பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! – 1

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! - 1இன்று கனடாவுக்கு வருகை தந்திருக்கும் பொப் இசைச்சக்கரவர்த்தி திரு.நித்தி கனகரத்தினம் தம்பதியினரை ஸ்கார்பரோவிலுள்ள மக்னிகல் ஜோஸ் (McNicoll Joe’s)  உணவகத்தில் சந்தித்தோம்.

நண்பர எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோர் என்னுடன் நித்தி கனகரத்தினம் தம்பதியினருடனான சந்திப்பில் இணைந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரச்சந்திப்பில் திரு.நித்தி கனகரத்தினம் எம்முடன் தனது பொப்பிசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இலங்கையிலேயே முதன் முதலாக ஆங்கில இசைக்குழுவொன்று Living Fossils என்னும் பெயரில் 1965 இல் ஆரம்பமானது. அதனை ஆரம்பித்தவர்கள் மூவர். ஒருவர்: மருத்துவர் சூரியபாலன் (டொராண்டோவில் அண்மையில் அமரரானவர்), நித்தி கனகரத்தினம் இவர்களுடன் லக்சுமன் ஞானப்பிரகாசம்.

1967இல் நித்தி கனகரத்தினம் அவர்கள் அம்பாறை தொழில்நுட்பக் கல்லூரியான ஹாடியில் கல்வி பயின்றபோது இவரது சீனியர்களிலொருவரான பாலச்சந்திரன் மூலமே முதன் முதலில் சின்ன மாமியே பாடலைக்கேட்டு அறிமுகமாகின்றார். அச்சமயம் சின்ன மாமியே பாடலில் பல தூஷணச்சொற்கள் நிறைந்திருந்தன. அவற்றை நல்ல பாவனைக்குரிய தமிழுக்கு மாற்றிப் பாடத்தொடங்கினார் நித்தி கனகரத்தினம். இவை தவிர இவர் கலந்து கொண்ட பல இசை நிகழ்ச்சிகள் பற்றி, பாடல்கள் உருவாகக்காரணமான நிகழ்வுகள் பற்றி மற்றும் அண்மைக்காலமாக இலங்கையில் இவர் இலாப நோக்கற்ற நிலையில் ஆற்றி வரும் பங்களிப்புகள் பற்றி, அவற்றாலடைந்த அனுபவங்கள் பற்றியெனப் பலவேறு விடயங்களைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Continue Reading →