ஆய்வு: நல்லூர் நத்தத்தனார் கூறும் கடையெழு வள்ளல்கள்!

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும் நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுபடையில் கூறுவதை காணலாம்.

பாரி
சங்க காலப் பாடல்களில் பாரியின் கொடைச் சிறப்புகள் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றாலும் கூட சிறப்பாணாற்றுப்படையில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டுள்ளது.

“…………. தேருடன்
முல்லைக்கு ஈந்த செல்ல நல்லிசை”.
(புறம் 20)

“பாரி பாரி என்று பல ஏந்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரக்கதுவே”
(புறம் 107)

“சறுவீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய
பிறக்கு வெள் அருவி விழும் சாரல்
பிறமம்பின் கோமான் பாரியும்”
(சீறு– 89 – 91)

இப்பாடலில் சுரம்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி, அதனை விரும்பியதாக் கருதி, அதற்க்குத் தனது பெரிய தேரை அளித்த சிறப்புடைய வள்ளல் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த பின்னர், தான் நடந்து செல்வதற்குரிய வழி நெடிதாக இருந்ததையும் எண்ணாது ஈந்த பாரியின் அருட்பெருமை இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாரியின் நாட்டிலுள்ள சுரபுன்னைகளும், தரும்புகள் உண்ண தேன் நல்கும் சிறப்புடையன என்றும், மலைவீழ் அருவியும் மக்களுக்கு நன்மை தரும் இயல்கினது என்று பாரியினுடைய நாட்டு வளமும் பாரியின் இயல்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading →

ஆய்வு: விருதுநகர் வீரரின் அரசியலும் ஆளுமையும்

தலைவர் காமராஜ்.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர் ‘பெருந்தலைவர் காமராசர்’. தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டும் குரல்கொடுத்தும் செயலாற்றியும் வாழ்ந்த தொண்டருக்குத் தொண்டர், தலைவருக்குத் தலைவர், அறிஞருக்கு அறிஞர், அரசியல் வித்தகர் மாமேதை காமராசர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுள் தலைசிறந்த தலைவராக விளங்கிய காமராசரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து, நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி, சான்றோர்களின் துணையையும் நாடி, அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும், அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். ஏனெனில், தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘கருப்புக் காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘ஏழைப் பங்களான்’, ‘கர்ம வீரர்’, ‘கிங் மேக்கர்’, ‘கல்விக்கண் திறந்தவர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் இவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, இவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கிய பெருமையும் இவரைச்சேரும். இவ்வாறான பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாறுகளையும், அவரின் உன்னதமான பல்வேறு சாதனைகளையும் இச்சமுதாயம் அறிந்திருப்பது அவசியம்.

1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாளன்று தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள “விருதுநகர்” மாவட்டத்தில், குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தவர்தான் காமராசர். தாயார் சிவகாமி அம்மாவின் முதல் சகோதரர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை நடத்தி வந்தார். விருதுநகருக்கு அந்தக் காலத்தில் இருந்த பெயர் விருதுப்பட்டி. இவருடைய தந்தை விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமாட்சி (குலதெய்வம்) என்ற இயற்பெயருடைய காமராசரை, அவருடைய தாயார் “ராசா” என்று அன்பாக அழைத்ததால், பின்னாளில் அதுவே, (காமாட்சி, ராஜா) ‘காமராசர்’ என்று பெயர்வரக் காரணமாகவும் அமைந்தது. காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கையும் இருந்தார்.

காமராசர் தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரில் தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள “சத்ரிய வித்யா சாலா உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்தார். காமராசர் தனது பள்ளிப் பருவத்திலேயே, விருதுப்பட்டியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் சென்றுள்ளார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. இவ்வாறான, பொதுக் கூட்டங்கள் அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவர் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராசர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

Continue Reading →