– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்ஸில் வசிக்கின்றார். கவிதை, நாவல், புனைகதை என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்தது.. பிரெஞ்சு எழுத்தாளர் மார்கெரித் த்யூரா எழுதிய நாவலொன்று ‘காதலன்’ என்னும் பெயரில் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:
“இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத்தொடங்கித் தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். பிரான்சு நாட்டில் ‘ நிலா’ என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் “நீலக்கடல்” தமிழக அரசின் பரிசினைனையும், இரண்டாவது நாவல் ‘மாத்தா கரி’ கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐன்து சிறுகதை தொகுப்புகள்; ஐந்து நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; எட்டு கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு ஆகியவை இவரது உழைப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய மாத்தாஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது. “
முழுமையான விக்கிபீடியாக் குறிப்புக்கான இணைய இணைப்பு: https://ta.wikipedia.org/s/tqe
‘பதிவுகள்’ இணைய இதழில் அன்று இவர் எழுதிய கவிதைகளிவை.
1.
பதிவுகள் சித்திரை 2001 இதழ்-16
எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்..
நேற்றைய கனவில் நீங்கா முகமும்
நெடு நாளாக தேடும் முகமும்
சோற்று வாழ்வில் சுகப்படும் முகமும்
சொந்தம் வேண்டாம் சொல்லிடும் முகமும்
ஏக்கக் கேணியில் இறங்கிய முகமும்
ஏப்பம் கண்களில் நிறுத்திய முகமும்
எல்லாம் எனக்கே என்றிடும் முகமும்
எல்லாம் தனக்குள் பேசிடும் முகமும்
கூடும் முகமும் குலவும் முகமும்
குறைகளை நிறைவாய் காட்டும் முகமும்
வாடும் முகமும் வணங்கும் முகமும்
வாழ்வுக்காக ஏங்கும் முகமும்
Continue Reading →