“இரவு முழுக்கவீட்டின்முன்னறையில்விளக்கெரியகுறுக்கும் நெடுக்குமாகஉலாத்திக்கொண்டிருந்தஅப்பாவின்கோபம் குளிர்ந்திருந்தது…..அதே அறையில்கிடத்தி வைக்கப்பட்டிருந்தஅப்பாவின்உடலும்குளர்ந்திருக்கஓயாமல்எரிந்து கொண்டேஇருக்கின்றதுஅவ்வறையின்குண்டு பல்பும்அக்கா எழுதிச் சென்றகடிதமும்……” suniljogheema@gmail.com
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை. தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து டிவோலி ,லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை நேரத் திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன் அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன்.ஞாயிறுகளில் வார விடுமுறை வந்தால் சவுகரியமாகப் போய்விடும், பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .அது ஒரு வகை அனுபவம் .