அகதி ஆகிய தமிழரின் அடுத்த அடி என்ன?

-பேராசிரியர் கோபன் மகாதேவா -அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் சிறகு அடித்தார்.
பறந்து சென்றும் பரந்து நின்றும்
பற்பல வழிகளில் பாடுபட்டார்.

அகதி ஆகிய தமிழரிற் பலர்
ஈழ தேசத்தில் தேங்கி நின்று
வெறுப்பினுள் வாழ்ந்தும், வெகுளாமல்
வெல்லும் வழிகளை ஆராய்ந்தார்.

அகதி ஆகிய தமிழர் முழுவாய்
அடங்கி ஒடுங்கி முடங்கவில்லை.
இனம் சாகவில்லை… இளைக்கவில்லை…
அடிமைகளும் ஆகவில்லை.

அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் பறந்து சென்றார்.
அமெரிக்காவில், வெளியிருந்து இயங்க
நிழல்-அரசு ஒன்றைப் பிரசவித்தார்.

Continue Reading →

கவிதை: குர்து மலைகள்!

- தீபச்செல்வன் -

பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி  மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்

போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலீவ மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்

Continue Reading →

கவிதை: திருவிளையாடல்!

கவிதை: திருவிளையாடல்!

காதணியைக் கழற்றி வீசி விட்டாய் அன்று
வேதனையைச் சுழற்றித் துரத்தி விட்டாய்
சாதனை யாதும் அறிந்திலனே.
பாதம் பணிந்தேன் ஆட்கொள்ளம்மா

Continue Reading →