபோடுகிறது. அத்தையுடன் வாழும் தன் இளம் பருவத்தில் பகுதி நேர வேலையாக மறைந்த பேராசிரியர் ஒருவரின் செல்வந்த மனைவிக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்ணாகவும் வேலை பார்க்கின்றாள். அச்சமயத்தில் பேராசிரியரின் வீட்டு நூலகத்து நூல்களெல்லாம் அவளது இலக்கியப்பசியைத்தீர்த்திட உதவுகின்றன.

மராத்தியக் கலாச்சாரத்தில் வாழும் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து பெரியவளாகும் நாயகி ஆரம்பத்தில் படிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், அவளது வாசிப்புப் பழக்கம் அவளுக்குக் கை கொடுக்கிறது. அவளது ஆளுமையினை ஆரோக்கியமான திசையை நோக்கித்தள்ளி விடுகிறது. அதுவே பின்னர் வெற்றிகரமான பெண்ணாகவும் உருமாற்றி விடுகிறது. அவள் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அச்செல்வந்தப்பெண்ணின் மகனையே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் திருமணமும் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்பு கலாநிதிப்பட்டமும் பெற்று பல்கலைக்கழகவிரிவுரையாளராகப் பணிபுரிகின்றாள்.

Continue Reading →