பிரெஞ்சு நாவல்: காதலன் (4, 5, 6, 7, 8 & 9)

காதலன் – 4

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாஎனது இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்திருந்தான். 1932ம் ஆண்டிலிருந்து 1949ம் ஆண்டுவரை சைகோனில் இருப்பதென்பது பெண்மணியின் திட்டம். இளைய சகோதரின் இறப்பு அவள் வாழ்க்கையை முடக்கிவிட்டது. அவள் வார்த்தையில் சொல்வதென்றால், ‘வீடு, வீட்டை விட்டால் இளைய சகோதரனின் கல்லறை,’ முடிந்தது. பிறகு ஒருவழியாக பிரான்சுக்குத் திரும்பினாள். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தித்தபோது என் மகனுக்கு இரண்டுவயது. இச்சந்திப்பு கூட காலம் கடந்ததே. அவளது மூத்த மகனைத் தவிர்த்து, எங்களை இணைக்க வேறு விஷயங்கள் இல்லை என்பதால், எங்கள் சந்திப்பு அர்த்தமற்றது என்பதைப் பார்த்த்வுடனேயே புரிந்துகொண்டோம். ‘லுவார்-எ-ஷேர்'(Loire-et-Cher) என்ற இடத்தில் பதினான்காம் லூயிகாலத்து அரண்மனை மாதிரியான ஓர் இடத்தைப் பிடித்து தன் வாழ்நாளின் எஞ்சிய நாட்களை அங்கே கழிப்பதென்று, வேலைக்காரி ‘தோ’வுடன் குடியேறினாள். .அங்கும் இரவென்றால் அவளுக்குப் பயம், வேட்டைக்கான துப்பாக்கியொன்றை விலைகொடுத்துவாங்கி பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டாள். மேல்மாடியிலிருந்த மச்சுகளில் ‘தோ’ காவல் இருந்தாள். தனது மூத்த மகனுக்கு ஆம்புவாஸ்(Amboise) அருகே சொத்தொன்று வாங்கினாள். அங்கு சுற்றிலும் ஏறாளமாய் மரங்கள். ஆட்களை ஏற்பாடுசெய்து மரங்கள் முழுவதையும் வெட்டிச் சாய்த்தான். பாரீஸில் இருந்த பக்காரா சூதாட்டவிடுதிக்குச் சென்றான். ஒர் இரவிலேயே மரத்தை விற்றுச் சம்பாதித்த பணம் அத்தனையும் தொலைந்தது. கணத்தில் நினைவுகள் வேறுதிசைக்கு பயணிக்க, எனது விழிகள் கண்ணீரில் மிதக்கின்றன, அக்கண்ணீருக்கு மூலம் எனது சகோதரனாக இருக்கலாம். மரங்களையும், அதற்குண்டான பணத்தினையும் இழந்தபிறகு நடந்த சம்பவம் நினைவில் இருக்கிறது. ‘மோன் பர்னாஸில்'(Montparnasse) லா கூப்போல்(La Coupole)1 எதிரே, மோட்டார் வாகனத்திற்குள் அவன் படுத்துக்கிடந்தாய் நினைவு. அதுத் தொடர்பாக வேறு எதையும் நினைவுபடுத்த இயலவில்லை. பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பதை அறிந்திராத ஐம்பது வயது குழந்தையான மூத்தமகனுக்கென்று, அவ்வளவு பெரிய கோட்டையை வைத்துக்கொண்டு அவள் செய்த காரியங்கள் கற்பனைக்கு எட்டாதது. கோழிக்குஞ்சுகள் பொறிக்கவென்று எந்திரங்கள் வாங்கினாள், கீழே இருந்த பெருங்கூடமொன்றில் அவற்றைப் பொருத்தினாள். திடுமென்று, அருநூறு குஞ்சுகள், நாற்பது மீட்டர் பரப்பளவுகெண்ட கூடம் கோழிக்குஞ்சுகளால் நிறைந்தன. எந்திரத்தின் வெப்ப அளவை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாததால் குஞ்சுகளின் அலகுகள் பொருத்தமின்றி இருந்தன, அவைகளை மூட இயலாலாமல் குஞ்சுகள் தவித்தன, பசியில் வாடின. கோழிக்குஞ்சுகள் பொறிக்க இருந்த நிலையில் கோட்டைக்குச் சென்ற ஞாபகம், அதன்பிறகு செத்துக்கிடந்த குஞ்சுகளும், அவற்றுக்கான தீனியும், கெட்டு துர்நாற்றமெடுத்தபோது அங்கு மறுபடியும்போயிருக்கிறேன், வாந்தி எடுக்காமல் அப்பொழுது சாப்பிட்டதில்லை.

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (8, 9 & 10)

8.   சித்தப்பா
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாநான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன்! கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா….! மலேசியாவில், சிலாங்கூர் மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையில்லை! காப்பார் பட்டணத்தில்தான் மலேசியாவிலேயே அதிகமாக தமிழர்கள் வாழும் இடம் என்ற தகவலையும் சித்தப்பா கூறக்கேட்டிருக்கிறேன். பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகப் போட்டியிட்டாலும் கண்டிப்பாக ஒரு தமிழர்தாம் போட்டிப்போடுவது வழக்கமாகும்! அப்படியொரு பாரம்பரியம் அங்கே எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்து வருகிறது.  அறுபதாம் ஆண்டுகளில்,ஆளும் பாரிசான் கட்சியைச் சேர்ந்த ‘தொழிலாளர் அமைச்சர்’ டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி இன்றைய ‘மக்கள் கூட்டணி’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வீற்றிருக்கும் மாணிக்கவாசகம் வரையில் அதுவே இன்றுவரை நடைமுறையாகும்!

Continue Reading →

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள – பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று சிங்கள – பவுத்த பேரினவாத அரசு  பகிரங்கமாக அறிவித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. கேட்டால் அவர்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் செய்தி ஏடுகளில் வெளிவந்த செய்தியின் படி வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகிறதாம். வரும் யூன் மாதத்திற்கு முன்னர் வடக்கில் 18 ஆயிரம் சிங்கள குடும்பங்களைக் குடியேற்றத் திட்டம்! என்ற தலைப்பிட்டு வெளிவந்திருக்கும் அந்தச் செய்தியின் படி வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தவும் அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான சிறப்புக் கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

Continue Reading →

மலேசியா: மிட் லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 14-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம்

சங்கத்தின் தலைவர் உயர்திரு.வே.ம.அருச்சுணன் அவர்களின் தலைமையில் சங்கத்தின் 14 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் 21.4.2013 ஆம் நாள் காலை 9.00 மணியளவில் பள்ளிச் சிற்றுண்டிச்சாலையில் நடைபெறவிருக்கிறது. ‘நியாட்’…

Continue Reading →

அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்பட திரையிடல் & கலந்துரையாடல்.

அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்பட திரையிடல் & கலந்துரையாடல்.

நாள்: 21-04-2013, ஞாயிற்றுக் கிழமை
இடம்: பவள விழா அரங்கம், மெரினா கேம்பஸ், சென்னை பல்கலைக் கழகம், வள்ளுவர் சிலை எதிரில்
நேரம்: மாலை 5 மணிக்கு.

நண்பர்களே ஞாயிற்றுக் கிழமையை (21-07-2013) மறந்துவிடாதீர்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை ஜாலியாக மெரினா பக்கம் குடும்பத்தோடு வந்து, கடற்கரையில் கொஞ்சம் நேரம் கழித்துவிட்டு, அப்படியே இந்த நிகழ்விற்கு வந்து விடுங்கள். மா. அரங்கநாதன் தமிழின் முக்கியமான எழுத்தாளர். அவரோடு நேரிடையாக கலந்துரையாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள். நண்பர்களுக்காகவே, அவர் புதுவையில் இருந்து வரவிருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் ரவிசுப்ரமணியன்.

Continue Reading →

மெல்பனில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு!

மெல்பனில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு!மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன்ää திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும்.

Continue Reading →

ஸ்கார்பரோ, கனடா: இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ (ஏப்ரில் 27, 2013)

ஸ்கார்பரோ, கனடா: இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு -  'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' (ஏப்ரில் 27, 2013)

ஸ்கார்பரோ, கனடா: இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு –  ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ (ஏப்ரில் 27, 2013)

Continue Reading →

மதுரக்குரல் மன்னன் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவு!

மதுரக்குரல் மன்னன் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவு!

பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைந்து விட்டார். ஆனால் அவரது பாடல்கள் நிரந்தரமானவை. அவற்றுக்கு அழிவேயில்லை. தனது பாடல்களின் மூலம் அவரது அந்த மதுரக்குரல் நிலைத்து நிற்கப் போகின்றது. பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் இந்தியத் திரையுலகு மிகவும் பெருமைப்படத்தக்க பாடகர்களிலொருவர். இந்தியாவின் பல் மொழிகளிலும் அவர் பாடியிருக்கின்றார். மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளார்.  அவரது மறைவு கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பென்றாலும், அவர் தனது பாடல்களினூடு நிரந்தரமாக வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். தனக்கென்று மென்மையான குரல் வாய்க்கப்பெற்றவர். இவரது அந்த மென்குரல் நடிகர் ஜெமினி கணேசனுக்கு அற்புதமாகப் பொருந்தியது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற பல நடிகர்களுக்கு இவர் பாடியிருந்தாலும் இவரது அந்த மென்குரல் காரணமாக இவர் ஜெமினி கணேசனுக்காகப் பாடிய பாடல்கள் மிகுந்த வரவேற்பினைப்பெற்றன.

Continue Reading →

முகநூல்: தனி மனிதன் உருவாக்கிய கருத்துக்களம்: 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர்?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார். 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக்கொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்…ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார். 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூககாடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை…!

Continue Reading →

என்.சண்முகதாசன் – கட்சியின் குழந்தை – ஒர் அனுபவம்!

பகுதி ஒன்று

என்.சண்முகதாசன் – கட்சியின் குழந்தை – ஒரு அனுபவம்!கனடாவில் ரொரொன்டோ நகரில் தேடகம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட “(சமரசம் செய்யாத) ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்ற என்.சண்முகதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல் அறிமுக விமர்சனக் கூட்டத்தில் கருத்துக்கூற என்னையும் அழைத்தமைக்கு தேடகத்திற்கும் சேனாவிற்கும் கோணேசுக்கும் நன்றிகள்.. இப் பதிவை மூன்று பிரிவுகளில் முன்வைக்கின்றேன்… முதலாவது இக் கட்சியினுடனான எனது உறவும் அனுபவமும் இரண்டாவது தத்துவமும் கோட்பாடும் மூன்றாவது நடைமுறை வேலைத்திட்டம்.

சண்முகதாசன் அவர்களின் கூட்டம் ஒன்று இலங்கையில் நடைபெறுமானால் இப்படி நடைபெறாது. எல்லாம் சிகப்பு மயமாக இருந்திருக்கும். 25 வருடங்களுக்கு முன்பு எனின் இன்றைய கூட்டத்திற்கு வருவதற்காக நானும் சிகப்பு உடை ஒன்றைத் தேடிப் போட்டிருப்பேன். பச்சை நீல நிற ஆடைகளை தவிர்த்திருப்பேன். ஏனெனில் அன்று இந்த நிறங்களுக்கெல்லாம் ஒரு கட்சி அடையாளம் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. ஐ.தே.க என்றால் பச்சை. சுத்திரக்கட்சி என்றால் நீலம். இக் கட்சிகளை சிறுவயதிலிருந்தே விரும்பவில்லை. வளர்ந்தபின் இக் கட்சிகள் எனக்கு உடன்பாடில்லாதவையாகவும் இருந்தன. இதனால் பாடசாலையில் சிகப்பு நிற விளையாட்டுக் குழுவிலையே என்னை இனைத்துக் கொண்டேன். ஆனால் நிறங்கள் தொடர்பான நமது மனப் பதிவுகளை காலம் மாற்றிச் செல்கின்றது. இன்று இந்த நிறங்கள் குறிப்பிட்ட கட்சி அடையாளங்களையும் கடந்து வேறு, உதாரணமாக சூழல் தொடர்பான, விடயங்களைக் குறிக்கின்றன. அந்தடிப்படையில்தான் இன்று நான் தேர்தெடுத்து உடுத்திருக்கும் இந்த உடையும் பல நிறங்களில் இருக்கின்றது. இப்படித்தான் நமது நம்பிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் காலத்திற்கு காலம் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன என நினைக்கின்றேன்.

Continue Reading →