‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற செங்கை ஆழியான் பற்றிய இலக்கிய நிகழ்வு பற்றி…..

செங்கை ஆழியான்இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் இலம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் ‘செங்கை ஆழியானின்’ கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ‘செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு’ பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் ‘எனது பார்வையில் செங்கை ஆழியான்’ என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.

கவிஞர் கந்தவனம் தனதுரையில் செங்கை ஆழியான் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டங்களுக்காக எழுதிய நூல்கள் பற்றிய தனது கருத்துகளை முன் வைத்தார். அத்துடன் செங்கை ஆழியான் தொடர்ச்சியாக வாசித்து, கற்று, தனது அறிவை விருத்தி செய்து கொண்டேயிருக்குமொருவர். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையில் அவரால் எழுத முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் தனக்குப்பிடித்த செங்கை ஆழியானின் நகைச்சுவை நாவல்கள் , வரலாற்று நாவல்கள் , சமூக நாவல்கள் பற்றிக்குறிப்பிட்டார். அத்துடன் செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நாவலுக்கு எவ்விதம் ஓவியர் செளவின் படைப்பாற்றல் மேலதிகமாக உதவியது என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அத்துடன் நல்லதொரு நகைச்சுவை விவரணச்சித்திரமாக வந்திருக்க வேண்டிய நடந்தாய் வாழி வழுக்கியாறு படைப்பில் , தேவையற்ற உபகதையொன்றைச் சேர்த்ததன் மூலம் செங்கை ஆழியான் ஊறு விளைவித்திருக்கின்றார் என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. மேலும் செங்கை ஆழியான் தன் படைப்புகள் சீதனம், வறுமை, சாதி போன்ற பிரச்சினைகளை ஒழிப்பதற்கு உதவும் என்று கூறுகிறார். ஆனால் அவரது படைப்புகள் சிலவற்றில் அவற்றுக்கான சந்தர்ப்பம் வந்தபோது , நாவலில் வரும் பாத்திரங்கள் அவ்விதம் நடக்கவில்லையே என்று சுட்டிக்காட்டிய கிரிதரன், இடப்பெயர்வு அவலங்களை விபரிக்கும் முக்கியமானதோர் ஆவணப்படைப்பாக வந்திருக்க வேண்டிய போரே நீ போய் விடு நாவலிலும் தேவையற்ற முறையில் உபகதையொன்று சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேலும் கதாசிரியர் கூற்று, கதை சொல்லியின் கூற்று ஆகியன தன்னிலையில் வரும்; சில நேரங்களில் படர்க்கையில் வரும். பிரதி எழுதப்பட்ட பின் பிழை, திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது கருத்தினைத்தெரிவித்தார். அத்துடன் செங்கை ஆழியான் வர்க்கப்போராட்டத்தைப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் காணவில்லையென்றும் , கல்வி, தொழில், செல்வத்தின் மூலம் சாதிப்பிரச்சினையை ஒழிக்க முடியுமென்பது அவரது கருத்து என்பதையும் அவரது படைப்புகளூடு சுட்டிக்காட்டிய கிரிதரன், அது உண்மையாயின் இந்தியாவில் எப்பொழுதோ சாதிப்பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டுமே என்றார். செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்களில் நந்திக்கடலைச் சங்கிலியனுக்குக் குறியீடாகப் பாவித்திருந்த நந்திக்கடல் உணர்ச்சியின் அடிப்படையில் தனக்குப் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

Continue Reading →

‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற செங்கை ஆழியான் பற்றிய இலக்கிய நிகழ்வு பற்றி…..

செங்கை ஆழியான்இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் ‘செங்கை ஆழியானின்’ கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ‘செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு’ பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் ‘எனது பார்வையில் செங்கை ஆழியான்’ என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.