மனக்குறள்:28 , 29 & 30

மனக்குறள் 9 & 10

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி

வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !

ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !

இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !

சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !

எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !

முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !

கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !

போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !

ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !

மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !

Continue Reading →

முனைவர் நா. நளினிதேவியின் ‘இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்’ என்ற நூலை முன்வைத்து..

எழுத்தாளர் எஸ்.பொ.வின் நினைவு தினம் நவம்பர் 26. அவர் நினைவாக..

எஸ்.பொமுனைவர் நா. நளினிதேவியின் 'இலக்கியப் போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப்பார்வையும்' என்ற நூலை முன்வைத்து..ஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை எஸ். பொன்னுத்துரை ஆவார். தமிழிலக்கியத்ததின் அனைத்துத் துறைகளையும் இவர் தொட்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் தமிழுலகில் பேசப்படும் ஆகச் சிறந்த இலக்கியங்களாகும். இவை காலங்கடந்தும் நிலைத்து நின்று இமாலய வெற்றி பெறும் என்பதை  ஆராய்ந்து இந்நூலில் நிறுவியுள்ளார்.

எஸ்.பொ.அவர்களின் படைப்புகளான சிறுகதை, புதினம், நாடகம்;, கவிதை, உரைநடை, காவியம், வரலாறு மற்றும் மொழிபெயர்ப்புகள் என ஒவ்வொன்றையும் தீவிரமாகப் படித்து, அலசி ஆராய்ந்து, ‘இலக்கியப்போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும்’ என்ற தலைப்பில் நூலாக்கம் செய்தவர் முனைவர் நா.நளினிதேவி. இவரது பல சிறந்த ஆக்கங்களில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எஸ்.பொவின் நூல்கள் முழுமையும் நளினிதேவி ஆய்வுக்குட்படுத்தியதை அறிந்த எஸ்.பொ. மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, இக்கட்டுரைகளை மித்ர பதிப்பகத்திலேயே நூலாக்கம் செய்யலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்தார்.

நளினிதேவி அவர்கள் எஸ்.பொ.வின் ஒவ்வொரு படைப்புகளையும் படித்ததோடு உடனுக்குடன் ஐம்பதுஃஅறுபது பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஞானிஅய்யாவிற்கு அனுப்பிவிடுவார். எஸ்.பொ.வின் அனைத்துப் படைப்புகளையும் குறைந்தது அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார்.  அக்கட்டுரைகளை ஒளியச்சு செய்வதற்காக வாங்கிச் சென்ற நபர் எந்த தொடர்பும் கொள்ளமுடியாமல் போனதால்,  கையெழுத்துப் பிரதிகள் எதுவும் கைக்குக் கிட்டவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்டார் நளினிதேவி. எஸ்.பொ. ஆசுரேலியா சென்றுவிட்டார். உடல்நலம் குன்றிவிட்டார். எஸ்.பொ.அவர்கள் தன்கட்டுரையைப் பார்த்துவிடவேண்டும் என்று அதி விரைவாகச் செயல்பட்டார் நளினிதேவி.

Continue Reading →

பதிவுகளில் அன்று: திலகபாமா கவிதைகள்

எழுத்தாளர் திலகபாமா– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் —

– எழுத்தாளர் திலகபாமா கவிதை, சிறுகதை, விமர்சனம் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பு செய்து வருபவர்.  பட்டி வீரன் பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருபவர். இவரது கவிதைத்தொகுப்புகள்,  சிறுகதைத்தொகுப்புகள் , கட்டுரைத்தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ‘கழுவேற்றப்பட்ட மீன்கள்’ என்பது இவரது வெளிவந்த நாவலாகும். ‘பதிவுகள்’ இணைய இதழின் ஆரம்ப காலத்தில் இவர் தன்  எழுத்துலகப் பயணத்தைத்தொடங்கியவர். பதிவுகள் இணைய இதழிலும் இவரது படைப்புகள் பல வெளியாகியுள்ளன. அவ்விதம் வெளியான கவிதைகளே இங்கு பதிவாகின்றன. இவரைப்பற்றிய விரிவான விக்கிபீடியாக் குறிப்புகளுக்கு: https://ta.wikipedia.org/s/olr


1.
பதிவுகள் ஏப்ரில் 2002 இதழ் 28
தவம்

கிடக்கும் கல்
சாபம் தந்ததாய் உன்
சாணக்கிய சிரிப்பு
கட்டிய தாலிக்காய்
உடைமை ப் பொருளாய் எனை
சந்தித்த உன்னிடமிருந்து
விமோசனம் தந்த வரமாய்
என் சிந்திப்பின் தித்திப்பு
காலால் தீண்டி
பெண்ணாய் மாற்றும்
அவதாரம் நாடாது
கலையை நெஞ்சில் கொண்டு
சிலையாய் மாற்றும்
சிற்றுளிக்கும்
தாங்கிய கைதனுக்கும்
காத்திருக்கும் என் தவம்

Continue Reading →

பதிவுகளில் அன்று: நட்சத்திரவாசி (பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான்) கவிதைகள்

 முஜீப் ரகுமான் (– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் —

– பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான்  உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் என ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை மற்றும் கவிதைகளை எழுதிவருபவர்.  நட்சத்திரவாசி என்னும் புனைபெயரில் இவர் அன்று பதிவுகள் இணைய இதழில் எழுதிய கவிதைகளிவை. இவரது வலைப்பதிவு: நட்சத்ரவாசியின் தளம் (https://natchathravasi.wordpress.com/). –


பதிவுகள் டிசம்பர் 2010  இதழ் 132
கடைசி வேட்டை

ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன்\
பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது
யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான்
மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில் என்னை காண்கிறேன்
எனது தேசத்தில் எனக்கிருந்த வீடும்,ஊரும் இல்லாமல் போயிற்று
என்னை ஆண்ட காதலியவளின் முகமும் கூட
ஒரு மின்னல் வெட்டென வந்து போகிறது அவ்வப்போது நினைவுகள்
எனது குழந்தைகளிடன் நான் கொண்ட பாசம் கண்ணீராய்
வானத்தில் ஊர்ந்து போகிறது வெண்ணிற மேகக் கூட்டமாய்
அது எங்கோ மழையாய் பெய்யக் கூடும் என் சோகம் சொல்லி
எனினும் வறண்ட பாலையில் தூசிக்காற்றாய் சுழலும்
உயிரின் பொடிதுகள்கள் உயிராக வேண்டி தியானிக்கின்றன
அவனோ ஏழு வானங்களுக்கு மேல் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான்
அவனுக்கு தெரியாததல்ல தனிமையும்,உவர்ப்பும்
மந்திரத்தால் அவனை வசியம் செய்து எனதுயிரை என்னிடம்
சேர்க்கும் வல்லமையுடையவன் யாரோ எப்போது வர கூடுமோ
எனினும் நான் காத்திருக்கிறேன்
எனது ஊரின் ரம்மியமான பொழுதுகளை குடித்து
காதல் போதையை கிரகித்து ஊன் அழிய சிதிலமாய்
போகுமிந்த உயிர்கூட்டில் கடைசி வேட்டை எப்போதோ சொல்லிவிடு
அதற்கு முன்னால் எனக்கொரு சேதியனுப்பவேண்டும்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!

- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) – பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –

– எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் மட்டுமல்லர்; சமூக அரசியற் செயற்பாட்டாளரும் கூட. எழுத்துத்துறையுடன் பதிப்பகத்துறையிலும் நாட்டம் மிக்கவர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு எனப் பன்முகப்பங்களிப்பு ஆற்றி வருபவர். தனது சொந்தப்பதிப்பகமான ‘அநாமிகா ஆல்ஃபெட்ஸ்’ பதிப்பகத்தினூடு நூல்களை வெளியிட்டு வருமிவர் ரிஷி, அநாமிகா போன்ற புனைபெயர்களிலும் எழுதி வருகின்றர்.  –


1.

 

பதிவுகள் நவம்பர் 2000 இதழ் 11
நந்தவனத்திலோர் ஆண்டி – ரிஷி –

உலகின் அரும்பூக்கள் பல கோடி
பூத்துக் குலுங்கும் திருப் பூங்காவனம்
உனது.
துலங்கும் அவற்றின் தனிநிறங்களும், நறுமணங்களும்
உயிரைத் துளிர்க்கச் செய்ய
தோட்டமும், தென்றலும் தம்முள் கலந்து
கிளையசைத்துத் தந்தவை சிலவும்
நாட்டம் மிக நான் கொய்தவை சிலவும்
சுடர்க்கொடி யாகி நின்றேன் சூடி.
வாடியழுதாய் நீ வழிதொலைந்ததாய்
அடர்காட்டில்.
‘அடிக்கு அடி ஊற்றுக்கேணி யிருக்கும்
அகன்று படர்ந்த சர்க்கரைத் தேனாற்றில்
அட, ஒரு கை யள்ளினாலென்ன
கொள்ளை போய் விடுமா சொல்?
வெள்ளையாய் கேட்டது உள்.
(வினாவும் விடையும் எல்லாம்
வெறும் பாவனையின்றி வேறில்லை கொள்.)
– கொள் இன்றில் தன் தேடலின்
நல்வரவாய்
இன்னொரு கரம் என் பூவனம் பரவப்
பெறும் பாழ்வெளியில் தன்
கால்மாற்றிக் கொண்டுணரும் உன்
வலியின் கனபரிமாணங்களை.

Continue Reading →

பதிவுகளில் அன்று: நாகரத்தினம் கிருஷ்ணா கவிதைகள்

– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –

தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்ஸில் வசிக்கின்றார். கவிதை, நாவல், புனைகதை என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்தது.. பிரெஞ்சு எழுத்தாளர் மார்கெரித் த்யூரா எழுதிய நாவலொன்று ‘காதலன்’ என்னும் பெயரில் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:

“இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத்தொடங்கித் தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். பிரான்சு நாட்டில் ‘ நிலா’ என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் “நீலக்கடல்” தமிழக அரசின் பரிசினைனையும், இரண்டாவது நாவல் ‘மாத்தா கரி’ கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐன்து சிறுகதை தொகுப்புகள்; ஐந்து நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; எட்டு கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு ஆகியவை இவரது உழைப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய மாத்தாஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது. “

முழுமையான விக்கிபீடியாக் குறிப்புக்கான இணைய இணைப்பு: https://ta.wikipedia.org/s/tqe

‘பதிவுகள்’ இணைய இதழில் அன்று இவர் எழுதிய கவிதைகளிவை.


1.

பதிவுகள் சித்திரை 2001   இதழ்-16
எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்..

நேற்றைய கனவில் நீங்கா முகமும்
நெடு நாளாக தேடும் முகமும்
சோற்று வாழ்வில் சுகப்படும் முகமும்
சொந்தம் வேண்டாம் சொல்லிடும் முகமும்

ஏக்கக் கேணியில் இறங்கிய முகமும்
ஏப்பம் கண்களில் நிறுத்திய முகமும்
எல்லாம் எனக்கே என்றிடும் முகமும்
எல்லாம் தனக்குள் பேசிடும் முகமும்

கூடும் முகமும் குலவும் முகமும்
குறைகளை நிறைவாய் காட்டும் முகமும்
வாடும் முகமும் வணங்கும் முகமும்
வாழ்வுக்காக ஏங்கும் முகமும்

Continue Reading →