Appreciating the feminine notes in Carnatic music

The earliest women I saw and heard in music and who marked my memories profoundly were M.S. Subbulakshmi and D.K. Pattammal. The earliest women I saw and heard in music and who marked my memories profoundly were M.S. Subbulakshmi and D.K. Pattammal. They were iconic figures then already, when I discovered them in my childhood. While they enjoyed much in common, they were also sharply in contrast. Both were towering and well respected women on the music front. Both enjoyed large and faithful audiences, sang to full houses. Both shone in their brilliant diamonds and Kanchipuram silks. They remained all through loyal to the traditional Tamil-lady look, their sarees drawn over the shoulders. Pattammal was pleasant looking while MS was strikingly beautiful. MS had her faithful retinue on stage till the end. Pattammal had her devoted brother and outstanding musician in himself, D.K. Jayaraman with her in their duet performances, till his death separated the pair. Pattammal’s spouse obliged her by granting her permission to carry on her career. MS’ spouse went out of his way to chart his wife’s course. Both lent their voices to films and immortalised several classical lyrics. While MS became an emblematic figure worldwide synonymous with her nightingale-like voice and the trance that she spun her audience into with her soothing bhajans and multilingual compositions, Pattammal remained the unchallenged goddess of laya, of emotion-laden singing, of a clarity and articulation hitherto unmatched and her devotion to Tamil lyrics.

Continue Reading →

அலைகள்.காம்: டென்மார்க் பொருளியலாளர் அலன் தர்மன் புதிய பதவிக்கு தேர்வு..

அலன் தர்மன்டென்மார்க்கின் அதிக வருமானம் தரும் நோவா நோடியாவில் NNIT ல் ஒரு தமிழ் நிர்வாகி…  நோவா நோடியா குழுமத்தில் உள்ள என்.என்.ஐ.ரி நிறுவனத்தின் நிர்வாகியாக பதவியேற்பது நோவா நோடியாவுடன் தொடர்புபட்ட பணியாகவே உள்ளது. காலில் ஒரு முள் குத்தினால் அதை இன்னொரு முள்ளினால்தான் எடுக்க முடியும் இது இயற்கையின் நியதி.. இந்த உதாரணம் ஈழத்தமிழினத்திற்கு மிகவும் பொருந்தும்.. அதை இப்படி வடிவப்படுத்தலாம்.. கல்வியில் ஏற்பட்ட தரப்படுத்தலால் ஆயுதம் தூக்கி போராடப் புறப்பட்ட ஈழத் தமிழினம் அறத்துக்கு புறம்பாக உலக நாடுகளால் அழிவைச்சந்தித்தது முடிந்த கதை. ஆனால் அந்த அழிவுகளால் ஏற்பட்ட இழப்பை மறுபடியும் வென்று இலக்கைத் தொட வேண்டுமானால் அதற்கும் தற்போதய நிலையில் ஏற்ற வழி கல்வியாகத்தானிருக்கும். பிரச்சனையும் கல்வி அதற்கான தீர்வும் கல்வி… இதுதான் ஈழத்தமிழினத்தின் வரலாறாகப் போகிறது.. கல்வியால் உயர்ந்து சர்வதேச அளவில் முக்கிய பதவிகளில் அமரும்போது அந்தப்பலம் ஒரு சர்வதேச பலமாக உருவெடுக்கும், ஒரு நாள் ஈழத்தமிழினம் தனக்கான சுயமரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள அந்தச் சக்தியே அதி சிறந்த ஆயுதமாக மாறும். இது ஒரு சிந்தனை.. ஆனால்.. ஈழத் தமிழினத்தின் விடிவுக்கு வைக்கப்படும் பல்வேறு தரப்பட்ட யோசனைகளில் இதுவும் ஒரு யோசனையாகும். இது கடினமான வழி ஆனால் சேதம் குறைந்த வழி.. இந்த யோசனையை ஓர் அழகான பின்னணியாகத் தீட்டி அதன் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டிய இளைஞரே டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து தற்போது தலைநகரில் முக்கிய பதவி பெற்றுள்ள அலன் தர்மனாகும்.

Continue Reading →

தமிழ் சினிமாவில் பெண்கள்: கே..பாரதி எழுதிய நூல் (வெளியீடு – விகடன் பிரசுரம்) – ஒரு சிறு அறிமுகம்

மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.

கே.பாரதிLatha Ramakrishnanபெண்களே முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!! – எங்கள் தங்க வைர நகைகளை வாங்கியணிந்து விடுதலையை உணருங்கள்!!! இப்படி பெண்விடுதலையைப் பட்டவர்த்தனமாக வர்த்தகப் பொருளாக்கும் போக்கு ஒருபுறம். மறுபுறம் சின்னத்திரை, சினிமாத்திரைப் பெண் பிம்பங்கள் கடந்த பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைத்த வளர்ச்சி-மேம்பாடுகளையெல்லாம் நலிவுபடுத்திவரும் போக்கு…. இன்று வாழாவெட்டி, மலடி போன்ற வார்த்தைகள் இல்லாத சின்னத்திரை பெரீ…ய்…ய தொடர்நாடகங்களே கிடையாது எனலாம். இரண்டாவது ‘எபிஸோடி’லேயே இருபது வயது நிறம்பாத இளங்கதாநாயகிப் பெண்பாத்திரத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு நாற்பது பேர் நடுக்கூடத்தில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள், ’நம்ம சாதி என்ன சொல்லும்’ என்று சோகப்படுவார்கள்; ஆவேசப்படுவார்கள். அதில் ‘சாதிபேதம் தவறு’ என்று வலியுறுத்துவதைக் காட்டிலும் வலியுறுத்துவதை ‘சாதி முக்கியமல்லவா’ என்ற தொனியே தொக்கி நிற்கும். அதாவது நடப்பு வாழ்க்கையை அத்தனை துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்களாம். சின்னத்திரை ராணி என்று கொண்டாடப்படும் ராதிகாவின் சீரியல்களில் எத்தனை வகை ரவுடிகள் ஊரில் இருக்கலாம் என்று வகுப்பெடுக்காத குறை. நினைத்தமாத்திரத்தில்  முதுகுப்புறமிருந்து பட்டாக்கத்தியை உருவியெடுப்பவர்கள் யாருமில்லையே என்று விஜய் தொலைக்காட்சி ‘ஆபீஸ்’ தொடர்நாடகத்தை நினைத்து ஆறுதலடையலாமென்று பார்த்தால், அதில் உதாரணப் புருஷனாக அடையாளங்காட்டப்படும் மேலதிகாரி விசுவநாதன் பாத்திரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களையெல்லாம் ஒருமையில் அழைக்கிறார், போய்யா வாய்யா என்கிறார். இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும்படி இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறதோ, மூளைச்சலவை செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்கம் வலுவாக , நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் புதிதாக வந்திருந்த மேலதிகாரியொருவர் என் சக ஊழியை ஒருவரை “பத்மா” என்று அழைக்க, “மரியாதை தாருங்கள் ஸார், மிஸஸ் பத்மா” என்று கூறுங்கள்” என்று அவர் அழுத்தமாய் கூறீயது நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தெனாலி படம் பார்க்க நேர்ந்த போது அதில் அண்ணா, அண்ணி, அவர்களுடைய குழந்தைகளோடு கதாநாயகி தொடையில் மேல்பாகம் தெரியும்படியான குக்குட்டைக் காற்சட்டையோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகவே இருந்தது.

Continue Reading →

விக்கிபீடியா: அனைத்துலகப் பெண்கள் நாள் (International Women’s Day)

அனைத்துலகப் பெண்கள் நாள் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

வரலாறு
விக்கிப்பீடியா: அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்(1)

“நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது
 சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
 சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளி!” – பாரதி.-

- பிச்சினிக்காடு இளங்கோ கவிதை… கவிதை என்ற சொல்லைக் கேட்டது எப்போது? கவிதை என்ற சொல்லைப் பார்த்தது எப்போது? துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா? துல்லியமாகச்சொல்லிவிட முயற்சி செய்கிறேன். நடக்கும்போதும் யோசிக்கிறேன். படுத்துக்கொண்டும் யோசிக்கிறேன். அந்தத்துல்லியம் சற்று தூரத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அம்மா பேசிய சொலவடைக்கிடையே மறைந்திருந்ததை கவனிக்கத்தவறிவிட்டேன். இன்று என் மனைவி பேசுவதுபோல் அன்று பேசிய பலரின் சொற்சித்திரங்களைக் கையகப்படுத்த தவறிவிட்டேன். காரணம்…கவிதையை இனம்காணும் பருவத்தில் நான் இல்லை`  அது, கவிதை உணர்வு என்னிடம் தோன்றாமலிருந்த காலம். கவிதை உணர்வு எனக்குள் தோன்றி என்னைத்தூங்கவிடாமல் உசுப்பத்தொடங்கியபொழுதிலிருந்துதான் கவிதையை இனம்காணும் தூண்டுதல் நிகழ்ந்தது.` அந்தத்தூண்டுதலுக்குப்பின்பே கவிதைபற்றிய உணர்வு, கவிதைபற்றிய எண்ணம், கவிதையோடு தொடர்பு வளர்ந்தது .தொடக்கப்பள்ளியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,மூதுரை, நல்வழிப் பாடல்கள்தாம்  முதலில் அறிமுகம். அவற்றை ஒரு கடமையாகப் படித்தோம்; பாடினோம். அவற்றிலிருந்து நாம் பெற்றது சில அசைக்கமுடியாத உண்மைகள்; தெளிவுகள்;வழிகாட்டுதல்கள்; நீதிகள். செய்யுளாகப்படித்தோம். நீதிகளைத்தெரிந்துகொள்ள படித்தோம்.

Continue Reading →

“களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” – இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்!

“களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள்,  இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது.  குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை wetamizhar@live.in  எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.    

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ – ஆஸ்கர் விருது – திரையிடல் – நிகழ்ச்சி நிரல்:

balumahendraபாலு மகேந்திரா அவர்களின் மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்கர் பரிந்துரை திரைப்படங்களின் திரையிடல் எதிர்வரும் சனி (08-03-2014) மற்றும் ஞாயிறு (09-03-2014) நடைபெறும். நாள்: 08-03-2014, 09-03-2014 (சனி மற்றும் ஞாயிறு) – அனுமதி இலவசம், அனைவரும் வருக. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில், தொடர்புக்கு: 9578780400. நேரம்: காலை 10 மணி முதல், 08-03-2014 – சனிக்கிழமை.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் விமர்சனம்

நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் - விமர்சனம் - கல்பனாகடந்த ஜனவரி 2014ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ என்ற நாவலை கையிலெடுத்தபோது என்ன பெரியதாக / புதியதாக இருந்துவிடப் போகிறது மற்ற நாவல்களைப்போல காதல், திகில் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி வாசிப்பதற்கு சற்று அலட்சியம் கொண்டேன். ஆனால், ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ வாசித்த பிறகு தான் தாமதம் கொண்டதற்கு வருந்தினேன். தினம் தினம் எத்தனையோ காதல்கள் நம்மைச் சுற்றிப் பார்க்கிறோம். பெரும்பாலும் அதற்கெல்லாம் ‘அட!!’  என்போம். வியப்போம். எக்ஸைட் ஆவோம். ஆனால் இத்தகைய காதல்களுக்குப் பின்னால் இப்படி ஒரு கோணம் இருக்குமென்று நினைத்ததே இல்லை. பெண்கள் தங்களைப் பற்றியே அறியாத பல விஷயங்களை அறிந்து அதை சமூக நலத்தின் கோணத்தில் ஆராய்ந்து,சமூக நலனுக்கு பொருந்தாதவைகளை இனம் கண்டு நாவலில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நாவலில் வரும் ஆண் – பெண் குறித்த வரிகளில் பலவற்றை வேறெந்த நாவலிலும் படித்ததில்லை. சமையலில் கூட, அதிகமாக பயன்படுத்தினால், உப்பு கரிக்கும். குறைவாகப் பயன்படுத்தினால் ருசி இருக்காது. ஆக எந்த ஒரு பொருளின் பயன்பாட்டிற்கும் மிக நுண்ணியமாக ஒரு அளவீடு இருக்கிறது. இருபது வருடங்கள் முன்பு வரை  உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட பெண் இனம், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் உண்மையான அளவீடு என்ன என்பதை குறிப்பாக மஞ்சு என்கிற கதாபாத்திரம், ரவி என்கிற கதாபாத்திரத்திடமிருந்து விலகிச் செல்லும் இடத்தின் மூலம் புரியவைக்கிறார் எழுத்தாளர்.

Continue Reading →

சிறுகதை: மனங்களின் வலிகள்!

navajothy_baylon_4.jpg - 21.10 Kb9.2.2014.- எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள். புதிதாக நாட்டுக்கு வந்த புஸ்பா மூலையில் உள்ள கதிரையில் முழுசியபடி உட்கார்ந்து மூளையைப் பிசைந்துகொண்டிருந்தாள். கதவின் மணியோசை கேட்டது. அந்தச் சிறிய அறையினுள் குமைந்திருந்து பேசிக்ககொண்டிருந்த நண்பர்களைக் ‘கொஞ்சம் அமைதியாக  இருந்து கதையுங்கோ’ என்று மகேந்திரன் கேட்டுக்கொண்டான். அகதியாக ஆரம்பத்தில் வந்து அடியுண்டு எழும்பியவாதான் இந்த மகேந்திரன்;. நமது நாட்டில் இருந்து அரசியல் தஞ்சம்கோரி வருபவர்களுக்கு இடவசதி, சாப்பாடு, விசா பெறுவதற்கான ஆலோசனைகள்; என்று அவர்களுக்குத் தேவையான  உதவிகள் செய்யும் மனம் படைத்தவர். பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ‘றெஸ்ரோரன்ட்’ ஒன்றில் வேலை செய்பவர். அங்கு பலவிதமான வேலை வாய்ப்புக்கள் வரும்போது அவற்றில் அகதியாக வரும் இளைஞர்களை ஈடுபடுத்தும் செல்வாக்கு மிக்கவர். பிரெஞ்சு முதலாளிகள் மத்தியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக வேலை செய்யக்கூடியவர்கள், கடின உழைப்பாளிகள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.

Continue Reading →

கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும்

கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும்  - யமுனா ராஜேந்திரன் -யமுனா ராஜேந்திரன்மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன்.

கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தினிடையில் வாழ்ந்து, இழந்து, முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஆயிரக் கணக்கான உறவுகளையும் பறிகொடுத்த ஈழ சமூகம், வரலாற்றின் கைதிகளாக, சாட்சிகளாக வாழ்ந்த அந்த மனிதர்களின்பாலான பரிவுடன், அவர்களது சிதைவுகளை, சித்திரவதைகளை, நம்பிக்கைகளை நம்பிக்கைவீழ்ச்சிகளை அதனது தொடர்ச்சியைப் படைப்புக்களாக உருவாக்கியிருக்கிறதா எனும் கேள்வி எவருக்கும் மிகமிக முன்கூட்டிய ஒரு கேள்வியாகத் தோன்றலாம். கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவலை நினவுகூர இக்கேள்வி என்னளவில் இன்று பொருத்தமானது என்றே தோன்றுகிறது.

Continue Reading →