எதிர்வினை: முனைவர் தாரணி அகில் அவர்களின் ஐரோப்பியப் பயணத்தொடர் பற்றி…

எதிர்வினை_பெண்2017 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாரணி அகில் அவர்கள் பகிர்ந்த ஐரோப்பியப் பயணத்தொடர் (1)-(5) அனுபவம் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்த கருத்துக்களை பகிர முன்வந்துள்ளேன். அவரது கட்டுரைகள் கிரிதரன் அவர்கள் ஜூன் 19ம் திகதி பகிர்விற்கு அளித்த முகவுரையில் கூறியது போல் வேறு சிலர் எழுதும் பட்டும்படாத பாணியில் அல்லாமல் இவர் மிகவும் ஈடுபாடகவும், அதை அணுஅணுவாக அனுபவித்தும், மிகுந்த நகைச்சுவை கலந்தும் எழுதியது என்னைக் கவர்ந்தன. கட்டுரைகளை வாசித்த போது எவ்வாறு சுற்றுலாப் பயணத்தை அனுபவிக்க வேண்டுமெனக் கூறுவதுடன், ஒரு சுற்றுலாப் பயணக் கட்டுரையை எவ்வாறு சுவாரசியமாக எழுத வேண்டுமென ஒரு பாடம் நடாத்தியது போல் இருந்தது. அவரிடமிருந்து நான் கற்றது பல.

அதைப் பகிர்வதற்கு முன்பாக தாரணி அகில் அவர்களை எவ்வாறு சந்தித்தேன் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். எனது கட்டுரையை ‘லைக்’ பண்ணியவர்களில் அவரும் ஒருவர். முன்பு அறிமுகம் அல்லாதவர் ‘லைக்’ பண்ணுவதானால் அவரது ஆர்வம் என்னவாக இருக்குமென அவாக் கொண்டு அவரது முகநூலில் நுழைந்;தேன். அவர் ஒரு துணைப் பேராசிரியர் என அறிந்து மனமிகு மகிழ்ந்தேன். அத்துடன் அவருக்கு நல்ல நகைச்சுவை ஆர்வம் இருப்பதை அவர் பகிர்ந்திருந்த பலவகையான சுண்டல் பற்றிய கவிதையிலிருந்து அறிந்து கொண்டேன்.

முகநூலில் பலவிடயங்களையும் பார்த்தும் வாசித்தும் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜூன் 19ம் திகதி தாரணி அகில் அவர்கள் ஐரோப்பியப் பயணத்தொடர் (5): ஒளிரும் மாய நகரம் – பாரிஸ் கண்ணில் பட்டது. நான்தான் நீண்ட கட்டுரையை எழுதிவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் நீளத்தில் அவர் என்னை மடக்கிவிட்டார்.  இருப்பினும் வேறெதிலும் கவனம் செலுத்தாமல் என்னை வைத்திருந்த அவரது கட்டுரையை வாய் விட்டுச் சிரித்தும், சிரிப்பில் கண்ணீர் விட்டும் வாசித்து முடித்தேன். அவரது எழுத்தாற்றல் வியக்கத்தக்கது. அந்த எழுத்து நாமும் அவருடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

Continue Reading →

ஆய்வு: அகத்தில் அகப்பட்ட விதிகளும் சமூகத்தின் சதிகளும்

முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -உயிரினத்தின் பரிணாம நிலை, செயல்கள் யாவும் அடிப்படையில் இயல்பு விதிக்குள் அகப்பட்டு கிடக்கிறது. ஆம், உயிர்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து இன்ப வாழ்வுதனில் தழைக்கும் இயற்கை இன்ப விதியாம் காதல் : அது இயல்பான ஈர்ப்பு நிலை : காந்தமானது நேர் துருவமும் எதிர் துருவமும் ஒன்று மற்றொன்றை ஈர்த்துக் கொள்வது போல ஒரு ஆண் உயிரி பெண் உயிரியையோ பெண் உயிரி ஆண் உயிரியையே புற பார்வையிலிருந்து தொடங்கி அகத்துக்கு அடைப்பட்டு ஒன்று மற்றொன்றோடு இணைந்து விடுகிறது.

அந்த இயல்புணர்ச்சியில் தேடலை முடிந்த வரையிலும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கி சமூகத்தில் சிலரால் அழிக்கப்பட்டே வந்தது, வருகின்றது. சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதாயினும் சமூகத்தால் மறுக்கப்பட்டு கொலைக்களத்தினில் நிறுத்தி முறையற்ற கொலைதனை மூலைமுடுக்கெங்கும் செய்து வருவதே கண்கூடு.

காதலைச் செய்யாதார் உலகில் எவருமில்லை: செய்யாதவர் (அதற்கு) உரித்தான மனிதர் இல்லை: காதலைப் பற்றிப் பாடாதவர் எவருமில்லை: வாய் கிழிய பேசாதவர் உலகில் எவருமில்லை: இன்றைய உலகில் தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி என யாவும் தகவல் தொடர்பியல் காதலை பரப்புரை செய்யும் கலைகளாய் முன் நிற்கிறது. எனினும் ‘காதல்’ ஏற்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? என்பதில் பொருள் அடங்கிக் கிடக்கிறது.

பண்டைய காலத்தில் சங்க இலக்கியம் 2381 பாடலுள் 1862 பாடல் காதல் பாடல்களே. இன்று வரையுங் கூட சமூகப் பாடல்களை விட காதல் பாடல்கள்தான் மிகுதி என்பது நாம் அறிந்ததுதான்.

“காதல் நிகழ்வில் ஒருவன் தன்வயப்படும் போது அது அவனுக்கு சிறப்புத் தான். தன் குடும்பத்துள் வேறொருவரால் நடந்தால் அது வெறுப்புத்தான்.”

காதல் வரலாற்றில் துன்பவியலே மிகுதி! காதல்! காதல்! காதல்! காதல் போயின் சாதல் என்றான் பாரதி. ஆனால் காதல் காதல் காதல,; காதல் செய்யின் சாதல்” என்று கூறுமளவிற்கு வன்மம் தலைவிரித்தாடிக் கொண்டே இருக்கிறது. உலக வரலாற்றில் காதல் வாழ்க்கை துன்பத்தையே அடைந்து அம்பலப்பட்டிருக்கிறது.

பண்டைய தமிழகத்தில் காதலைப் பற்றி தொல்காப்பியரும், சங்க இலக்கிய புலவர் பலரும் எடுத்துரைத்த முறைகள் மிகுந்த சிறப்பிற்குரியது. எனின், அக்காதல் நிகழ்வு யாருக்கெல்லாம் பொருந்தும் என்று கூறும் இலக்கண அடிகளிலிருந்து தான் சமூகச் சிக்கலை இனங்கண்டு கொள்ள முடிகிறது. அடிப்படையில்,

Continue Reading →

தீபாவளிக் கவிதை: தீபத் திரு நாளில்

தீபத் திரு நாளில்……
தீய எண்ணத்த எரித்துவிடு…..
தீய செயலை தூக்கியெறி……
தீய பார்வையை மறைத்துவிடு…..
தீய பேச்சை துப்பியெறி……
தீய தொழிலை செய்யாதே……!

Continue Reading →