பதிவுகளில் அன்று: “ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்”

- சுகன் -

பதிவுகள் மார்ச் 2003 இதழ் 39

எங்கள் பரமபிதாவே!

சீதனத்தில் பாதித்தொகை
ஏஜென்சிக்குப் போய்விட்டது.

அரைவருடச் சம்பளத்தின் மிச்சம்
சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது.

ஒரு மாதச் சம்பளம்
இயக்கத்திற்குப் போன பின்
எனக்கென்று
ஆணிச் செருப்புக்கூட வாங்க முடியாதிருப்பதேன்?

Continue Reading →

பதிவுகளில் அன்று: சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி) கவிதைகள்!

- சந்திரவதனா செல்வகுமாரன் -

1.

பதிவுகள் செப்டம்பர் 2003  இதழ் 45
மனசு!

சூனிய வெளிக்குள்…….
மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.
உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.

நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ……….
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.

Continue Reading →

முகநூல்: ரோலண்ட் பார்த்ஸின் ஆசிரியரின் மரணம்

ரோலண்ட் பார்த்ஸ்“ஆசிரியரின் மரணம்” என்பது 1967 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இலக்கிய விமர்சகரும் தத்துவஞானியுமான ரோலண்ட் பார்த்ஸ் எழுதிய ஒரு கட்டுரை ஆகும் . இது மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் ஆத்திரமூட்டும் கட்டுரையாகும் (இது பல்வேறு கூற்றுக்களின் அடிப்படையில்) இலக்கிய விமர்சனத் துறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் மாற்றங்களையும் செய்கிறது .

இதில் ஒப்பீட்டளவில் கலைப் படைப்பின் மூலம், உரையை அணுகுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பாரம்பரிய வழியை பார்த்ஸ் விமர்சிக்கிறார் மற்றும் அசைக்கிறார், இது எழுத்தாளரை மையமாகக் கொண்டது: இது ஆசிரியரின் நோக்கங்களைத் தேடுவதிலும், வாழ்க்கையை பகுப்பாய்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. உரையின் உள்ளடக்கத்தை மட்டும் மதிப்பிடுவதற்கு பதிலாக உரையின் பொருளை கட்டவிழ்க்க ஆசிரியரின் பின்னணி அவசியமில்லை என்கிறது.

முதல் பத்தியில், பால்சாக் எழுதிய நாவலான சர்ராசினிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பினெல்லாவின் கதாபாத்திரத்தின் மூலம் தனது கட்டுரையில் அவர் முன்வைக்கும் அடிப்படை கருத்தை விளக்க பார்த்ஸ் முயற்சிக்கிறார்.

இந்த கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில், உண்மையில் ஒரு பெண்ணாக மாறுவேடமிட்ட ஒரு காஸ்ட்ராடோ (ஒரு காஸ்ட்ரேட்டட் ஆண்), பால்சாக் எழுதுகிறார், “ இது பெண், அவளது திடீர் அச்சங்கள், பகுத்தறிவற்ற விருப்பங்கள், அவளது உள்ளுணர்வு அச்சங்கள், அவளது தூண்டப்படாத துணிச்சல், அவளுடைய தைரியம் மற்றும் சுவையானது உணர்வின் சுவையாக இருக்கிறது. “

இந்த வெளிப்பாடுகளில் யாருடைய கருத்துக்கள் வெளிவருகின்றன என்பதை அறிய முடியுமா என்ற கேள்வியை பார்த்ஸ் எழுப்புகிறார். பேசும் அந்த நாவலின் தன்மை இவையா? பால்சாக் தனது முன்கூட்டிய அறிவு மற்றும் பெண்களின் தப்பெண்ணத்துடன் பேசுகிறாரா அல்லது அது வேறு யாரின் குரல்?

அடிப்படையில், ஒரு வாசகனாக பார்த்ஸ் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அந்த கதாபாத்திரத்தின் வழியாகவோ அல்லது வேறு ஒருவரின் வாயிலிருந்தோ வரும் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட பாத்திரம் என்ன பேசுகிறது என்பதை ஒருவரால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 354: மகாகவியின் குறும்பா தமிழுக்குப் புது வரவா?>

வாசிப்பும், யோசிப்பும் 354: மகாகவியின் குறும்பா தமிழுக்குப் புது வரவா?>
– கவிஞர் மகாகவியின் குறும்பா பற்றிய பயனுள்ள , ஆரோக்கியமான முகநூல் உரையாடலுக்கு ஜவாத் மரைக்கார் அவர்களின் ‘நவமணி’க் கட்டுரை வழிவகுத்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி. எனது முகநூற் பதிவும் , அதனையொட்டிய முகநூல் எதிர்வினைகளும் கீழே தரப்பட்டுள்ளன. – வ.ந.கி –


எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவொன்றில் ‘நவமணி’ பத்திரிகையின் ‘ஜலதரங்கம்’ பகுதியில் வெளியான ‘மகாகவியின் குறும்பா LIMERICKS’ என்னும் கட்டுரையினைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் ‘குறும்பா தமிழுக்குப் புதிய வடிவமன்று. ஏற்கனவே தமிழிலுள்ள நந்தவனத்திலோர் ஆண்டி’ என்னும் .சித்தர் பாடலையொத்தது’ என்றும் கூறியிருந்தார். அத்துடன் மேனாட்டுக் கவிதை வடிவங்களிலொன்றான ‘லிமரிக்’வுடன் ஒப்பிட்டு குறும்பாவும் .லிமரிக் கவிதை வடிவமும் ஒன்றல்ல என்றும் கூறியிருந்தார்.


மகாகவியின் குறும்பா கவிதை வடிவத்தைப் பலர் ‘லிமரிக்’ என்னும் ஆங்கிலக் கவிதை வடிவத்தின் தமிழ் வடிவமாகக் கருதுகின்றார்கள். உண்மை அதுவல்ல. குறும்பா தமிழுக்குப் புதிய வடிவம். குறும்பா நூலினை வெளியிட்ட அரசு பதிப்பக உரிமையாளர் எம்.ஏ.ரஹ்மான் ‘தமிழுக்குப் புதிய யாப்பும், புதுப் பொருள் மரபும் அமைத்து, தமிழ்க் கவிதையை வளப்படுத்தும் இக் கவிக்கோவை.’ என்று நூலுக்கான பதிப்புரையில் கூறுகின்றார்.


நூலுக்கு மிகச்சிறப்பானதொரு ‘முன்னீடு’ எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் எஸ்.பொ. அதிலவர் குறும்பா பற்றிய பல தகவல்களைத் தருகின்றார். அதில் அவரும் குறும்பாவை மகாகவி தமிழுக்குத் தந்த புது வடிவமாகவே குறிப்பிட்டிருக்கின்றார். குறும்பாவை லிமரிக்கின் தமிழ் மொழிபெயர்ப்பு எனக்கூறும் விமர்சகர்களை அவர் கடுமையாகச் சாடியிருப்பார். அதற்கு எடுத்துக்காட்டு பின்வரும் கூற்று:


“ஆற்றலிலக்கிய எழுத்தில் ஏற்பட்ட நபுஞ் சகத்தனத்தினலேயே ‘இலக்கிய விமர்சகர்கள்’ எனத் தம்மைக் கருதுவோர் நம் நாட்டில் அநேகர் உளர். சோம்பலை ஓம்பி, நுனிப் புல் மேய்ச்சலிடும் சுபாவமுள்ள அவர்கள், ‘குறும் பாக்கள் விமரிக்கின் மொழிபெயர்ப்பே’ என்று ஏக வசனத்திற் கூறிவிடுவார்கள். இது பிரமை அன்று. இக் குறும் பாக்களுட் சில இளம் பிறை’ மாசிகையிற் பிரசுரமான காலத்தில், தாழ்வுச் சிக்கலிஞலும், விரக்தியினுலும் சாம்பிக் கொண்டிருக்குஞ் சில ‘இலக்கியகாரர்’ இத்தகைய அபிப்பிராயம் ஒன்றைப் பரப்பியதை நான் அறிவேன்.”


இவ்விதம் விமர்சகர்கள் சிலரைச் சாடும் அவர் தொடர்ந்து இவ்விதம் கூறுவார்:


“குறும் பாக்களிலே சுயம்புவான கருத்து வீறும், மொழி வீச்சும், கற்பனை வளமும் இருக்கின்றன. இத் தன்மைகளே குறும்பா புதிய தமிழ்க் கவிதை முயற்சி என்பதை நிறுவுவதற்குப் போதுமானவை”

Continue Reading →