ஆய்வு: புதுக்கவிதையின் பாடுபொருள் புதுமைகள்

முன்னுரை
ஆ. இராஜ்குமார்,யாதும் ஊரே யாவரும் உறவினர்கள் என்று வாழ்ந்துவந்தவன் தமிழன். தீதும் நன்றும் அவர்அவர் செயல்களால் விளைவது என்ற யதார்த்ததை இலக்கியத்தில் பதிவு செய்து வாழ்தவன் தமிழன். இன்றைய கவிதைகளில் பாடுப்பொருள் புதுமைகளைப்பற்றி இக்கட்டூரையில் ஆய்வோம்

புதுக்கவிதைகள்
தமிழ் யாப்பு மரபில் சங்ககாலத்தில் ஆசிரியப்பாவும், நீதியிலக்கிய காலத்தில் வெண்பாவும், காப்பியக்காலத்தில் விருத்தப்பாவும் கொலோச்சியது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிபா, பரிப்பா என்று யாப்பு அடிப்படையில் பாடிவந்த மரபை உடைத்து எந்த யாப்பு வகையும், இலக்கணமும் இன்றி எழுதப்படுவதே புதுக்கவிதைகள் ஆகும்.

பாடுப்பொருள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறுபட்ட பாடுப்பொருள்கள் காலம்தோறும் தோன்றிவந்துள்ளன. சங்ககாலத்தில் காதல், வீரம் என்ற பாடுப்பொருளையும், நீதியிலக்கியத்தில் அறம் மட்டும் பாடுப்பொருளாகவும், பக்த்தியிலக்கியத்தில் இறையுணர்;வையும், காப்பியக்காலத்தில் அறம்,பொருள், இன்பம்,வீடுப்பெறும், என்ற பாடுப்பொருள்களும், சிற்றிலக்கிய காலத்தில் தனிப்பட்ட ஒருவர் வாழ்வியல் பற்றியும் பாடுப்பொருளாக பாடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அனைத்து துறைகளும் பாடுப்பொருளாக வைத்து பாடப்படுகின்றன.

அரசியல்
ஒவ்வொருவரும் கணவில் ஒரு கோட்டையை கட்ட நினைப்பதும் உண்மையே சிலர் அதிகார கணவில் இருப்பர், சிலர் வாழ்கையே கணவு போல முடியும். சிலர் பணம் மட்டுமே வாழ்கையாக கொண்டுள்ளனர். அரசியலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்கிற வேட்கையில் பலகுழப்பங்களை செய்கின்றனர். மக்கள் பலரையும் குழப்பி எளிதில் அரசியல்வாதிகள் வெற்றிப்பெறுகின்றனர். இதை

“வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகின்ற மீன்கள்”
(காக்கையின் வண்ணப்படம்)

என்ற பாடலில் கவிஞர் ந.க துறைவன் இக்கருத்தை காக்கையின் வண்ணப்படம் எனும் நூலில் பாடுப்பொருளாக பதிவுசெய்கிறார்.

Continue Reading →