ஒரு முக்கியமான வேண்டுகோள்: வாசகசாலை – மனதிற்கான வைத்தியசாலை

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -ஒரு முக்கியமான வேண்டுகோள்: வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை

வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.

இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த நிலையும், தன்னம்பிக்கை ஏற்படுத்தாத சூழலும் நோயாளிகளை இன்னுமின்னும் சோர்வடையச் செய்கின்றன. இந்த நிலைமையை மாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

முதல் முயற்சியாக, நீர்கொழும்பு, மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஷாலிகா மற்றும் மருத்துவத் தாதிகளுடன் இணைந்து, அங்குள்ள டெங்கு நோயாளர் பிரிவில், ஒரு சிறு வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ தாதிகளை அணுகுவதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் இலவச சேவையான இது, முற்றுமுழுதாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தங்கியிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமானது. வைத்தியசாலையில் தங்க நேரும் காலப்பகுதியில், புத்தக வாசிப்பில் அவர்கள் காணும் மன நிறைவானது சொல்லி மாளாதது.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: லெனின் விருது – அனுராக் காஷ்யப் சென்னை வருகை – நன்கொடை

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!தமிழ் ஸ்டுடியோ இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு லெனின் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குனர் தீபா தன்ராஜ் லெனின் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் விழா நடைபெறவிருக்கிறது. ஒவ்வொருமுறையும் லெனின் விருது நடைபெறும்போது நன்கொடை கேட்டு எழுதுவேன். ஆனால் சென்ற ஆண்டே இனி நன்கொடை கேட்கக்கூடாது என்று முடிவு செய்தேன். அத்தனை கசப்பான சம்பவங்கள். அதன்படியே தொடர்ந்து ஓராண்டாக எவ்வித நன்கொடையும் இல்லாமல் தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை, செயல்பாடுகளை நிகழ்த்தி வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு லெனின் விருது மிக பிரம்மாண்டமாக தானாகவே உருவெடுத்துவிட்டது. குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செல்வமாகும். ஆனால் அவ்வளவு பணம் நல்ல சினிமா சார்ந்து இயங்கும் இயக்கத்திற்கு எப்படி கிடைக்கும். எனவே நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையை தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடையாக கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. அனுராக் காஷ்யப் போன்ற உலகப் புகழ் பெட்ரா இயக்குனர் இந்த நிகழ்விற்கு வரவிருப்பதால் இதற்கென ஒரு சிறப்பும் தானாகவே சேர்ந்துவிடுகிறது. எனவே நண்பர்கள் நன்கொடை கொடுக்க தயங்கினால், ஸ்பான்சர் செய்யலாம். உங்கள் நிறுவனம் அல்லது தொழில் கொஞ்சம் பிரபலமடைய இந்த ஸ்பான்சர்ஷிப் உதவலாம். இதுவரை இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. நண்பர்கள் ஆயிரக்கணக்கில் கொடுக்க இயலாவிடிலும் தங்களால் இயன்ற வகையில் 500, 1000 என்று கூட நன்கொடை செலுத்தலாம். தொகையைவிட உங்களது பங்களிப்பு மிக முக்கியம்.

நன்கொடை கொடுக்கவிரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு மின்னஞ்சல் செய்யவும். ஐந்தாயிரத்திற்கு மேல் நன்கொடை கொடுக்கும் நண்பர்களுக்கு மேடையில் சிறப்பு செய்யப்படும்.

Continue Reading →

சிறுகதை: ஜெமோவும் சமந்தாவும் .

பரதன் நவரத்தினம்யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,

“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்” .

நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .

காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் “என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் ” என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .

“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “

“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் “

“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்”

“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் “

“உனக்கு எப்ப நியுஸ் வந்தது “

“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்”

“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல”

“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன ”

Continue Reading →