வாசிப்பும், யோசிப்பும் 258: 32 நாடுகளைச்சேர்ந்த 1000 கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு!

32  நாடுகளைச்சேர்ந்த 1000 தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து செல்லமுத்து வெளியீட்டகம் (வள்ளுவர்புரம்) என்னும் பதிப்பகம் வெளியிடவுள்ளது. இத்தொகுப்பின் வெளியீட்டுக்கான செயலியக்குநராக இருக்கின்றார் இளம் எழுத்தாளர் யோ.புரட்சி. ஈழத்தமிழர்…

Continue Reading →

ஆய்வு: உயிரின பரிணாம வளர்ச்சி சிந்தனையும், பண்டையத் தமிழரின் கருத்தமைவும்.

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இயற்கை, இயற்கைச் சார்ந்தப் பொருட்களின் இயக்கமே பொதுவிதியாம்.  இவ்வியற்கை விதியில்  மனித குலத்தின் தோற்றமும் அடங்கும்.  புவியில்  ஓரு  செல் உயிரிகள் தோற்றம் பெற்று, பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து,  அவை நீர் வாழ்வன, நீர், நில வாழ்வன, நிலவாழ்வன எனப் பன்முகப்பட்டு, மெல்லுடலி, குடலுடலி, முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை, குட்டி ஈனுபவை, முது நாண் அற்றவை, முது நாண் உடையவை எனப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.    இவற்றுள் ‘மனிதனின் பரிணாம வளர்ச்சி’ வியக்கத்தக்கது. 

மனிதக்குரங்கு மனிதனாக மாறிய வளர்ச்சி நிலையை, டார்வின் கோட்பாடும், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கருத்தியலும் தெளிவுற எடுத்துரைத்தன.  டார்வினின் ‘தக்கவை பிழைத்தல்’ கோட்பாடானது, இவ்வியற்கை உலகில் ‘தம்மைத் திருத்திக் கொண்டு வாழத் தகுதியற்ற உயிரினங்கள் மடிந்து போகும்’ என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டோடு விளக்கியது.  இக்கருத்தியல் மதக்கருத்துக்களுக்கு நேர்மாறாக,பல்வேறு புதிய சிந்தனைகளையும், உண்மைகளையும் உலகிற்கு எடுத்துரைத்தது.

பண்டைக் காலத்தில் மனிதன் வளர்ச்சியடைந்தப் பின்னர், அதாவது நாடோடி வாழ்க்கைக்குப் பின்னர் நிலையான குடியிருப்பை அமைத்து,உற்பத்திக் கருவிகளை உருவாக்கிய காலக் கட்டத்திலும், அதற்குப் பின்னரும் இயற்கை பொருட்களையும், அதன் மாறுபாடுகளையும் தொடர்ச்சியாக ஆராய்ந்துள்ளான்.  மதவாதிகள் ஒருபுறமும், இயற்கையியலாளர்கள் மறுபுறமுமாய் இவ்வுலகைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

Continue Reading →

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும் ! – பகுதி 2: அகிலாவின் கதை (1 – 5)

– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது.

பகுதி இரண்டு  – அகிலாவின் கதை: அத்தியாயம் ஒன்று –   குழம்பிய நெஞ்சம்

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். நித்திரையோ வரவே மாட்டேன் என்கிறது. இரவோ நள்ளிரவையும் தாண்டி விட்டது. அப்பா கூடத்தில் குறட்டை விட்டுத் தூங்குவது இலேசாகக் கேட்கிறது. என் நெஞ்சிலோ அமைதியில்லை. அமைதி எப்படி வரும்? நத்து ஒன்று விட்டு விட்டுக் கத்துவது இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு காதில் கேட்கிறது. மீண்டுமொரு முறை புரண்டு படுக்கிறேன். பல்வேறு வகைப்பட்ட எண்ணங்கள். எண்ணங்கள். மனது அன்று மாலை குளக்கரையில் நடந்த சம்பவத்தையே அசை போட்டபடி. கருணாகரனின் உருவம் நெஞ்சில் வந்து சிரிக்கின்றது. உயர்ந்து திடகாத்திரமான அந்த உருவம். இதயத்தையே துளைத்து விடும் அந்தக் கண்கள். சதா சிந்தனையிலேயே மூழ்கிவிடும் அந்த அழகு வதனம். என்னால் நம்பவே முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. கருணாகரன் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி என்பது முன்பே தெரிந்து தானிருந்தது. ஆனால் அவன் செய்த குற்றம் இத்தகைய கொடுமையானதாயிருக்குமென்று நான் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தன் குழந்தையைப் போல அவனை வளர்த்து வந்த சுப்பிரமணிய வாத்தியாரிற்கு அவன் செய்த கைம்மாறு. காயத்ரீக்கு அவன் செய்த மன்னிக்கவே முடியாத அந்தக் கொடுமை. எப்படி அவனால் அவ்விதம் செய்ய முடிந்தது. கருணாகரன். எழுத்தாளன் நீலவண்ணனின் மறுபக்கம் இத்தனை கொடுமையானதாயிருக்க வேண்டும். என்னால் நம்பவே முடியவில்லையே. அவன் முகத்தில் விழிப்பதே பாவம் போலவிருக்கின்றது. பெண்களின் உணர்வுகளைச் சிறிதும் மதிக்காத ஆண்கள் வாழும் உலகின் ஒரு பிரதிநிதிதானே அவனும். செய்த தவறிற்காக அவன் மனம் வருந்துவது உண்மையாக இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சிதைந்துவிட்ட காயத்ரீயின் வாழ்வு. நடைப்பிணமாகவே மாறிவிட்ட சுப்பிரமணிய மாஸ்டரின் நிலைமை. கருணாகரன் மேல் வெறுப்பு வெறுப்பாக வந்தது. செய்த பாவங்களிற்குப் பரிகாரமாகத்தான் சமூகவேலை. அது இதென்று அலைகின்றானோ. இருக்கலாம். சிந்தித்து சிந்தித்து புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். தெளிவுபெறுவதற்குப் பதில் மேலும் மேலும் குழம்பிப்போனதுதான் மிச்சம். எங்கோ ஒரு சேவல் கூவியது. அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று சேவல்களின் கூவல்கள்.தொடர்ந்து இரவின் நிசப்தம்.இப்படித்தான் சிலவேளைகளில் சில சேவல்கள் நேரம் மாறிக் கூவிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க ஆரம்பத்தில் கருணாகரன் மேல் இருந்த வெறுப்பு சிறிதுசிறிதாக குறைவதுபோல் பட்டது. மனிதர்கள் அடிக்கடி தவறு செய்துவிடுகிறார்கள். சிலவேளைகளில் செய்யும் தவறுகள் சிறிதாக இருந்துவிடுகின்றன. இன்னும் சிலவேளைகளிலோ பெரிதாக இருந்துவிடுகின்றன. ஆனால் செய்ததென்னவோ தவறு தவறு தானே. மனிதனின் மனதில் நல்ல உணர்வுகளும் கெட்ட உணர்வுகளும் உறைந்து கிடக்கின்றன. சில கணங்களில் சில கெட்ட குணங்கள்,உணர்வுகள் ஆட்சி செலுத்தி விடுகின்றன. அந்தக் கணங்களில் மனிதன் தன் மனிதத்துவத்தை இழந்து மிருகமாகி விடுகிறான். பின்னால் கிடந்து வேதனையினால் வெந்து துடித்துப் போகின்றான். கருணாகரனின் கதையும் இதுதானே.

தொடர் நாவல்: மண்ணின் குரல் (6 -10)

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -– 1984  இல் ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’.  ‘புரட்சிப்பாதை’ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் ‘புரட்சிப்பாதை’ நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. –

அத்தியாயம் ஆறு: கமலா எங்கே?

நாட்கள்தான் எவ்விதம் உருண்டோடி விடுகின்றன. ‘காலம் தான் காத்து நிற்பதில்லையே. கமலா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்து ஏறத்தாள ஒரு வாரம் கழிந்து விட்டது. இந்த ஒரு வாரமாக அவளடைந்த  மன வேதனை  வார்த்தையில் அடங்காது. கிராமத்தவர்கள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வந்தபடி ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்கள். நடராஜா வாத்தியாரோ எதிலுமே பற்றற்றவராய் சுருட்டொன்றைப் புகைத்தபடி திண்னையில் குந்திவிடுவாராயின் அவரை எழுப்புவதே பெரும்பாடாகப் போய்விடும். சாரதாதான் ‘அப்பு உள்ளுக்கு வந்து இரணை”. என்று வற்புறுத்தி ஒரு மாதிரி அவரை உள்ளுக்குள் கொண்டு வந்து விடுவாள். அதன் பிறகுதான் அவளுக்கு ஓரளவாவது ஆறுதல். கமலாவின் போக்கும் முன்பு மாதிரியில்லை. பெரிதும் மாறித்தான் போய்விட்டாள். சாரதாவே வீட்டு வேலைகளையெல்லாம் கவனித்துக் கொண்டாள். எவ்வளவுதான் முற்போக்காய் இருந்தபோதிலும் கமலாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவளை அச்சம்பவம் பெரிதும் பாதித்து விட்டது.

எந்நேரமும் சிந்தனையில் மூழ்கியவளாகவேயிருந்தாள். ஒருகணம் “இனியும் நான் வாழ்வதில் என்ன பயன்?” என எண்ணுவாள். மறுகணமே “நான் சாவதால் மட்டும் பெண்களின். எம் தமிழ்ப் பெண்களின் அவலநிலை மாறிவிடுமா?” இவ்விதம் எண்ணமிடுவாள். ‘இதுவரையில் ஈஸ்வரனின் நினைவொன்றுடன் வீட்டிற்காக உழைத்தேன். ஆனால் இனிமேலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பழைய வாழ்வினில் என்னால் இறங்கவே முடியாது. பெண்களும் அக்கிரமங்களுக்கெதிரான போரில் ஆண்களுடன் சேர வேண்டிய காலம் வந்துவிட்ட்து’. முரண்பட்ட எண்ணப் போக்குகளுக்குள் சிக்கியவளாக அலைமோதிக் கொண்டிருந்த கமலாவின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக இருந்தது. இதே சமயம் சிங்கள இராணுவத்தினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருந்தன. நீண்டதொரு தற்காப்பு போர் முறையைப் பற்றியதொரு சிந்தனைக்குச் சகல தமிழர்களும் தள்ளப்பட்டிருந்தார்கள். உணர்ச்சி வெறியில் மேற்கொள்ளப்படும் சிங்கள இராணுவத்தினர் மீதான சிறுதாக்குதல்கள் ஏற்படுத்திய அழிவுகள் தமிழ் மக்களை விடுதலைப் போராட்டம் பற்றிய தீவிர சிந்தனைக்குத் தள்ளியது. பல்வேறு வகைப்பட்ட சித்தாந்த வேறுபாடுகளைக் கொண்டதாக விளங்கிய விடுதலை இயக்கங்களைப் பற்றி நன்கு புரிந்து எடை போடுவதற்கு முதன் முதலாக சகல தமிழர்களும் முயன்றார்கள். நாளுக்கு நாள் சீர்குலைந்து கொண்டுவந்த தமிழீழத்தின் நிலமை தமிழர்களை ஒற்றுமையின் அவசியம் பற்றியும் நீண்ட கால தற்பாதுகாப்புடன் கூடியதொரு போர்முறை பற்றியும் முன்னெப்போதையும் விட மிக அதிகமாகவே இப்போது சிந்திக்க வைத்தன.

Continue Reading →

மொழிபெயர்ப்புச் சிறுகதை: வெள்ள நிவாரண முகாம்

சிறுகதை வாசிப்போமா?நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.

அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.

அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.

பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.  

Continue Reading →

பயணியின் பார்வையில் : “ சிங்கத் தமிழர் நாமென்றால் சிங்கக் கொடியும் நமதன்றோ ” எனக்கவிதை பாடியவரின் மனைவியின் இன்றைய நிலை! புதுவை இரத்தினதுரையின் பிறந்த திகதியை தெரிந்துவைத்திருக்கும் சிங்களப் புலனாய்வு எழுத்தாளர்…?!

மு.கனகராசன்” உங்களுடைய கையெழுத்து அழகாக  இருக்கிறது” என்றேன்.  “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான      புன்னகை.       பல  எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது  போன்று      அழகாக    அமையவில்லை   என்பது  என்னவோ  உண்மைதான். வேறு எந்தத்  தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத்    தொடங்கியவர்களின் வரிசையில்     இடம்    பெற்றவர்  மு.கனகராசன். இவர்       பணியாற்றிய   பத்திரிகைகள்   பல.       இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      நான்     அறிந்த வரையில்   மு.க.       என   எம்மால்  அழைக்கப்பட்ட    மு. கனகராசன், சுதந்திரன் – தேசாபிமானி – புதுயுகம் , தினகரன்  முதலான  பத்திரிகைககளிலும்   சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர்.  சிற்பி  சரவணபவனின்  கலைச்செல்வி,  செல்வராஜாவின்      அஞ்சலி   முதலான  இலக்கியச்  சிற்றேடுகளில்  வேலை     செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும்  மல்லிகை தொடர்பாக      அவ்வப்போது  ஆலோசகராக  இயங்கினார்.       மரணப்படுக்கையில்      விழுவதற்கு முன்னர் இறுதியாக       தினகரனில்  வாரமஞ்சரியை  கவனித்துக்கொண்டிருந்தார். கவிதை, சிறுகதை , நாடகம், மொழிபெயர்ப்பு,  இதழியல்  முதலான துறைகளில்       ஈடுபாடு      கொண்டிருந்த  மு.க  சிறிது காலம்    சோவியத் தூதுவராலயத்தின்      தகவல் பிரிவிலும்    வேலை செய்தார்.  எழுத்தாற்றல்   மிக்க  இவரது படைப்புக்கள்  நூலாக வெளிவருவதில்தான்     எத்தனை  தடைகள்,  தடங்கல்கள்  ஏமாற்றங்கள். ‘கெமுனுவின் காதலி’  என்ற  சிறிய நாடக  நூலை அச்சுக்கூடத்திலிருந்து  பெறுவதற்கு முடியாமல் பொருளாதார  நெருக்கடியில்      தவித்தார். ‘முட்கள்’      கவிதை    நூலிற்கு   பேராசிரியர்    க.கைலாசபதியின் முன்னுரையைப் பெற்று      அச்சடித்து       ஒப்புநோக்கப்பட்ட    படிகளை  மாத்திரம்      சுமார்     ஒரு   வருடகாலம்     கொண்டலைந்து இறுதியில்   ஒருவாறு      அச்சிட்டு   வெளியிட்டார். ‘பகவானின்   பாதங்கள்’  கதைத் தொகுதியும்  பல  சிரமங்களுக்கு  மத்தியில்  வெளியானது. இந்தத்தொகுப்பு  சற்று வித்தியாசமானது.      இதில் இடம்பெற்ற  ஒவ்வொரு     சிறுகதை பற்றியும்      அதனைப்படித்தவர்கள்     எழுதிய   நயப்புரையையும்   இணைத்து நூலை  தொகுத்திருந்தார்.

“சிங்கத்      தமிழர்    நாமென்றால்      சிங்கக்     கொடியும்     நமதன்றோ” என்று  துணிச்சலாக   கவிதையும்   எழுதிய மு.க.1983    இனவாத  வன்செயலின்போது   மனைவியுடன்  தமிழகம் சென்று – அண்ணா நகரில்  சிறிது காலம்  குடியிருந்தார்.” இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த படைப்பாளி, பத்திரிகையாளர் மு. கனகராசன் பற்றி எனது திரும்பிப்பார்க்கின்றேன் என்ற  தொடரில் ஒரு கட்டுரையை தொடங்கி, பின்வருமாறு அதனை  நிறைவுசெய்திருந்தேன். ” எப்பொழுதும்     விரக்தியாகச்    சிரிக்கும்     இயல்பினைக்    கொண்டிருந்த  மு.க. அறிவாலும்   ஆற்றலினாலும்  எங்கோ   உயர்ந்திருக்கவேண்டியவர்.  கரடு  முரடான மேடுபள்ளங்கள்      நிறைந்த  வரட்சியான  வாழ்க்கைப்பாதையை  அவராகத்  தேர்ந்தெடுத்தாரா   அல்லது  சூழல்  அவருக்கு   பூரண   விடுதலையை  கொடுக்கத்தவறியதா…? என்பது  அவிழ்க்க முடியாத  புதிர் முடிச்சு.

Continue Reading →

தொடர்நாவல்: வன்னி மண் (6 – 9)

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.

அத்தியாயம் ஆறு: புயல் தந்த நண்பர்கள்!

இந்தப்புயலினால் ஏற்பட்ட முக்கியமான மாற்றம், சிலாபம் நீர்க்கொழும்பு பகுதிகளிலிருந்தெல்லாம் தமிழர்கள் பெருந்தொகையாக வந்து குடியேறத் தொடங்கிவிட்டார்கள். காட்டை அழிக்கும் வேலையைப் புயல் ஏற்கனவே செய்துவிட்டிருந்தது. குடியேறுவதற்குப் பெரிதும் துணையாக விருந்தது. எங்கள் வீடுகளைச் சுற்றி ஆங்காங்கே குடிசைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதுவரை காலமும் மனித நடமாட்டம் குன்றித் தனிமையிலிருந்த குருமண் காட்டுப் பிரதேசத்தின் நிலைமை மாறிவிட்டது. புதிய மனிதர்களின் வரவு அப்பகுதிக்குக் கலகலப்பை ஏற்படுத்திவிட்டது. அப்படி வந்தவர்களில் சிலரும் உண்மையில் கலகலப்பானவர்களாகத்தானிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆறுமுகம். ஆறுமுகம் குடும்பம் நீர்க்கொழும்புப் பகுதியிலிருந்து வந்திருந்தது. ஆறுமுகத்திற்கு ஐந்து பிள்ளைகள்; இரண்டு பெண்கள். மூன்று ஆண்கள். மூத்த பெண்ணைத் தவிர மற்றெல்லோரும் ஏறத்தாழ எங்கள் வயதை ஒத்தவர்கள். இந்தப்புயலால் வந்த இன்னுமொரு இலாபம் எமக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.

வாசிப்பும், யோசிப்பும் 257: செழியனின் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..’ (வானத்தைப் பிளந்த கதை) மற்றும் மஹாஸ்வேதாதேவியின் ‘இலக்கம் 1084இன் அம்மா’

செழியனின் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..’ (வானத்தைப் பிளந்த கதை)

கவிஞர் செழியன்ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து...சிறந்த நாவல்கள் பலவற்றின் தொடக்க வசனங்கள் முக்கியமானவை. வாசகர்களைத் தட்டியெழுப்பி வாசிப்பிற்குள் மூழ்க வைப்பவை. மிகவும் புகழ் பெற்ற நாவல்களிலொன்றான ‘ஹெர்மன் மெல்வில்லின்’ ‘மோபி டிக்’ நாவலின் முதல் வசனம் ‘என்னை இஸ்மாயில் என்று அழையுங்கள்’ (Call me Ishmael)  என்று தொடங்கும். மறக்க முடியாத முதல் வசனத்தை உள்ளடக்கிய நாவல்களில் மோபி டிக்’கிற்கு முக்கியமானதோரிடமுண்டு.

இன்னுமொரு நாவலின் தொடக்கமும் வாசகர்களைத் தட்டெயெழுப்பி நாவலுக்குள் மூழ்க வைக்கும் தன்மை மிக்கது. அது காஃப்காவின் புகழ் பெற்ற நாவலான ‘உருமாற்றம்’ (The Metamorphosis) அதன் நாயகனான ‘கிரகர் சம்சா’வைப்பற்றி வர்ணிப்பதுடன் நாவல் தொடங்கும். அது வருமாறு:  “ஒரு காலைப்பொழுதில் கிரகர் சம்சா தொல்லைகள் நிறைந்த கனவுகளிலிருந்து விழித்தபோது அவன் தனது படுக்கையில் பூச்சி போன்ற பயங்கரமானதொரு உயிரினமாக மாறியிருப்பதைக் கண்டான்” (One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin)

சில நாவல்கள் அல்லது படைப்புகளின் முடிவுகளும் வாசகர்களைச் சுண்டியிழுப்பதாக, நெஞ்சில் நிலையாக உறைந்து விடுவதாக அமைந்து விடும். அண்மையில் கவிஞர் செழியனின் ‘வானத்தைப்  பிளந்த கதை (ஈழப்போராட்ட நாட்குறிப்புகள்) ‘ அத்தகையதொரு படைப்பு. இது கவிஞர் செழியனின் ஒரு குறிப்பிட்ட காலத்துச் சுயசரிதை. தாயகம் (கனடா)வில் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து’  என்று தொடராக வெளிவந்து ‘கனேடியன் நியூபுக் பப்பிளிகேசன்’ (ரொறொன்ரோ) பதிப்பகத்தால் அதே பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டது. பின்னர் ‘காலம்’ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ வெளியீடாக ‘வானத்தைப் பிளந்த கதை’ என்று மீண்டும் வெளியானது.  இந்நூல் பின்வருமாறு முடிகின்றது. நெஞ்சத்தைத்தொடும் முடிவு. புகலிடம் நாடிப் பிறந்த மண்ணை விட்டுப் பிரியும் மானுடர் அனைவரையும் சுண்டியிழுக்கும் முடிவு.

Continue Reading →