யமுனா ராஜேந்திரனின் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள்!

யமுனா ராஜேந்திரன்– எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து –

1. நிஜமான சிறைச்சாலை

– கென் சரோ விவா –

ஒழுகும் கூரையல்ல
ஈரம் கசியும் அசுத்தமான சிறைச்சுவருமல்ல
பாடும் கொசுவின் ரீங்காரமும் அல்ல
சிறைக் கொட்டகையும் அல்ல
உன்னைத் தள்ளிக் கம்பிகளின் பின் அடைக்கும்
காவலாளியின் சாவிச் சத்தமும் அல்ல
மனித ஜீவராசிக்கோ மிருகத்துக்கோ
சகிக்க முடியாத நாற்றமடிக்கும்
ரேசன் சாப்பாடும் அல்ல
இரவின் வெறுமையில் மூழ்கும்
நாளின் சூன்யமும் அல்ல

இதுவல்ல
இதுவல்ல
இதுவல்ல

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 192: ஜான் மாஸ்ட்டருடனான மாலை நேரச்சந்திப்பொன்று!

Uncle Rajanathan Muthusamippillai.எழுத்தாள நண்பர் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவலை வாங்கி வைத்திருக்கும்படியும் , டொராண்டோ வரும்போது நூலினைப்பெற்றுக்கொள்வதாகவும் நண்பரும், அரசியற் செயற்பாட்டாளருமான ஜான் மாஸ்ட்டர் கூறியிருந்தார். அவ்விதம் வாங்கி வைக்கப்பட்டிருந்த நூலை இன்றுதான் அவரிடம் கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

விக்டோரியா பார்க் மற்றும ஃபிஞ்ச் வீதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் மக்டானல்ஸ்ட்ஸ் உணவகத்தில் மாலை எட்டு மணியளவில் சந்தித்தோம்.

வழக்கம் போல் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். உயிர்ப்பு 5இல் வெளிவந்த தன்னியல்பு, பொதுப்புத்தி பற்றிய ஏகலைவனின் நீண்ட பயனுள்ள கட்டுரை பற்றி, உயிர்ப்பு இதழ்களின் தொகுப்பின் வெளியீடு பற்றி, எண்பதுகளிலிருந்து இன்று வரையிலான கலை, இலக்கிய மற்றும் அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக உரையாடல் அமைந்திருந்தது.

உரையாடலின் முக்கிய பங்கினை சம்பூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையம் எடுத்துக்கொண்டது. விரைவில் இது பற்றியொரு கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும், தானும் அந்நிகழ்வில் உரையாட இருப்பதாகவும் ஜான் மாஸ்டர் எடுத்துரைத்தார். சீனாவுக்குப் போட்டியாக ஏற்கனவே வடக்கில் கா பதித்த இந்தியாவின் பதில் நடவடிக்கையாகவே ஜான் மாஸ்ட்டர் கருதுவதை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களைப்பை இணைக்கும் வகையில் புகையிரதப்பாதை அமைப்பதில் கவனம் செலுத்துவது பற்றியும் , இலாபநோக்கற்ற நிலையில் இயங்கும் அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றியும், ஜான் மாஸ்ட்டருடன் கருத்துகளைப்பகிர்ந்துகொண்டேன்.

Continue Reading →

வாசிப்பு – ஒரு கலை !

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -‘வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்’ என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது ‘வாசிக்கும் கலை’ எனப்படுகிறது.

வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S – Survey ( தேடிப் பார்த்தல்)
Q – Question ( கேள்வி எழுப்புதல்)
R – Read (வாசித்தல்)
R – Retrive ( மீளவும் பார்த்தல்)
R – Review (விமர்சித்தல்)

இங்கு முதல் படிமுறை S – Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

Continue Reading →

ஆய்வு: சங்ககால மகளிர் மத்தியில் நிலவியிருந்த மூதானந்தம், பாலை, தாபத, முதுபாலை நிலைகள்.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க காலத்தில் மன்னர் ஆட்சி நடந்தேறிக் கொண்டிருந்தது. அவர்கள் மக்களைச் சீரும் சிறப்புமாகப் பேணிக்காத்து நாட்டை அரசாண்டு வந்தனர். நாடு செழித்தது, வளம் பெருகியது, அறம் நாட்டில் நிலைத்தது, மக்கள் இன்புற்றிருந்தனர். நாட்டு மக்கள் மன்னன் புகழ் பாடினர். இன்னும் படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதையும் செங்கோலையுடைய அரசர்களுக்கு உரியவைகளாக்கினார் தொல்காப்பியர்.

‘படையுங் கொடியுங் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய’ – (தொல். பொருள். 616)

மேலும; ‘நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்!’ – (மோசி கீரனார்- புறம் 186) என்ற பாடலும் ஆதாரம் காட்ட எழுந்தது. மன்னன் நாட்டுக்கும், மக்களுக்கும், தனக்கும் ஏற்ற வகையில் சட்ட திட்டங்களை உருவாக்கிச் செங்கோலை நிலைநாட்டினான். இனி, மூதானந்தம், பாலை, தாபத, முதுபாலை நிலைகள் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
கணவனோடு சேர்ந்து இறந்தாள் மனைவி. இவ்விறப்பைக் கண்டவர்கள் மற்றையோருக்கு எடுத்துக் கூறினர். இவ்வாறு கணவனும், மனைவியும் சேர்ந்து இறந்ததை ‘மூதானந்தம்’ என்று கூறுவர்.  கொடிய பாலை நிலத்தில் தன் கணவனை இழந்து தனித்து நின்று வருந்திய தலைவியின் நிலையை ‘முதுபாலை’ என்றழைப்பர். தன் ஆருயிர் மனைவியை இழந்து தனித்து நின்று துயர்படும் கணவன் நிலையைத் ‘தபுதார’ எனக் கூறுவர். காதலன் இறந்த பொழுது அவன் மனைவி உடன்கட்டையேறாது கைம்மை பூண்டு தவம் மேற்கொள்வதைத் ‘தாபத’ நிலை என்றுரைப்பர். இன்னும் காதலைனை இழந்த மனைவி அவன் சிதையில் விழுந்து இறந்துபட முன்வந்த பொழுது அவளைத் தடுத்து நின்றவர்களோடு மாறுபட்டுக் கூறியதைப் ‘பாலை நிலை’ என்பர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 191: எழுத்தாளர் ஜெயமோகனும், இனப்படுகொலையும் பற்றிய ஒரு பார்வை!

எழுத்தாளர் ஜெயமோகன்ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இணையத்தில் வெளியான அந்நேர்காணல் கேள்வி/ பதிலை வாசித்திருக்கின்றேன். முதலில் அவரது கேள்வியினைப் பார்ப்போம்.


விகடன் தடம்: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’
ஜெயமோகன்: ``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது. இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.”


 

இனப்படுகொலை பற்றிய இது போன்ற கேள்விகளுக்குப்பதிலளிக்கும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். உணர்ச்சி கண்ணை மறைக்கும். அறிவையும் தடுமாறச்செய்யும். வார்த்தைகள் வராமல், போதிய தர்க்கிக்கும் வல்லமை அற்று ஜெயமோகனின் கூற்றினை வரிக்கு வரி எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதற்குப் பதில் கொதித்தெழுகின்றார்கள்.

ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித்தான் தான் நம்பும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார். இந்தியா, இலங்கை உட்படப்பல நாடுகளில் நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சிகளில் பலர் அரசபடைகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் கூட சிங்களவர்களான ஜேவிபியினர் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இனப்படுகொலைகளா? இவற்றை அரசு தனக்கெதிராகப் போரிடும் குழுக்களுடனான மோதல்கள் என்றுதான் தான் பார்ப்பதாகவும், இனப்படுகொலையாகப் பார்க்கவில்லையென்றும் கூறியிருக்கின்றார்.

Continue Reading →