ஆய்வு: கேரள மாநிலத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் வேளாண்மை

ஆய்வுக் கட்டுரைகள்!முதல் நான்கு வகுப்புகளிலும் வேளாண்மை குறித்துள்ள கருத்தாக்கங்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

தை…தை…விதை    –    வகுப்பு ஒன்று
நாற்று நட வாரீர்    –    வகுப்பு இரண்டு
கனவு பூக்கும் வயல்    –    வகுப்பு மூன்று
கழனி பூக்கும் காலம்    –    வகுப்பு நான்கு

வேளாண்மையைப் பாதுகாப்போம் என்ற கருத்தாக்கம் பதினேழு கருத்தலகுகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.\

1.    செடி வந்த வரலாறு
2.    பயிர் தொழிலின் படிநிலை வளர்ச்சிகள்
3.    விதைகாத்தல்
4.    பழங்களும் சுவைகளும்
5.    செடிகொடி மரம்
6.    உழவுக்காலம்
7.    ஏர் உழும் காளை
8.    வேளாண் சங்கம்
9.    நாற்று நடுதல் ஒரு வேளாண் கலை
10.    பூசணிப்பயிர்

Continue Reading →

Attention All Srilankan Old School Associations:

*This event is held to honour Mr. Shan Thayalan who is currently visiting Canada. He will be the Assistant Director for Sports (Physical Education) representing the Northern District of Jaffna at the tournament.யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், சர்வதேசக்கிரிக்கட் சபையின் அமெரிக்கத் துணைக்கண்டத்துக்குரிய நடுவர்களிலொருவருமான நண்பர் ரூபானந்தசிவம் (ரூபன்) சிவனடியான் கீழ்க்கண்ட செய்தியினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


Attention All Srilankan Old School Associations:

Dear Sports Secretary and President, please take part in the “SRILANKAN LEGENDS CUP”, 7 A-Side 6-Over Cricket Tournament to be held in Toronto on Saturday 27th August 2016
The “SRILANKAN LEGENDS CUP” Cricket Tournament is organized to explore the hidden talents among Srilankan female and male cricketers in Canada .This tournament is to be held as an annual event.

*This event is held to honour Mr. Shan Thayalan who is currently visiting Canada. He will be the Assistant Director for Sports (Physical Education) representing the Northern District of Jaffna at the tournament.

All Srilankan School Associations (SSA) in Canada are invited to take part in the upcoming “SRILANKAN LEGENDS CUP”. This Tournament gives young girls and boys a new opportunity to participate even if they don’t have a team to play for. For all tournament related communication, correspondence and registration please contact Ruban R Sivanadian ( Old student of Jaffna Hindu College, ICC Umpire- Americas) at rubanhit6@yahoo.com or call 416 200 2330.

Continue Reading →

சிங்கள மொழிக் கவிதை: பூனையாகிய நான்…

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலிகவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஆதி முதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக் குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மன உணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம். –


சிங்கள மொழிக் கவிதை: பூனையாகிய நான்…

– தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் அழ இயலாது

உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம் என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 194 : ‘ராஜசிங்கம் ‘மாஸ்ட்டர்’ மறைவும் சில எண்ணங்களும்…

அமரர் ராஜசிங்கம் 'மாஸ்ட்டர்'நண்பர் எம்.பெளசரின் முகநூல் பதிவு மூலம் ராஜசிங்கம் மாஸ்ட்டர் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஈழத்தின் முக்கிய பெண் ஆளுமைகளின் (நிர்மலா இராஜசிங்கம், ராஜனி திரணகம,  சுமதி சிவமோகன், வாசுகி இராஜசிங்கம்)  தந்தை. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரின் உப அதிபராக நீண்ட காலம் பணி புரிந்தவர். இவருடன் எனக்கு நேர்முக அறிமுகம் கிடையாது. ஆனால் முதன் முதலாக இவரை நான் கண்ட போது இவரது  புதல்விகளின் பெயர்களை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அது எழுபதுகளின் ஆரம்பக் காலகட்டம். பதின்ம வயதில், நண்பர்களுடன் கும்மாளமடித்துச்சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துப் பறந்து திரிந்த காலகட்டம். அப்பொழுதெல்லாம் யாழ் கே.கே.எஸ் வீதியிலே  எப்பொழுதும் பல்வேறு காரணங்களுகாகத் திரிந்துகொண்டிருப்போம். அப்பொழுதுதான் இவரை முதல் முதலாக அறிந்து கொண்டேன்.

அப்பொழுது இவர் யாழ்ப்பாணக்கல்லூரிக்குச் செல்வதும், சென்று திரும்புவதும் கே.கே.எஸ் வீதி வழியாகத்தான். ஸ்கூட்டரில் சென்று திரும்புவார். ஸ்கூட்டரில் சென்று திரும்பும் இவர் மாணவர்களான எம் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணமொன்றிருந்தது. இவர் தனது மகள்களில் ஒருவரான சுமதி சிவமோகன் (அப்பொழுது அவர் சுமதி ராஜசிங்கம், மாணவி) ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்க, ஒரு பக்கமும் பார்வையைத் திருப்பாமல், செல்லும் பாதையிலேயே கவனத்தை வைத்தவராக விரைந்து கொண்டிருப்பார். பின்னால் அமர்ந்திருக்கும் மகளின் சுருண்ட தலைமுடி காற்றில் அலைந்து பறக்கும். தந்தைக்குத் தெரியும் பின்னால் அமர்ந்திருக்கும் தன் மகளை மாணவர்கள் பார்ப்பது. ஆனால் அதனைக் காட்டிக்கொள்ளாது ஸ்கூட்டரின் ஆர்முடுகலை அதிகரித்துச்செல்வார். மகளோ வீதியெங்கும் தன்னை நோட்டமிடும் இளவட்டங்களை இலேசாகப்பார்த்துப் புன்னகைத்தபடி செல்வார். இவர்கள் இருவரும் அவ்விதம் காலையும், மாலையும் செல்லும் காட்சிகள் அக்காலகட்டத்தில் பதின்ம வயதில் திரிந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு மறக்க முடியாத அழியாத கோலங்கள்.

பின்னர் ஒருமுறை சந்தித்து ஓரிரு வார்த்தை பேசியிருக்கிறேன். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகை சம்பந்தமாக விரிவுரையாளராக அக்காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த திரு.மு.நித்தியானந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றபோது வைமன்ட் வீதியிலிருந்த அவரது வீட்டுக்குச் சென்றபோது என்று நினைவு. அப்பொழுது பிரதான வீட்டில் ராஜசிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வளவிலிருந்த இன்னுமொரு வீட்டில்  நித்தியானந்தனும், நிர்மலா நித்தியானந்தனும் வசித்து வந்தனர். முதலில் பிரதான வீட்டுக்குச் சென்றபொழுது, அங்கிருந்த ராஜசிங்கம் அவர்கள் அருகிலிருந்த வீட்டைக்காட்டி அனுப்பி வைத்தார்.

Continue Reading →