தொடர் நாவல்: ஒரு நம்பிக்கை காக்கப்பட்டபோது….!

அத்தியாயம் இரண்டு!

ஆர்.விக்கினேஸ்வரன்நான்கு  ஆண்டுகளுக்கு  முன்பு,  நண்பர்கள்  இருவருடன்  ராமேஸ்வரம்  சென்றிருந்தேன்.மூவரும் கடலில் குளிக்கச் சென்றோம்.  அவர்கள்  அளவுக்கு  நீச்சலில்  அனுபவம்   எனக்கில்லை.  கரையிலே  நின்று குளித்துக்கொண்டிருந்த என்னை ஆழமான இடம்வரை இழுத்துச் சென்ற  அவர்கள், நீச்சலடிக்கும்படி    கட்டாயப் படுத்தியபோதுதான்  கவனித்தேன், அவர்களது  வாயிலிருந்து   மதுவின் நெடி வீசியது. ஒரு கணம் அதிர்ந்தே போனேன்.

நல்ல  நண்பர்கள்  என்று  பெயர் வாங்கிய  அவ் இருவரும்,  இப்படியான  குடிகாரர் ஆகியதை  என்னால்  ஜீரணிக்க  முடியவில்லை. ராமேஸ்வரக் கடலில்  போடும்  முழுக்கு  இவர்களது  நட்புக்கும்  சேர்த்தே  என்பது  எனது  முடிவு.

அப்போதுதான்  அந்தச் சம்பவம்  நடந்த்து.

எதிர்பாரா நேரத்தில், பெரியதோர்  அலைவந்து, என்னை  இழுத்துச் செல்ல, யாராலும் காப்பாற்ற  முடியாத  சூழ் நிலையில், இத்தோடு என் வாழ்வு  முடிந்தது, என்று  எண்ணியபோது, என் தலை  முடியை  ஓர்  கரம் வலுவாகப்  பற்றியது.

அது  ஒரு  பெண் என்பது மட்டுமே தெரிய, கண்கள் சொருகின.

சுய உணர்வு  வந்தபோது,  மீனவக்  குடிசை ஒன்றிலே  பாயில் படுத்திருந்தேன். கூட வந்திருந்த  நண்பர்கள்  கதை  என்ன ஆனது தெரியவில்லை.  அதுபற்றி  அவசியமும்  இல்லை. அருகே  உட்கார்ந்து, அக்கறையொடு  கவனித்தாள்  அவள்.

அறிமுகமில்லா  முகம். ஆனால், அன்பு ததும்பும்  பார்வை. விலாசம் தெரியாத  ஒருவன்.  அவனை  விழுந்து,விழுந்து கவனிக்கும் உள்ளம். அதிர்ந்தேன்; ஆச்சரியப்பட்டேன். அவள் காட்டிய அன்பின்முன்  அடங்கிப்போனேன்.   யார் என்று தெரியாத ஒருவனை, நீர் கொண்டு போகட்டுமே என்று எண்ணாமல், ஊர் அறிய வீட்டுக்குள் கொண்டு வந்தாள்.  பேர் கெடுமே  என்பதுபற்றிக்கூட  வருந்தாமல்,  ஒர் மருந்தாய் மாறினாள். குப்புறப்போட்டு மிதித்துக் : குடித்த நீரை வெள்ளியேற்றி, அப்புறம் என்வாயில் வாய்வைத்து…. தன் மூச்சைத்  தந்து, என் மூச்சை  ஓடவிட்டாள். நடந்தவற்றை அறிந்தபோது, என் பேச்சு நின்றது. அவளின்  எழில் முகமே வென்றது. என்னுயிரைக் காத்ததற்கு  நன்றியா..? எனக்குப்  பணிவிடை  செய்ததனால்  பாசமா…? ஊராரைப்பற்றி  அக்கறைப்படாமல் : உதவும்  நோக்கைக்கண்டு  காதலா…? தரம் பிரித்துச்  சொல்ல  எனக்குத்தெரியவில்லை. ஆனால் : “வரம்” என்று  கிடைத்தசொத்து  அவள்தான்  என்று  வரித்துக்கொண்டேன்.

Continue Reading →