‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றி இவர்கள்: நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்), எழுத்தாளர் சத்யானந்தன்!

‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை ngiri2704@rogers.com  என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். – பதிவுகள் –


பார் போற்றும் ‘பதிவுகள்’     -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு.. கனடாவிலிருந்து வெளிவரும் நாள் இதழான ‘பதிவுகள்’ ஓர் இணையத் தளமாகும். இதன் ஆசிரியர் புகழ் வாய்ந்த திரு. வ. ந. கிரிதரன் ஆவார். அதில், உலக இலக்கியம், அரசியல், கவிதை, சிறுகதை, அறிவியல், சுற்றுச் சூழல் நிகழ்வுகள், கலை, நேர் காணல், அறிவித்தல்கள், இணையத்தள அறிமுகம், வரலாறு, அகழாய்வு, கட்டடக்கலை, நகர அமைப்பு, வாசகர் கடிதம், பதிவுகளின் நோக்கம், தோற்றம், கணித் தமிழ், நூல் அறிமுகம், பரத நாட்டிய நிகழ்வுகள் ஆகியன நாள் தோறும் பவனி வருகின்றன. இவ்வாறான பல அரிய துறைகளைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பதிவுகளில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் மிக்க தரம் வாய்ந்தவை. அதில் வரும் பல ஆய்வுக் கட்டுரைகள் பட்டப்படிப்பு மாணவர்களாலும், பட்டதாரிகளினாலும் எழுதப்படுபவை. எல்லா ஆய்வுக் கட்டுரைகளையும் ‘ஆய்வு’ என்னும் பகுதியில் பிரசுரிப்பது ஒரு சிறந்த நோக்காகும். இவை என்றும் என் மனதைக் கவர்ந்தவையாகும். தலையங்கம் யாவும் அறிவார்ந்தவை. செய்திகள் செறிவார்ந்தன. இலக்கியக் கட்டுரைகள் யாவும் சிந்தையைத் தொடுவன. மற்றவை மனதில் உறைவன. இவ்வாறானவற்றை மேலோட்டமாகப் படிக்க முடியாது. பதிவுகளுக்கு நாம் மணித்தியாலக் கணக்கில் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பதிவுகளுக்குத் தொடர்ந்து ஆக்கங்களை அனுப்பி வருவோரில் 15 பேருக்குமேல் தெரிவு செய்து அவர்களுக்கான பக்கங்களை ஒதுக்கி, அதில் அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவாக்கம் செய்து வரும் முறை பாராட்டுக்குரியதாகும். இப் பக்கங்களைத் திறந்தால் அவர்களின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து மகிழலாம்.

Continue Reading →