NEWS RELEASE: Entrepreneurs- Make your pitch and pivot to Canada!


NEWS RELEASE


Entrepreneurs: Make your pitch and pivot to Canada!

Pilot program for newcomers launching companies in Canada to be made permanent

July 28, 2017 – Toronto, ON – Canadians are welcoming to people and ideas from around the globe. Welcoming entrepreneurs who have the expertise to turn their ideas into successful companies is one way that Canada’s openness can help build a world-class innovation economy. The Start-up Visa Program, a pathway to permanent residence for cutting-edge entrepreneurs launching a start-up company in Canada, will become a regular feature of Canada’s immigration landscape in 2018.  As part of the five-year pilot, launched in 2013, innovative entrepreneurs can apply to become permanent residents after a Canadian venture capital fund or angel investor group has made a significant financial commitment in their business idea, or after a business incubator has accepted them into their program.

A recent evaluation of the Start-up Visa Program found that it is delivering on its goals; immigrant entrepreneurs are actively developing innovative companies in Canada that are beginning to show positive results for Canada’s economy and creating middle-class jobs across a range of industries. Making the program permanent supports the Government of Canada’s Innovation and Skills Plan, which seeks to attract investment and support the growth of a diverse range of companies, creating well-paying jobs for Canadians. In the months ahead, IRCC will work to finalize regulations for the permanent program in order to have a seamless transition when the pilot expires on March 31, 2018.

Continue Reading →

நூல் அறிமுகம்: தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது.

தழும்பு என்ற இந்நூலில் வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரண்டு நாவல்கள் உள்ளடக்கப்பட்டு 196 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. இந்நூலாசிரியரான மா. பாலசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியத் துறையில் என்றும் நினைவுகூரத்தக்கவர். நூல் விமர்னங்கள் பலதை எழுதி வருவதுடன், நூல் வெளியீடுகளுக்கு சமூகமளித்து அந்நூல் வெளியீடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் பத்திரிகையில் காத்திரமாக எழுதி வரும் ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவர். சற்றும் தளராது இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு எழுத்தாளர்களை நாடறியச் செய்து கொண்டிருப்பவர். இவர் ஏற்கனவே இப்படியும் ஒருவன், எதிர்க்காற்று, மா.பா.சி. கேட்டவை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் காணப்படும் முதல் நாவலான வீடு வந்த வசந்தம் என்ற நாவலே எனது ரசனைக் குறிப்புக்காக இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டு யுத்தமும் அது தந்த வடுக்களும் அனுபவித்தவர்களுக்கு அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது. நாடுவிட்டு நாடு ஓடி அகதிகளாக புகலிடங்களில் தஞ்சம் புகுந்து ஏராளம் துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் அந்த மக்களில் பலர். அந்நிய நாட்டிலிருந்துகொண்டு சொந்த நாடு பற்றிய ஏக்கங்களைச் சுமந்து பிறந்த மண்ணை மீண்டும் பார்ப்போமா என்றே தெரியாமல் வாழ்ந்து மடிந்தவர்களும் ஏராளம். அத்தகையதொரு சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே வீடு வந்த வசந்தம் என்ற நாவலாகும்.

Continue Reading →

சிறுகதை : அதிதுடிஇமை குணாம்சம்

சிறுகதை வாசிப்புடாக்டரின் பெயர் யுக்ஸியி. அந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை தங்கப் புத்தகம் என்று செல்லமாக அழைத்தார்கள். தங்கத்திற்கு நிகரான நற்குணங்களை அவர் கொண்டிருந்தார் என்பதற்காகத் தான் அவருக்கு அந்தப் பெயரைச் சூடியிருந்தார்கள் என்றால் அது தவறு. யுக்ஸியின் மேசையிலே தங்க நிறத்தில் பைண்டு செய்யப்பட்ட ஒரு புத்தகம் இருந்தது. பார்ப்போரின் கண்ணைக் கவரும் விதத்தில் அசல் தங்கப்பாளம் போல் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தை அழகிய கண்ணாடிப் பேழையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த குறும்புக்காரான அவர் கண்ணாடிப் பேழை மீது ‘இது தங்கம்’ என்று செதுக்கியும் விட்டார். அதன் பிறகு தங்கப் புத்தகமாகி விட்டார் யுக்ஸியி.

புதியவர்கள் யாரும் அந்தப் பேழையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன டாக்டர்?’ என்று கேட்டு விட்டால் போதும் ‘அது தங்கம் தொடாதீர்கள்’ என்று சீரியசாகச் சொல்லுவார் யுக்ஸியி. சுவாரஷ்யம் என்னவென்றால் சிகிச்சைக்காக வந்த திருடனொருத்தன் அந்தப் புத்தகத்தை உண்மையிலே தங்கமென நம்பி களவாடிப் போனான். ஒருசில நாட்களில் ‘மன்னிக்கவும்’ என்ற கடித்தோடு புத்தகப்பேழை திரும்பி வந்து விட்டது.

சிறிய அந்தப் புத்தகம் Hutchison’s clinical methods என்ற ஆங்கில மருத்துவ நூல் ஆகும். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்நூலின் பெறுமதி நன்றாகத் தெரியும். நோயாளியொருவரோடு எப்படி உரையாடுவது, நோய் அறிகுறிகள், நோய் திருஷ்டாந்தத்தை எப்படி அறிந்து கொள்வது, வயிற்றை, கால்களை, இதயத்தை, நுரையீரலை, தலையை, தோலை எப்படிப் பரிசோதிப்பது என்று அந்நூலில் விலாவாரியாகப் போட்டிருப்பார்கள். அந்நூலிலுள்ள தாற்பரியங்களைக்; கற்றுத் தேறாமல் யாரும் டாக்டராகி விடமுடியாது. அற்புதமான அப்புத்தகம் யுக்ஸியி மருத்துவக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தபோது செய்த சாதனைகளுக்காக கிடைத்ததா என்றால் அப்படி இல்லை.

யுக்ஸியி ஓய்வாக இருக்கும் வேளையில் படிக்கும்போது செய்த முட்டாள் தனங்களை நினைத்து தன்னுடைய தலையிலே தானே குட்டிக் கொள்வார்; சிலவேளை குபீரென்று சிரித்தும் விடுவார். அப்படிச் செய்த முட்டாள்தனத்திற்கு கிடைத்த பரிசுதான் அந்தத் தங்க பைண்டு தங்க புத்தகம்.

Continue Reading →

பயணியின் பார்வையில் — கல்வியை பூர்த்தி செய்து, தொழில்வாய்ப்பு பெற்ற மாணவர்களுடனும் இந்நாள் மாணவர்களுடனும் சந்திப்பு.

“கல்வியை பூர்த்தி செய்து,  தொழில்வாய்ப்பு பெற்ற மாணவர்களுடனும் இந்நாள் மாணவர்களுடனும்  சந்திப்பு.  அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக கற்றல், பிறரோடு சேர்ந்து வாழக்கற்றல், சுயஆளுமையுடன் வாழக்கற்றல்” –   யுனெஸ்கோவின்  கல்விச்சிந்தனை!”

எழுத்தாளர் முருகபூபதிஇலங்கைப்பயணங்களின்போது  தமிழ்ப்பிரதேசங்களில்  சில வீதிகளில் நான் அவதானிக்கும்  ஒற்றுமைjaffan2களை இங்கு குறிப்பிடல்வேண்டும். எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட மாணவர் தொடர்பாடல் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையம்,   யாழ்ப்பாணம், அரியாலை கண்டிவீதியில் அமைந்திருக்கிறது. அதற்கு அருகில்தான், பெண்களின் மாற்றத்திற்கான வலையமைப்பு என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு. அந்தவீதியில்தான் இவை இரண்டுக்கும் அருகில் இலங்கைத்தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பணிமனை. அத்துடன், ஈ.பி.ஆர். எல். எஃப். பின் (பத்மாநாபா அணி) அலுவலகம். இந்த வீதியில் இந்த அமைப்புகள் தோன்றுவதற்கு முன்னர் 1970 களில் அரஸ்கோ என்ற மாம்பழச்சாறு, மற்றும் பழவகைகள் பதனிட்டு தென்னிலங்கைக்கு ஏற்றுதி செய்யும் பெரிய நிறுவனமும் அதன் தொழிற்சாலையும் இயங்கியது. தற்போது அந்தக்கட்டிடம் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் அனாதையாக காட்சி அளிக்கிறது. எனினும்,  முற்றத்தில்  மாமரங்கள் நிழல் பரப்புகின்றன. இவ்வாறு இலங்கையில் பல உள்ளுர் உற்பத்தி தொழிற்சாலைகள் பாழடைந்துவிட்டன. அரஸ்கோ நிறுவனம் கொழும்பிலும் அலுவலகம் வைத்திருந்தது. மல்லிகையில் விளம்பரங்களும் வந்துள்ளன. மல்லிகை ஜீவா அந்நாட்களில் கொழும்பு வரும்போது அவருக்கு துணையாக இங்கு சென்றிருக்கின்றேன். சிலவேளைகளில் அவர் சார்பாகச்சென்று விளம்பரத்திற்கான பணமும் (காசோலை) பெற்றுவருவேன். இன்று அரியாலையில் இந்த நிறுவனம் தனது பணியை முற்றாக நிறுத்தியிருந்தாலும், இதற்கு அருகில் பின்னாளில் தோன்றியிருக்கும் அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் கொழும்பு மலே வீதியிலும் சில  இடதுசாரி தொழிற்சங்கங்கள் இயங்கின. அங்குதான் முன்னர்  கன்னங்கரா, தஹநாயக்கா, பதியூதின் முகம்மது முதலானவர்கள் கல்வி அமைச்சர்களாக இருந்தபொழுது கல்வி அமைச்சு இயங்கியது. பரீட்சைத்திணைக்களம் அதன் முன்னால் இருந்தது. அமச்சர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காக கல்வி அமைச்சும் குட்டிகளை ஈன்றது. கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு. தற்பொழுது மாகாணங்களில் கல்வி அமைச்சுகளும் அமைச்சர்களும் துணை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள். இலங்கை கல்வி அமைச்சும் மக்களைப்போன்று இடம்பெயர்ந்துவிட்டது. தொழிற்சங்கங்களுக்கும் அதே கதிதான்.

Continue Reading →

வீடு விற்க / வாங்க: பரதன் நவரத்தினம் ( வீடு விற்பனை முகவர்)

‘பதிவுகள்’ இணைய இதழ் விளம்பரங்கள் / அறிவித்தல்கள். ‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  ‘பதிவுகள்’ இணைய இதழில்…

Continue Reading →

ஆய்வு: தாயுமானவர் பாடல்களில் தன்னையறிதல்.

- வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -முன்னுரை
தன்னை அறிந்து கொள்வதில் ஒரு முறையான பயிற்சியும், முயற்சியும் ஒருபுறம் இருக்க இன்னும் பல்வேறு வழிகளில் பலர் தன்னை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் தேடல் என்பது புறத்தேடல் அதாவது வெளிவுலகத் தேடல் அல்ல அகத்தேடல், அதாவது மனதளவில் தேடுதல் ஆகும். இந்த அகத்தளவு தேடலில் அவர்கள் தேடியவை கிடைத்ததன் பயன்பாட்டை அவர்கள் பாடலின் மூலம் வெளி உலக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொறுத்திப்பார்த்து பயன்பெறும் வண்ணம் அமைத்திருப்பார், அந்த வகையில் தாயுமானவர் தன் அகத்தேடலின் பயனை அவர் பாடலின் மூலம் எடுத்துக் கூறுவதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தன்னையறிதல்
ஆன்மீக உலகத்தில் நான் யார்? என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒன்றாகும். எத்தனையோ அணுகு முறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் இது சம்மந்தமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியிருந்தாலும் அடிப்படை உண்மை ஒன்றுதான். நாம் அறிந்துகொள்ளும் செய்திகளைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமானால்,அதனை சரியான கோணத்தில் விவாதித்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் என்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. நமது சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. உலகமே ஒரு யுத்தகளமாக அமைந்துள்ளது, போராட்டமும் வன்முறையும் தலை விரித்து ஆடுகிறது. எல்லாவற்றிற்கும் மூல காரணம் இந்த நான் என்னும் உணர்வுதான். ‘நான் சொல்வதுதான் சரி, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்று இந்த நான் எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சினையாக உள்ளது. இந்த நான் என்னும் உணர்வுதான் நமது செயல்களை ஊக்குவிக்கும் முக்கியமான அம்சமாகவும் உள்ளது. நமது செயல்களை நிர்ணயிக்கும் அம்சமாகவும் உள்ளது.

“தன்னைஅறி யாதுசகத் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே”.
(தாயு. பு.க.பா.எ.289)

என்ற பாடலில் தன்னையறிந்தவருக்கே சுகம் கிடைக்கும் என்கிறார்.

Continue Reading →

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி 1 – கருணாகரன் கதை ( 1-6))

– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது. –


தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் ஒன்று: ஒரு பயணத்தின் தொடக்கம்

ஏழு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை அவ்வளவு விரைவாகக் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவும் பகலும் மழையும் வெயிலும்.பருவங்கள் மாறியபடி கூடவே காலமும் விரைந்தபடி…முடிவற்ற வாழ்வின் பயணங்களிற்கு முடிவு தானேது. விடிவும், முடிவும், முடிவும். விடிவும்.தொடக்கமே முடிவாகவும் முடிவே தொடக்கமாகவும்.தொடரும் பயணங்கள். தொடர்ந்தபடி.தொடர்ந்தபடி. என் வாழ்க்கையில் எதிர்பாராமல் எதிர்ப்பட்டுவிட்ட.கடந்த ஏழு வருடங்கள் வாழ்வில் மறக்கமுடியாதபடி..ஒரு விதத்தில் களங்கமாகப் படிந்துவிட்ட காலத்தின் சுழற்சிகள்.எதற்காக? ஏன்? இவ்விதம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்க்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. உள் மனத் தூண்டுதல்களின் ஆவேசத் தூண்டுதலின் முன்னால் அறிவு அடிபணிந்து விடுகிறபோதுகளில் தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. செய்துவிட்ட தவறுகளிற்காகப் பின்னால் மனது கிடந்து அடித்துக் கொண்டுவிட்டபோதும். நடந்த தவறு என்னவோ நடந்ததுதானே. அதன் பாதிப்பும் விளைவுகளும் ஏற்படுத்திவிடும் ஆழமிக்க காயங்களிற்கு மருந்து.

பஸ் விரைந்து கொண்டிருக்கின்றது. வவுனியாவை நோக்கி.பின்புறத்தில்.மூலைசீட்டில் அமர்ந்தபடி யன்னலினூடு விரையும் காட்சிகளைப் பார்த்தபடி, சிந்தனையில் மூழ்கியவனாக சிலையாக உறைந்து போய்க்கிடக்கின்றேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சிந்தனைகள். உரையாடல்கள். அத்தனை பேரையும் தாங்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தரிப்பிடங்களில் இறங்க வேண்டியவர்களை இறக்கி, ஏற வேண்டியவர்களை ஏற்றி.வெற்றிலையைக் குதப்பித் துப்பியவாறே “அண்ணே ரைட்” என்ற கண்டக்டரின் குரலுடன்.குலுக்கலுடன் பஸ் விரைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மனது மூழ்கிப் போய்விடுகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நேற்றுவரை நானொரு சிறைப்பறவை. நான் செய்து விட்ட அந்தக் குற்றத்திற்கு இந்த எழு வருடங்கள் போதவே போதாது. ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் தீரக்கூடிய பாவத்தையா நான் செய்திருக்கின்றேன். எந்த ஒரு நாகரீக மனிதனுமே செய்யக்கூசுகின்ற அஞ்சுகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய என்னால், மக்களிற்காக வாழ்ந்து மடிந்த தியாகி ராஜரத்தினத்தின் மகனால் எப்படி முடிந்தது? எப்படி முடிந்தது?

Continue Reading →

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி 1 – கருணாகரன் கதை ( 1-6))

– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது. –


தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் ஒன்று: ஒரு பயணத்தின் தொடக்கம்

ஏழு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை அவ்வளவு விரைவாகக் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவும் பகலும் மழையும் வெயிலும்.பருவங்கள் மாறியபடி கூடவே காலமும் விரைந்தபடி…முடிவற்ற வாழ்வின் பயணங்களிற்கு முடிவு தானேது. விடிவும், முடிவும், முடிவும். விடிவும்.தொடக்கமே முடிவாகவும் முடிவே தொடக்கமாகவும்.தொடரும் பயணங்கள். தொடர்ந்தபடி.தொடர்ந்தபடி. என் வாழ்க்கையில் எதிர்பாராமல் எதிர்ப்பட்டுவிட்ட.கடந்த ஏழு வருடங்கள் வாழ்வில் மறக்கமுடியாதபடி..ஒரு விதத்தில் களங்கமாகப் படிந்துவிட்ட காலத்தின் சுழற்சிகள்.எதற்காக? ஏன்? இவ்விதம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்க்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. உள் மனத் தூண்டுதல்களின் ஆவேசத் தூண்டுதலின் முன்னால் அறிவு அடிபணிந்து விடுகிறபோதுகளில் தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. செய்துவிட்ட தவறுகளிற்காகப் பின்னால் மனது கிடந்து அடித்துக் கொண்டுவிட்டபோதும். நடந்த தவறு என்னவோ நடந்ததுதானே. அதன் பாதிப்பும் விளைவுகளும் ஏற்படுத்திவிடும் ஆழமிக்க காயங்களிற்கு மருந்து.

பஸ் விரைந்து கொண்டிருக்கின்றது. வவுனியாவை நோக்கி.பின்புறத்தில்.மூலைசீட்டில் அமர்ந்தபடி யன்னலினூடு விரையும் காட்சிகளைப் பார்த்தபடி, சிந்தனையில் மூழ்கியவனாக சிலையாக உறைந்து போய்க்கிடக்கின்றேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சிந்தனைகள். உரையாடல்கள். அத்தனை பேரையும் தாங்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தரிப்பிடங்களில் இறங்க வேண்டியவர்களை இறக்கி, ஏற வேண்டியவர்களை ஏற்றி.வெற்றிலையைக் குதப்பித் துப்பியவாறே “அண்ணே ரைட்” என்ற கண்டக்டரின் குரலுடன்.குலுக்கலுடன் பஸ் விரைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மனது மூழ்கிப் போய்விடுகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நேற்றுவரை நானொரு சிறைப்பறவை. நான் செய்து விட்ட அந்தக் குற்றத்திற்கு இந்த எழு வருடங்கள் போதவே போதாது. ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் தீரக்கூடிய பாவத்தையா நான் செய்திருக்கின்றேன். எந்த ஒரு நாகரீக மனிதனுமே செய்யக்கூசுகின்ற அஞ்சுகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய என்னால், மக்களிற்காக வாழ்ந்து மடிந்த தியாகி ராஜரத்தினத்தின் மகனால் எப்படி முடிந்தது? எப்படி முடிந்தது?

Continue Reading →

தொடர் நாவல்: மண்ணின் குரல் (1 -5)

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -– 1984  இல் ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’.  ‘புரட்சிப்பாதை’ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் ‘புரட்சிப்பாதை’ நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. –


அத்தியாயம் ஒன்று: கமலா டீச்சர்!

மாரி தொடங்கிவிட்டதால் கடந்த இரு மாதங்களாகவே மப்பும் மந்தாரமாகத்தான் வானம் இருண்டு கிடக்கின்றது. தமிழரின் வாழ்வைப்போல், வேளைக்கே இருண்டுவிடும் பொழுதுகளில், கும்மிருளைக் கிழித்தபடி கவசவாகனங்கள் விரைவதும், கொள்ளிவாற் பிசாசுகளால் கிராமங்கள் எரிவதும்.ஆதிகாலத்தில் ‘கொள்ளிவாற் பிசாசுகளை சேற்றிலுருவாகும் வாயு ஒன்றின் விளைவே என்பதனை அறியாத மானுடர்கள் மருண்டு திரிந்தார்கள். இன்றும் ‘கொள்ளிவாற் பிசாசுகளின் நடமாட்டம் தமிழீழமெங்கனுமே அதிகமாகத்தான் இருக்கின்றது.ஆமாம். இவையும் ஒருவிதச் சேற்றில்தான் உருவாகின்றன.இனவாதச்சேற்றில் உருவான ‘கொள்ளிவாற் பிசாசுகள் இவை, விரைவாக வீடுசேரும் அவசரத்தில் கமலா, வயல் வெளிகளினூடே நீண்டிருக்கும் அச்சாலையில் தனிமையில் வந்து கொண்டிருந்தாள். இலேசாக இருண்டுவிட்டது. மழை வேறு மெல்லிய தூறலாக துமித்தபடி இருந்தது.ஏதோ ஒருவிதச் சோகத்தில் ஆழ்ந்திருப்பதைப்போல் பனை மரங்களெல்லாம் மெளனித்துக் கிடக்கின்றன. வழக்கமாக ஒருவித ஆனந்தத்தில் எக்காளமிடும் தவளைகள் கூட சுருதிகுறைத்து சோககீதம் இசைத்தபடி இருக்கின்றன.

கமலா ஒரு நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளமாது. வட்டுக்கோட்டையிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றுகிறாள். அவளது தந்தையும் ஒரு தமிழாசிரியரே! அவளிற்கடுத்து மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் இருக்கின்றார்கள். அவளிற்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் குடும்பநிலைமை காரணமாக கிடைத்த ஆசிரியை வேலையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். அவளிற்கடுத்த இரு சகோதரிகளும் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருக்கிறார்கள். இளவயதிலேயே தாயை இழந்து விட்ட குடும்பத்தில் அவளே தாயாக, தமக்கையாக விளங்கினாள். கடைசித் தங்கையும், தம்பியும் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள்.

Continue Reading →

தொடர் நாவல்: வன்னி மண் (1 – 5)!

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும். முதலில் ‘வன்னி மண்’ நாவல் பிரசுரமாகும்.  அதனைத்தொடர்ந்து ஏனைய நாவல்கள் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.


‘மண்ணின் குரல்’ தொகுப்புக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய அறிமுகக் குறிப்பு:

அறிமுகம்: திரு கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத் தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக்கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம். அவரது எழுத்துக்களில் இயற்கையின் ஈடுபாட்டையும் வர்ணனையையும் பரந்து காணலாம். கவிஞர்களால் என்றும் இயற்கையின் அழகையும் எழிலையும் மறந்து விடமுடியாது என்றே கூறத்தோன்றுகிறது. ‘வன்னி மண் வெறும் காடுகளின்,  பறவைகளின் வர்ணனை மட்டுமல்ல. அந்த மண்மேல், ஈழத்து மண்மேல் அவர்கொண்ட பற்றையும் கூறும். வன்னி மண் நாவலில் மட்டும் இப்போக்கு என்று கூறுவதற்கில்லை. மற்றைய மூன்று நாவல்களிலும் கூட அவரது கவித்துவப் பார்வையைக் காணலாம். அடுத்தது, மனிதாபினமானமும், செய் நன்றி உணர்வும், தவறு நடந்தபோதும் அவரது கதை மாந்தர்களின் பச்சாதாப உணர்வு முதன்மை பெற்று நிற்பதையும் நான்குகதைகளிலும். ‘வன்னி மண் சுமணதாஸ் பாஸ், “அர்ச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலிலும் வரும் சிறுவன், டீச்சர், கணங்களும் குணங்களில் வரும் கருணாகரன் மண்ணின் குரலில் வரும் கமலா யாவரிலும் தரிசிக்கலாம்.

Continue Reading →