நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம்

போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’தாமரைச் செல்விகாலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி.  வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் – போர் காலம் – போருக்குப் பின் – என்ற பெரு  மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.

வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்;  தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.

அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’

இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட.  இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக்  கிட்டிய  புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.

Continue Reading →

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் உணவுமரபில் விலக்கு (tabo) – முனைவர் கோ.சுனில்ஜோகி, –

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -இந்த ஞாலம் பல்நிலை உயிர் திரட்சிகளின் தொகுப்பு. உயிரிகளின் மூலம் இயக்கம். இயங்குநிலையின் மூலம் தேவை. உயிரிகளின் அடிப்படைத்தேவை ஆற்றல். ஆற்றலுக்கு அடிப்படை உணவு.

மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள ஆற்றலின் நிலைப்பாட்டிற்கு உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அடிப்படையானது. உயிரிகள் தன் ஆற்றல் கொணர்விற்கு உட்கொள்ளும் இயற்கை மூலங்கள் காற்று, நீர், உணவு ஆகியவை (குறள் 941). இவற்றைத் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலிலிருந்து உயிரிகள் தன்னிறைவுச் செய்துக் கொள்கின்றன.

மானுடர்களின் உணவுநிலை பண்பாட்டின் முக்கியக் கூறுகளுள் ஒன்றாகும். மனிதனின் மனப்பக்குவத்தை அறிந்துக் கொள்ளும் நிலைகளனாகவும் மனிதனின் உணவு வரலாறுத் திகழ்கின்றது. உணவினைப் பச்சையாக உண்ட ஆதிமனிதன், உணவினை வேகவைத்து உண்ட பழங்குடியின மனிதன், உணவினைப் பக்குவப்படுத்தி முறைவயின் உண்ட வேளாண்யுக மனிதன், உணவினைப் பதப்படுத்தி உண்ணும் தற்கால மனிதன் என்று மனிதனின் மனப்பக்குவத்தினை வெளிக்காட்டும் ஆதாரங்களாக உணவுமுறைகள் திகழ்கின்றன.

உணவுசார் செய்முறை காலந்தோறும் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அதன் உறுபொருள் இயற்கையின் பாற்பட்டதேயாகும். மக்களின் உணவு முறையானது காலச்சூழல், இடச்சூழல், கலாச்சாரச்சூழல் என்ற பன்முகப் பரிமாணங்களை உட்செறித்தது. ஒவ்வொரு இனமக்களுக்கும் இம்மேற்காண் அடிப்படையில் உணவுமுறையானது வேறுபடுகின்றது.

இத்தகு உணவுமுறை படைக்கப்படுகின்ற இடத்தினைப் பொறுத்து பல்வேறு நம்பிக்கைகளையும், வழக்காறுகளயும் உட்கொண்டது. நாட்டுப்புறம் சார்ந்த கலாச்சார கூறுகளுள் ‘விலக்கு’ (tabo) என்பதும் ஒன்று. ‘விலக்கு என்ற சொல் புனிதம் புனிதமற்றது என்ற இரண்டு மாறுபட்ட பொருளைக் கொண்டது’ (தே.ஞானசேகரன்.2010).

Continue Reading →

எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் கடிதம்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக ‘அமெரிக்கா’ , ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆகிய நூல்கள் வெளியானபோது , நண்பர் ஸ்நேகா பாலாஜி அந்நூல்களை வல்லிக்கண்ணன் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அவ்விதம் கிடைத்த எனது நூலான ‘அமெரிக்கா’ பற்றிய கருத்துகளைத் தெரிவித்து அவர் தனது முத்து முத்தான கையெழுத்தில் எட்டு பக்கக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்

Continue Reading →

எழுத்தாளர் சீர்காழி தாஜின் கடிதம் 1

எழுத்தாளர் தாஜ்

அண்மையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் மறைந்தவர் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அவர் என்னுடன் முதன் முதலில் தொடர்பு கொண்டது இங்கு நான் பகிர்ந்துக்கொள்ளும் நீண்ட கடிதம் மூலம்தான். தமிழகத்திலுள்ள நூலகமொன்றில் என் ‘அமெரிக்கா’ , ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆகிய நூல்களை வாசித்து விட்டு எனக்கு முதன் முதலாக அவர் எழுதிய கடிதம் இதுதான். இதன் பின்னர் அவர் எனக்கு மேலும் சில நீண்ட கடிதங்களை அனுப்பியிருந்தார்.

Continue Reading →

தமிழ் தெலுங்குச் சிறுகதைகள் ( 1970 வரை )

 - சுப்ரபாரதிமணியன் -’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல. அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்ற பார்வையை வெளிப்படுத்தும் பாரதி சிறுகதையில் நவீன வடிவத்தை மறுத்து பழைய மரபின் வாய்மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியை கைக்கொண்டார் என்பது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். .தமிழின் முதல் சிறுகதை “ குளத்தங்கரை அரசமரம் “ சிறுகதையை எழுதிய வவேசு ஐயர் என்பதை மறுதலித்து பாரதியின் ஆறில் ஒரு பங்கு, ரயில்வே ஸ்தானம் போன்றவற்றை முன் நிறுத்தும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன .வவேசு ஐயர் கதை தாகூர் எழுதிய காட்டேர் கதா என்னும் வங்க கதையின் ஒரு தழுவல் என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது. அவரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அது வெளிவந்தது. தாகூர் கதையில் ஆற்றங்கரை படிக்கட்டு சொல்லும் விவரிப்பில் எட்டு வயதில் விதவையான ஒரு பெண் பிறகு சிறுவயதில் சாமியார் ஒருவரிடம் மனதை பறிகொடுத்து விரத்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது பற்றியது. அய்யரின் கதையில் சிறுவயதில் மணம்முடிக்கப்பட்ட ருக்மணி வரதட்சனை கொடுமை காரணமாக குளத்தில் குதித்து உயிரை துறக்கிறாள்  என்பதை குளத்தங்கரை அரசமரம்  கதை சொல்கிறது. இது 1915 இல் விவேக போதினியில் வெளிவந்து .அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில்  இடம்பெற்றது,

தெலுங்கு இலக்கிய உலகில் 1910 காலத்திய குரஜாட அப்பாராவின் தித்துப்பாட்டு ( சீரமைப்பு) என்ற கதை புதிய வடிவச் சிறுகதைக்கு முக்கிய உதாரணம் எனப்படுகிறது. ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், பதினாறாம் நூற்றாண்டு முதல்,புராணங்களில் இருந்து அரிதாக அறியப்பட்ட கதைகள் தெலுங்கு மொழி காவியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியது. பொதுவாக இலக்கியப் படைப்புகள் அகன்யா அல்லது கந்தா, சரித்ரா, விஜயா, விலாசா மற்றும் அபியுதாயா என்னும் தலைப்பின் கீழ் ஒரு ஒற்றை நாயகனை பற்றியும் அவனது பராக்கிரம்ங்களைப் பற்றியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைப்புகளில் பொதுவான விஷயங்கள் கவிதை வடிவிலேயே எழுதப்பட்டிருந்தன.

Continue Reading →

பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் BFA

பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் BFA- சந்திரகெளரி சிவபாலன் -பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியரும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும்.

வெற்றிமணி பத்திரிகை தாயகத்தில் ஆரம்பித்து 69 வருடங்கள் ஆகின்றன. அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்த வெற்றிமணி அவர் மறைவின் பின் நின்று போக அவருடைய மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் மீண்டும் தாயகத்தில் வெற்றிமணி மாணவர் காலாண்டு இதழாக இன்றும் வெளியீடு செய்து கொண்டு வருகின்றார். தாயகத்தில் ஏற்பட்ட சில பல  சூழ்நிலைகள் காரணமாக தாமதங்கள் அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

ஆனால், ஐரோப்பாவில் இவர் புலம்பெயர்ந்து தன்னுடைய வாழ்க்கையைத் தளம் அமைத்த பின்  மீண்டும் வெற்றிமணி பத்திரிகையை யேர்மனியில் ஆரம்பித்து இம்மாதம் (ஆனிமாதம் 1994 – ஆனிமாதம் 2019) 25 வருட வெற்றி காண்கின்றார். தற்போது இலண்டன், சுவிஸ், யேர்மனி ஆகிய நாடுகளில் பலரும் தேடும் சிறப்புப் பெற்ற இலவச வண்ணப் பத்திரிகையாக இப்பத்திரிகை வெளிவருகின்றது. இப்பத்திரிகை எவ்வாறு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது என்னும் வரலாற்றை இத்தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.

Continue Reading →

முருகபூபதியின் “இலங்கையில் பாரதி” ஆய்வு நூல் மதிப்பீடு: நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வரலாற்றை நயமுடன் பதிவுசெய்கிறது.

முருகபூபதியின் 'இலங்கையில் பாரதி' - ஞா. டிலோசினி ( இலங்கை - கிழக்கு பல்கலைக்கழகம்) -அவுஸ்திரேலியப் புகலிட எழுத்தாளராகிய முருகபூபதி அவர்கள், ஈழத்து இலக்கியம் மற்றும்  ஊடகத்துறை வளர்ச்சியில்  முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கூடாக  தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்திய இவர்,   இருபதுக்கு மேற்பட்ட நூல்களை   இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். முருகபூபதியின் அயராத முயற்சியினால் இலங்கையில் பாரதி என்ற ஆய்வு நூல், முகுந்தன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  இலங்கையில் பாரதி , மகாகவி பாரதி பற்றிய பல்வேறு விடயங்களை  நீண்ட காலமாக  தேடித்தொகுத்து  ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்டுள்ள    ஆய்வு நூலாகும்.

இந்நூலில்  பாரதியை அறிமுகம் செய்யும்  அங்கம் 01  இல், பாரதியின் நண்பர்கள் பற்றிக் கூறப்படுகிறது. பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாரதியின் நண்பர்களை விபரிக்கும் இப்பகுதியில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல்கள், வர்த்தகர்கள், தீவிரவாதிகள், விடுதலைப்போராளிகள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஹரிஜனங்கள், பாமரர்கள் எனப் பலதரப்பட்டவர்களும்  வருகிறார்கள். அங்கம் 02  இல் மதம் பிடித்த யானையிடம் இருந்து பாரதியைக் காப்பாற்றிய குவளைக்கண்ணன் என்கின்ற கிருஷ்ணமாச்சாரியார் பற்றியும், பாரதியின் மறைவு பற்றியும், பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமி பற்றியும் கூறப்படுகின்றது. இப்பகுதியில் பாரதியின் ஞானகுரு இலங்கையர் என்ற பெருமையையும் பாரதி நேரில் சந்தித்த ஒரேயொரு இலங்கையர் யாழ்ப்பாணத்துச் சாமி என்பதையும்  நூலாசிரியர் அழுத்திக் கூறுகின்றார். பாரதியின் ஞானகுரு பற்றி  ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல இடங்களில் பதிவுகள் இடம்பெற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பாரதியின் ஞானகுரு பற்றி செங்கைஆழியான் எழுதிய திரிபுகள் பற்றியும் இப்பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது. வேறொரு சாமியாரை பாரதியின் ஞானகுருவாக நிரூபிக்க ஏன் செங்கைஆழியான் முயன்றார் என்ற கவலைக்குரிய விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.

Continue Reading →

ஆய்வு: தொல்குடியும் தொல்தமிழும்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ்மொழியில் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையானதாக வைத்து போற்றத்தக்கது தொல்காப்பியமாகும். தமிழ் மொழிக்குரிய வரைவிலக்கணமாக அமைந்த இந்நூலானது இலக்கண மரபுகளாக எழுத்து, சொல், பொருள் மரபுகளையும் அதன் பயன்பாட்டு முறைகளையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறது. அதிலும் குறிப்பாக, பொருளதிகாரத்தில் அகப்புற மரபுகளையும், மரபியல் என்ற இயலில் தமிழ் மொழிக்குரிய வழக்கு மரபுகளையும் மிக விரிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழ்மொழியின் இருநிலை வழக்கு மரபையும் அதில், வழக்கு மரபாக வழங்கி வருவனவற்றைத் தமிழினம் இடையறாமல் பின்பற்றி வருகின்றது என்பதையும் மரபியலில் பல நூற்பாக்களில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அத்தகைய மரபுச் சொற்கள்  பன்னெடுங்காலமாக வழக்கிலிருந்து  ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பிய மரபியலில் இடம்பெற்றுள்ளன. எழுத்து வழக்கற்று பேச்சுவழக்கினை மட்டுமே கொண்டுள்ள திராவிட தொல்பழங்குடிகளின் வழக்கில் அத்தகைய மரபுச்சொற்கள் வழங்கி வருவது வியப்புக்குரியதே. அத்தகு சொற்களைக் கண்டறிந்து இம்மொழிகளின் உறவு நிலைகளை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்பழங்குடிகள்
மனித குலமானது பல்வேறு இனங்களாகவும், தேசிய இனங்களாகவும், சமூகங்களாகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவற்றுள் மிகவும் தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடிமக்களாவர். பழங்குடிகளே, மனிதகுலத்தின் தொன்மையான நிலையினையும் அதன்பிறகு ஏற்பட்டுள்ள பல்வேறு படிநிலை வளர்ச்சியினையும் அறிந்துகொள்ள சான்றாக உள்ளனர்.  இந்தியா முழுவதும் பல பழங்குடி சமூகங்கள் இருந்தபோதும் தென்னிந்திய அளவில் பழங்குடிகளை மதிப்பிடுவது என்ற நிலையில் சென்னை அரசு அருங்காட்சியகக்; கண்காணிப்பாளராக இருந்த எட்கர்தர்ஸ்டன் 1885ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியா முழுவதும் குலங்களையும் குடிகளையும் ஆராய்ந்து 2000க்கும் மேற்பட்ட பழங்குடிகள், சாதிகள், குலப்பிரிவுகள் இருப்பதாக இனங்கண்டார். அதன்பின்னர் இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம் 1985இல் இந்தியா முழுவதும் 4635 சமூகங்கள் உள்ளதெனவும் அவற்றுள் பழங்குடி சமூகங்கள் 461 என்றும் ஆய்வின் வழி வெளிக்கொணர்ந்தது. தமிழக அரசுpன் அட்டவணைச் சாதிகள் அமுலாக்கச் சட்டப்படி (1976) தமிழகத்தில் 36 பழங்குடிச் சமூகங்கள் உள்ளன எனவும் வரையறுத்தது. மற்றொரு நிலையில், இந்தியாவில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைப்புக்குள்ளாகின. அதனால் எல்லைகள் மாற்றம் பெற்றன. இதனால் பழங்குடிகள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டனர். இதில் மாநில அளவில் பழங்குடிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு மைய அரசு பழங்குடிகளுள் மிகத் தொன்மையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அரசின் உதவிகளை தர எண்ணியது. இதனால் 1969ஆம் ஆண்டு ‘சிலுஆவோகுழு’ ஒன்றை அமைத்து இந்திய அளவில் தொன்மைப் பழங்குடிகளை இனங்காணுமாறு பணிக்கப்பட்டது. அவ்வாறு வரையறுப்பதற்குப் பின்வரும் காரணிகள் அடிப்படையாகக் கொண்டது அக்குழு. அவை.

Continue Reading →

சர்வதேச ஆண்கள் தினம்

குறிப்பாகச் சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது. எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், இந்த வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருக்கிறது.

ஆணாதிக்கத்தால் உருவாகும் பல்வகையான பிரச்சினைகளுக்கெல்லாம் சமூகமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வும் உருவாகும் என்பதே யதார்த்தமாகும்.
அவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகத்தில் நிகழும் கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.

Continue Reading →

நாமலின் அரசியல் முதிர்ச்சியும், கோ.ரா.வின் அரசியல்முதிர்ச்சியின்மையும்.

நாமல் ராஜபக்சஜனாதிபத்தேர்தல் முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் கருத்துகளை உள்ளடக்கிய பதிவொன்றினை இணையத்தில் வாசித்தேன். அதிலவர் கூட்டமைப்பின் பேச்சையும் மீறித் தம் கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகவிருந்தது. அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவரே இவ்விதம் கூறக்கூடும். சென்ற தடவையை விட இம்முறை தம் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பினும், அதனை நோக்காது, கிடைத்த வாக்குகளை மையமாக வைத்து ஆரோக்கியமாக அணுகிய நாமலின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடுத்து அநுராதபுரத்தில் பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்சவோ , பதவியேற்பு வைபவத்தில் தான் சிங்கள பெளத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றிவாகை சூடியதாகக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவித்தன. தமிழ் மக்களும் தம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூடவே கூறியிருந்தார். கோ.ரா.வின் அரசியல் முதிர்ச்சியின்மைக்கு இக்கூற்றுகள் எடுத்துக்காட்டுகளாகும்.

தமது பதவியேற்பு வைபவத்தில் கோ.ரா செய்த முக்கியமான தவறுகளாக நான் கருதுவது:

1. அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப்போரில் கொன்ற துட்டகாமினி கட்டிய தூபியான ரூவன் வெலிசாயவில் தனது பதவியேற்பு வைபவத்தை நடத்தியது. இதன் மூலம் அவர் கூற விழைவதுதானென்ன? நவீன துட்டகாமினி தானென்று கூறுகின்றாரா? நவீன எல்லாளனான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போரில் கொன்று வெற்றிவாகை சூடியதைக் குறிக்குமொரு குறியீடா மகாதூபி ரூவன்வெலிசாய. கோ.ரா.வும் அவர் கீழிருந்த இராணுவத்தளபதிகள் பலரும் யுத்தத்தில் யுத்தக்குற்றங்கள் பலவற்றைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சமயத்தில் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் நோக்கில் இவ்வைபவத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதா?

Continue Reading →