அஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா.விசயரத்தினம்!

அஞ்சலி: எழுத்தாளர் நுணாவிலூர் கா.விசயரத்தினம்!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எழுத்தாளர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் அமரரான தகவலை முகநூல் மூலம் சற்று முன்னர் அறியத்தந்திருந்தார் எழுத்தாளர் உதயணன் அவர்கள். அதிர்ச்சியாகவிருந்தது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு ஆக்க, ஊக்கப்பங்களிப்பு வழங்கிய நல்ல உள்ளத்தை நாம் இழந்து விட்டோம். ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகத் தனது சங்கத்தமிழ் இலக்கியம் பற்றி ஆக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்தவர். அதற்காகவே ‘பதிவுகள்’ இணைய இதழில் அவருக்கென்றொரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம். அவரது படைப்புகள் சிலவற்றைப் ‘பதிவுகள்’ இணைய இதழின் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்’ பக்கத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=43&Itemid=73

‘பதிவுகள்’ இணைய இதழுக்கான ஆலோசகர் குழுவிலும் ஒருவராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் ‘பதிவுகள்’ இதழுக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர். கணக்கியல் பட்டதாரியான இவர் தன் ஓய்வுக்காலத்தைச் சங்ககாலத்தமிழர்தம் இலக்கியத்தின்பால் திருப்பி ஆக்கபூர்வமாகத் தன் வாழ்வை மாற்றியவர். இத்துறையில் பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அண்மையில் இவர் எழுதி ஒன்பதாவது நூலாக வெளிவந்த ‘சங்ககாலத் தமிழர் வாழ்வியல்’ நூலுக்கு ‘சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்\ என்றொரு கட்டுரையினையும் எழுதியிருந்தேன். அதனை அவர் அந்நூலின் ஆய்வுக்கட்டுரையாகப்பிரசுரித்திருந்தார்.

அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழும் இணைந்து கொள்கின்றது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தம் இறுதிவரையில் பங்களிப்புச் செய்த அமரர் வெங்கட் சாமிநாதனைப்போல் பங்களிப்புச் செய்தவர் அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள். ‘பதிவுகள்’ இணைய இதழ் மீது மதிப்பினையும், என் மேல் அன்பினையும் வைத்திருந்த நல்ல உள்ளமொன்றினை இழந்து விட்டோம்.

அவரது படைப்புகளினூடு அவர் தொடர்ந்தும் இலக்கியத்தில் நிலைத்து நிற்பார். அவர் நினைவாக அவரது  ‘சங்ககாலத் தமிழர் வாழ்வியல்’ நூலுக்கான முன்னுரையினை மீள்பதிவு செய்கின்றோம்.

மீண்டுமொருமுறை தனிப்பட்டரீதியிலும், ‘பதிவுகள்’ சார்பிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Continue Reading →