வாசிப்பும், யோசிப்பும் 188: ‘கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’ பற்றிய குறிப்புகள் சில!

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில!'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில! 2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த ‘கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’ நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. 🙂 மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த  நண்பருக்கு நன்றி. 🙂

இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. 🙂

இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம்  கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.

‘கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’ நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய ‘காந்தன் கண்ணோட்டம்’ என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.

‘காந்தனின் கண்ணோட்டம்’ பத்தி எழுத்துகளைப்பற்றி கே.எஸ்.எஸ் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

” நான் இந்த எழுத்துகளை வெகு ஆவலுடனும், ஆர்வத்துடனும் வாசித்து வந்தேன். விளைவு: ஆனந்தம், தகவற்கள விரிவாக்கம், செயற்பாட்டுப்பயன். ஆனந்தம் ஏனெனில் தமிழ்மொழியின் சொல்வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தால் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளகாங்கிதம் நான் அடைந்தமை. தெரியாத சில விபரங்களைக்கோர்த்து அவர் தரும் பாங்கு எனது அறிவை விருத்தி செய்ய உதவியமை சொல்லப்பட வேண்டும்.  காந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத் தன்மை கொண்டவையாதலால், அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெறுகின்றேன்.”

Continue Reading →

ஆய்வு: சிலம்பில் வஞ்சினம்!

ஆய்வு: சிலம்பில் வஞ்சினம் - முனைவா் பா.பொன்னி , உதவிப்பேராசிரியர்மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -சிலப்பதிகாரம் சங்க காலத்தைத் தொடா்ந்து எழுந்த காப்பியம் ஆதலால் சிலம்பில் சங்க இலக்கியச் சாயல்கள் சில தொடா்ந்தும் சில மாற்றம் பெற்றும் அமைந்து வரக் காணஇயலுகின்றது.வஞ்சினம் என்பது புறப்பாடல்களில் காணக் கூடிய ஒன்று.சிலம்பில் வஞ்சினம் இடம்பெறக் கூடிய பல சூழல்களை நாம் அறிமுடிகிறது.சிலம்பில் கண்ணகி சேர மன்னன் ஆகியோரது வஞ்சின மொழிகள் தாண்டி வஞ்சினம் வெளிப்படக் கூடிய சில இடங்களும் காணப்படுகின்றன.

வஞ்சினம்
போருக்குச் செல்லக் கூடிய அரசன் ஓா் இலக்கை முன்மொழிந்து அதனை அடையாத நிலையில் தான் பெறவிருக்கும் கெடுதலையும் உடன்மொழிவது வஞ்சினம் ஆகும்.இந்த வஞ்சினத்தைத் தொல்காப்பியர் காஞ்சித்திணையுடன் பொருத்தி வஞ்சினக்காஞ்சி என்னும் துறையாக அமைத்துள்ளார்.

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.போரில் தனக்கோ அல்லது தம்மை எதிர்த்து வரும் பகைவருக்கோ ஏதோ ஒரு புறம் அழிவு உண்டு என்னும் நிலையாமையை உணா்த்துவதால் இத்துறை காஞ்சித் திணையின் கீழ் அடங்குகிறது.வஞ்சினக் காஞ்சி குறித்து

இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்
( தொல்.பொருள்.புறத்.நூ – 19 )

என்று தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார்.வஞ்சினம் குறித்து “வீரயுகத் தலைவனின் ஆளுமைத்திறனை ( personality )  விரித்துரைக்கப் பாடல்களில் பாணா்களால் பயன்படுத்தப்படுகிறது.மறத்தின் அதன் ஆற்றலில் வெளிப்படும் வெஞ்சினத்தின் அடிப்படையே வஞ்சினம் என்றும் கூறுவா்” (ந.கடிகாசலம் ச.சிவகாமி சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு சிந்தனைப் பின்புல மதிப்பீடு ப.361 )என்று குறிப்பிடுவா்.

Continue Reading →

போராட்டத்தின் முற்றுப்புள்ளி?

இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!‘நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது; நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை.

இப்போது நான் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செய்யலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி, எது தவறு என்பதை உணர்ந்தபோது, அவர்கள் செய்ததில் எது சரி, எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.’

சம கால வீர மங்கையான மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் மேற்படி கருத்து சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலாக அமைந்தது. வீர மங்கை. மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் என அறியப்பட்டுள்ள அவர், மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தவர்.

அயல் தேசத்தவர்களின் சட்ட விரோதமான ஊடுருவலைத் தடுப்பதற்காக, 1958 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முற்றுமுழுதாக ஆயுத மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச் சட்டம் வழங்குவதால் இராணுவம் மிக மோசமான வன்முறைகளை அம் மாநில பொதுமக்கள் மீது பிரயோகிக்க ஆரம்பித்தது. அம் மாநிலங்களில் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள்  எழுந்து கொண்டேயிருந்தன.

இந்த நிலையில் ‘மலோம் படுகொலை’ என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படும், மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ஆயுதப் படையினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பொதுமக்களில் பத்துப் பேர் சுடப்பட்டு இறந்த சம்பவம், 2000.11.02 அன்று நிகழ்ந்தது.

Continue Reading →

உலகின் முதல் அணுஉலை இயக்கிய என்ரிகோ பெர்மி

- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா -* பதிவுகள் இணைய இதழில் (ஜூன் 2002 இதழ் 30) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். –


அணுவைப் பிளந்தார்கள்!

1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ பெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளை ஏவி, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த அணுப் பிளவுச் சம்பவம் அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதிய கதிர்வீச்சு உலோகமும் மற்றும் சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் பெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது! ஆனால் சிறிய துகள்களை இரசாயன முறையில் பிரித்துக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டார்! அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப் பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது புரியவில்லை.

ஜெர்மன் வெளியீடு “பயன்படும் இரசாயனம்” [Applied Chemistry] இதழில் ஐடா & வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், பெர்மியின் பிழையான கருத்தை எடுத்துக் கூறி, “கன உலோகம் யுரேனியத்தை நியூட்ரான் தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது” என்று எழுதி யிருந்தார்கள். மெய்யான இவ்வரிய விளக்கத்தை, பெர்மி உள்படப் பலர் அன்று ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்! சாதாரண ஆய்வகச் சாதனங்களால் எளிதாக அணுவைப் பிளக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான் அணுவை உடைக்க முடியும், என்பது பெர்மியின் அசைக்க முடியாத கருத்து.  பெரும்பான்மையான பௌதிகவாதிகள் [Physicists] பெர்மியைப் பின்பற்றி, யுரேனியம் நியூட்ரானை விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞான மேதைகள் அணுவைப் பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தையே கொண்டிருந்தனர்.

Continue Reading →

நேதாஜிதாசன் கவிதைகள்!

நேதாஜிதாசன் கவிதைகள் 5!1)  பயப்படுதல்

என் கவிதையை கண்டு பயப்படுகிறேன் .
அதில் பொய்களும் உண்மைகளும் கனவுகளும் கலந்திருக்கின்றன.
அதிலுள்ள பொய்கள் எனக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன .
மேலும் அதிலுள்ள உண்மைகள் எனக்கு பெருமையை ஏற்படுத்துகின்றன.
அதிலுள்ள கனவுகள் எனக்கு மயக்கத்தை தருகின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை கேலியாக பார்க்கின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை அடையாளம் காட்டுகின்றன .
எனக்கு என் கவிதையை கண்டால் பயமாக இருக்கிறது.
அதனால் பிரார்த்திக்கிறேன் “தயவு செய்து என் கவிதைகள் காலத்தை தாண்டி நிற்க வேண்டாம்; ஏழைகளின் அருகில் நண்பனாக உட்கார்ந்திருந்தால் அது போதும்”

2)  ஆச்சரியப்படல்

என் கவிதையை கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்த உலகம் என் கவிதைக்குள் மாட்டிக்கொண்டு என்னிடம் கேட்கிறது என்னை விடுவி.
அங்கு வெள்ளை மாளிகை, கிரெம்ளின் என அத்தனை அதிகார பீடங்களும் அடைபட்டு கிடக்கிறது.
என் கவிதையின் கொடி பறக்கிறது அனைத்து அதிகார பீடங்களிலும் .
என் கவிதையின் வார்த்தைகள் அதன் அருகில் உள்ள வார்த்தைகளுடன் பேசிக்கொள்கின்றன.
என் கவிதையின் வார்த்தைகள் காத்திருந்த வாசகனிடம் புதிரை கேட்காமல் பதிலை சொல்லி புதிரை சொல் என கேட்கிறது .
என் தாயை முதல்முறை பார்த்தது போல ஆச்சரியமாக உள்ளது என் கவிதையின் சாகசங்களை பார்க்கும்போது.
என் காகிதம் என்னை ஆச்சரிய குறியிடு என கெஞ்சுகிறது
அதே சமயம் என் பேனா என்னை மீறி ஆச்சரியக்குறியிட்டு மகிழ்கிறது .

Continue Reading →

அணுப் பிணைவு சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி

அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்– * பதிவுகள் இணைய இதழில் (ஆகஸ்ட் 2002 இதழ் 32) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். –


சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத்தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth’s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்கு கிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்துதரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா?

1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது!

மின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது! செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன! சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலி·போர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர்! சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங்களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.

Continue Reading →

தமிழ்ப்புலமைப் பேராசான் வித்துவான் வேந்தனார்

வித்துவான் வேந்தனார்ஆயிரத்தித் தொழாயிரத்தித் தொண்ணூறுகளில் மல்லிகைப் பந்தல் வெளியீடாகக் கவிஞர் தில்லைச்சிவன் ‘நான்’ என்றொரு கையடக்கப் புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் என்னிடம் கனடாவில் இருக்கிறது. வேலணை, வங்களாவடிச் சந்தியை மையமாக வைத்து, ஒரு மூன்றுமைற் கற்கள் விட்டத்தில் ஒரு ஆரை கீறினால், அதற்குள் வரலாறாக இருக்கும் ஐம்பது புலவர்கள் என்ற பதிவைக் கொண்ட ‘வேலணைப் புலவர்கள் வரலாறு” தான் அந்த நூல். அந்நூல் வெளிவந்த உடனேயே விற்றுத் தீர்ந்தது என்ற தகவலையும், கவிஞர் தில்லைச்சிவன் எனக்குத் தந்தார்.

புத்தகத்தில் எனது பெயரும் பதிவாகி இருப்பதைப் பார்த்தேன். கவிதையும், கல்வியும் சிறந்த வேலணையில், பள்ளம்புலம் சார்ந்த பகுதியில் இரண்டு சைவ ஆலயங்கள் பிரசித்தமானது. ஒன்று பள்ளம்புலம், முருகமூர்த்தி கோவில், மற்றையது மயிலப்புலம் திருப்பொலி ஐயனார் கேவில். இந்தப் பாடல்பெற்ற தலங்களின் பதிவில் முதலில் வருபவர் வித்துவான் வேந்தனார் ஆகும்.

வித்துவான் வேந்தனார்
சரவணை கிழக்கு, வேலணையில் பள்ளம்புலம்தான் வித்துவான் வேந்தனார் தோன்றிய இடம் ஆகும். வித்துவான் வேந்தனார் எழுதிய கட்டுரைகள் மட்டும் ஆயிரக்கணக்கானவை. அவர் தான் இருந்து கல்விகற்ற ஐயனார் கோவில் ஆலமர நிழலை பின்வருமாறு ஒரு வெண்பாவில் குறிப்பிடுகிறார்.

‘உள்ளம் உவகையுற ஊக்கமுடன் வீற்றிருந்து
அள்ளுசு வைத்தேனை ஆர்ந்திடல்போல்-விள்ளுஞ்சீர்
தெய்வமார் செந்தமிழைத் தேர்ந்துநான் கற்றவிடம்
ஐயனார் கோவிலடி ஆல்! ”

என்பது விசாலித்து விசுவரூபமாகி நிழல்கொடுத்து நின்ற அந்த ஆலடி ஐயனாரது அருள்பெற்றவர் என்பதற்குச் சான்றான வெண்பாவாகும்.

Continue Reading →

மெல்பனில் தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு!

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

Continue Reading →

ஆய்வு: கலிப்பாவும் தமிழரின் இசைப்பாடல் வடிவங்களும் – ஒரு வரலாற்றுக்குறிப்பு

தோற்றுவாய்

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் தமிழில் தோன்றிய பாவடிவங்களை யாப்பிலக்கணமரபின் அடிப்படையில் நால்வகைப்படுத்தி நோக்கலாம். இந்நால்வகைப் பாவடிவங்களில் ஒன்று கலிப்பாவாகும். இப்பாவடிவமானது ‘துள்ளல்’ என்ற ஓசைப்பண்பிலிருந்து உருவானதாகும். ஏனைய மூன்று பாவடிவங்களான ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகியவற்றைவிட தமிழரின் இசைமரபுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள பா வடிவம் கலிப்பாவாகும். குறிப்பாகத் தமிழின் பண்டைய இசைமரபு நூல்கள் பெரும்பான்மையும் அழிந்துபட்ட நிலையில் அக்காலத்தய இசைமரபின் இயல்புகளைத் தெரிந்து தெளிவதற்குத் துணையாக நிற்கும் முக்கிய பா வடிவம் இதுவாகும். அத்துடன் தமிழில் காலந்தோறும் தோன்றிய இசைவடிவங்கள் பலவற்றின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது இப்பாவடிவம் ஆகும் என்பதும் தமிழரின் இசைவரலாற்றினூடாக அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய செய்தியாகும். இவ்வாறான இப்பாவடிவத்தின் இசையியல் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கணநூல்களின் துணைகொண்டு எடுத்துரைக்கும் முயற்சியாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

1. கலிப்பாவின் இயல்பும் அதன் இசைச்சார் அடிப்படைகளும்

கலிப்பாவின் இயல்பு மற்றும் அதன் இசைச்சார் அடிப்படைகள் என்பவற்றை அறிந்து  கொள்வதற்கு முதற்கண் ஏனைய மூவகைப்பாக்களோடும் அதனைத் தொடர்புபடுத்தி நோக்குவது அவசியமாகிறது. மேற்கூறிய நால்வகைப் பாவடிபவங்களில் வெண்பா தவிர்ந்த ஏனைய மூன்றும்;; தொன்மையான வாய்மொழிப் பாடல்களில் தோற்றங்கொண்ட இயல்பான வளர்ச்சிகளாகக் கருதப்படுவன. இவற்றில் வெண்பாவானது புலவர்களால் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளப்பட்ட பா வடிவமாகும் என்பதே ஆய்வாளர்களது கருத்தாகும்.1 ஏனைய மூன்றில் ஆசிரியப்பா பண்டைய ‘வெறியாட்டுப் பாடல்களிலிருந்தும் வஞ்சிப்பா, கலிப்பா என்பன முறையே ‘துணங்கை’, ‘குரவை’ ஆகிய கூத்துக்களிற் பயின்ற பாடல்களிலிருந்தும் உருவானவையாகும்.2

இந்நால்வகைப் பாக்களுக்குமுரிய ஓசைகளை யாப்பிலக்கணநூல்கள் எடுத்துப் பேசியுள்ளன. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகிய நான்கும் ‘அகவல்’, ‘துள்ளல்’, ‘தூங்கல்’, ‘செப்பல்’ ஆகிய ஓசைகளைக் கொண்டவை. கலிப்பாவிற்குரிய ‘துள்ளலோசை’ என்பதற்குப் தொல்காப்பிய, உரைகாரரான பேராசிரியர்,  

“வழக்கியலாற் சொல்லாது முரற்கைப்;படுமாற்றால் துள்ளச் செல்லும் ஓர் ஓசை”3

Continue Reading →