ஆய்வு: காரை.இறையடியானின் ‘தமிழமுதம்’

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ள அறிஞர்கள் பலராவர். அவர்களுள் காரை.இறையடியான் தனித்திறன் பெற்றவராக விளங்கியவர். எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தமிழ்ப்பணி புரிவதையே முழு நோக்கமாகக் கொண்டு அயராது பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் படைத்த சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டவர். காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை. இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். 17.11.1935-ல் புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்த காரை.இறையடியான் பத்து நூல்களைச் செதுக்கியுள்ள இந்தச் செந்தமிழ்ச் சிற்பியை அவரின் படைப்புகள் வாயிலாக அடையாளம் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

“தமிழிலக்கிய வரலாற்றில் தம் எழுத்துக்களால் தமக்கென
ஓரிடத்தைப் பெற்றவர் காரை.இறையடியான்’’1

என்று அறிவுநம்பியும்,

“இனிய தமிழில் இசுலாத்தின் கருத்துக்களை எடுத்துரைக்கும்
பாவலர் இறையடியானுக்குத்  தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடமுண்டு’’ 2

என்று திருமுருகனும் இலக்கிய வரலாற்றில் இடம்பெறத் தகுதி உடையவராய் மதிப்புரைக்கும் இறையடியானின் வரலாறு அறிய வேண்டியுள்ளது.
தமிழமுதமும் வாழ்வியலும்

Continue Reading →

பாரிஸ் மாநகரில் ‘கல்விச்சேவையாளர்” சி. காராளபிள்ளை கௌரவிக்கப்பட்டார்..!

வாழும்போதே ஒருவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிப்பது மகத்தான நற்பணியாகும். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்துவரும் ‘கல்விச்சேவையாளர்” சி. காராளபிள்ளை அவர்கள் இன்று கௌரவிக்கப்படுவதையிட்டு யான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பிரான்ஸ் நாட்டில் தமிழ்மக்களின் அறிவுப்பசியைப் போக்கும்பொருட்டு கால்நூற்றாண்டுக்கு முன்பாகவே ‘பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையத்தை” ஆரம்பிக்க வழிசமைத்த பெருமகன். இன்றுவரை அதன் காப்பாளராகவிருந்து வழிகாட்டி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் பத்திரிகைää சஞ்சிகைää வானொலிää தொலைக்காட்சிää நூல்கள் வெளியீடுää சங்கங்கள் உருவாக்கம் என அத்தனை முயற்சிகளுக்கும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருபவர். எண்பது வயதை எட்டியுள்ள இவ்வேளையிலும் இளைஞனைப்போல் ஊக்கமுடன் செயற்படும் அவரைப் பாராட்டிக் கௌரவிப்பதன் மூலம் ‘பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்” தனது வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்கிறது.”

இவ்வாறு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன்ää பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம் ‘கல்விச்சேவையாளர்” சி. காராளபிள்ளை அவர்களது கல்விச்சேவை மற்றும் பொதுப்பணிகளைப் பாராட்டிக் கௌரவித்த ‘அமுதவிழா”வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் தமிழர் கல்விநிலையத் தலைவர் திரு. எஸ். பகிரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வி. ரி. இளங்கோவன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:’கல்விச் சேவையாளர்” சி. காராளபிள்ளை அவர்கள் தாயகத்தில் முன்னணியில் திகழும் கல்லூரிகளில் பணியாற்றச் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதனைத் துறந்து தான் நேசித்த பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி – சமூக முன்னேற்றத்தை மனதில்கொண்டு அப்பிரதேசங்களில் பணியாற்றி மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். புலம்பெயர்ந்த மண்ணிலும் எம்மவரின் எந்த விழாவிலும் அவரது சிறப்புரை இடம்பெறுவதை எல்லோரும் அறிவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவையோர் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் பேசும் ஆற்றலாளர். அவரது பணிகள் மேலும் தொடர நாம் என்றும் உறுதுணையாகவிருந்து ஒத்துழைப்பு நல்குவோம்” என்றார்.

Continue Reading →