நூல் அறிமுகம்: ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’

ஆசி.கந்தராஜின் 'செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்'– தினமணி பத்திரிகையில் (தினமணி.காம்) தனது நூலான  வெளியான ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ நூல் மதிப்புரையினை எழுத்தாளர் ஆசி.கந்தராஜா அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொளீன்றோம். நன்றி. –


சுஜாதா தமது ‘கற்றதும் பெற்றதுமில்’ இப்படி எழுதி இருந்தார் ஒருமுறை.. அதாவது இனிமேற்கொண்டு தனக்கு புத்தகம் அனுப்புபவர்கள் சமையல் குறித்த புத்தகங்களை அனுப்பினால் அதை வாசிக்க தனக்கு மிகவும் இஷ்டம் என்று. இதை சுஜாதாவின் மொழியில் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் சொன்னதின் அர்த்தம் இது தான். அந்த நேரத்தில் அவர் கையில் ஆசி.கந்தராஜாவின் ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ புத்தகம் கிடைத்திருந்தால் ஒருவேளை உச்சி முகர்ந்திருப்பாராயிருக்கும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

*‘மாமிக்கு ஊர் அரிசிப் புட்டுக்கு, நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியல் வேண்டும். பொரியலுக்கு மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் தோதுப்படாது’
*‘ஒரு வாய்க்குள் அடங்கக்கூடிய இனிப்பான சின்னச்சின்ன மோதகங்கள் அவை, பொரித்த மோதகங்கள் ஒவ்வொன்றாக வாய்க்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தன’
*வீரசிங்கத்தார் சாமான் வாங்குவது ஒரு தனிக்கலை. கத்தரிக்காயென்றால் ஊதா நிற லெபனீஸ் கத்தரிக்காய், கிறீஸ்லாந்து பால் வெண்டி, வியட்நாம் கட்டைப் பாவற்காய், இலங்கை பச்சை மிளகாய், கோயம்பத்தூர் உலாந்தா முருங்கை, பிஜி நாட்டு புடலங்காய் என அவரது காய்கறிப் பட்டியல் கோளமயமாகும்.
*இந்த மனுஷன் மூண்டு நேரமும் லெபனீஸ் ‘ஷவர்மா’ சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏத்திக் கொண்டு வரப்போகுது’ – என பணி நிமித்தம் மூன்று ஆண்டுகள் லெபனான் செல்லும் வீரசிங்கத்தைப் பற்றி அவரது மனைவி கொள்ளும் கவலை.

இப்படி புத்தகத்தில் ஏராளமான ருசிகரத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

Continue Reading →