கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!

கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!
அன்பே!

அன்றொருநாள் நீ கூறினாய்

கத்தி முனையில் நடப்பதைப்

போன்றதிந்த இருப்பு என்று.


கத்திமுனை இருப்பில்

கவனத்துடன் நடப்பதிலுமோர்

களிப்பு குவிந்துதானிருக்கின்றது.

இருப்பில் இவ்விதம் இருப்பதிலுமோர்

இன்பம் இருக்கத்தான் இருக்கிறது.

இருப்பென்பது இவ்விதச் சவால்களையும்

உள்ளடக்கியுள்ளதுதானே.

இருப்பென்பதே இன்பம்தானே!

Continue Reading →

அஞ்சலி: அறிஞர் நுணாவிலூர் கா. விசயரத்தினம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எழுத்தாளர் முருகபூபதி: அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு, நூணாவிலூர் விசயரத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி தங்கள் அஞ்சலி ஊடாகவே தெரிந்துகொண்டேன். எனது அஞ்சலியைத்தெரிவிக்கின்றேன். அவர் பற்றிய விரிவான வாழ்க்கை சரிதம் வெளிவருதல் நன்று. உங்களுக்கு அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்பது உங்கள் சில பதிவுகளிலிருந்து அறிகின்றேன். அவர் எங்கு வாழ்ந்தார்..? எவ்வாறு மறைந்தார்? முதலான விபரங்களை பதிவகள் வாசகர்களுக்கு அறியத்தாருங்கள். நன்றி.
அன்புடன் – முருகபூபதி -letchumananm@gmail.com       

எழுத்தாளர் குரு அரவிந்தன்: எல்லோராலும் விரும்பப்பட்ட எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரியதொரு இழப்பாகும்.  அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினருடன் இணைந்து  நாங்களும் பிரார்த்திக்கின்றோம். அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் வாழும். – குரு அரவிந்தன். kuruaravinthan@hotmail.com

கா.மு.அன்சாரி: எனது இனிய நண்பர்  விசயரத்தினம் மரணித்துவிட்ட துயரமான செய்தியை ஒரு நண்பர் தந்த தகவல் மூலமும், பதிவுகள் மூலமும் அறிந்தேன். பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். அமரர் விசயரத்தினம் அரசாங்க சேவையிலிருந்து  ஒய்வு பெற்றபின்னர் தமிழாராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பொதுவாக சங்ககால இலக்கியத்திலும், குறிப்பாக தொல்காப்பியத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தொல்காப்பியக்கடலில் மூழ்கி, சுழியோடி தான் கண்டெடுத்த நல்முத்துக்களை தமிழை நேசிக்கும் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக ஆர்வமுள்ளவராக இருந்தார். இதற்கு அவர் எழுதிய எண்ணற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளும், வெளியிடப்பட்ட நூல்களும் சான்று பகரும். இதற்கான, அறிஞர் பெருமக்களின் அங்கீகாரமும் அவருக்கு  கிடைத்துக்கொண்டே இருந்தது. அவர் வாழும் காலத்திலேயே வாசகப்பெருமக்கள் அவரை வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள். விருதுகள் பல அவரைத்தேடிவந்தன். சமீபத்தில் அவரது அயராத, ஆக்கபூர்வமான தமிழ்த்தொண்டை நினைவு கூர்ந்து, “பதிவுகளின்” ஆலோசகர் குழுவில் சேர்த்து கெளரவிக்கப்பட்டார் . இத்தகைய நல்ல மனிதர் இன்று நம் மத்தியில் இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். – கா.மு.அன்சாரி, c.m.ansari@gmail.com

Continue Reading →