சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!

சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!– விரைவில் வெளிவரவிருக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  கட்டுரை இக்கட்டுரை. இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ஏறகனவே ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானவையென்பதும் குறிப்பிடத்தக்கது. – வ.ந.கி –


தொல்காப்பியம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருபவர் நுணாவிலூர் கா.விசயரத்தினம். அதற்குக் காரணம் ‘பதிவுகள்’ இணைய இதழில் இவர் எழுதிய , எழுதிவரும் தொல்காப்பியம் பற்றிய, சங்கத்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும், ஏற்கனவே நூலுருப்பெற்ற இவரது ‘தொல்காப்பியத்தேன் துளிகள்..’ என்னும் நூலும்தாம். ஆரம்பத்தில் இவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு இலக்கியக்கட்டுரைகள் அனுப்பியபோது இவர் தமிழ்ப்பேராசிரியர்களுள் ஒருவராக இருக்கக்கூடுமென்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது இவர் தமிழ்ப்பேராசிரியரல்லர் ஆனால் ஓய்வு பெற்ற ஒரு கணக்கியல் பட்டதாரி; கணக்காய்வுத் திணைகளத்தில் (இலங்கை) கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரென்பது.

கணக்கியல் பட்டதாரியான இவர் எவ்விதம் இவ்விதம் சங்கத்தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டார்? ஆனால் அந்த ஆர்வம் இவரது ஓய்வுக்காலத்தைப் பயனுள்ளதாக மாற்றித் தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்குமொன்றாக மாற்றி விட்டது. தமிழ்ப்பேராசிரியர்களே எழுதாத எண்ணிக்கையில் சங்கத்தமிழ் நூல்கள் பற்றியும், குறிப்பாகத் ‘தொல்காப்பியம்’ பற்றியும் இவர் எழுதி வருவது பாராட்டத்தக்கது. தன் பிறந்த மண்ணை நினைவுபடுத்தும் வகையில் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம்’ என்னும் பெயரில் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வரும் நுணாவிலூராரின்  சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை மற்றும், சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை ஆகியவை அவரது எழுத்துகள் சிறப்புற்று விளங்குவதற்கு முக்கிய காரணங்கள். இத்தொகுதியிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளிவந்தவை என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

Continue Reading →

செல்வி. செயானா சிவகுமாரனின் பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்!

[ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தல் தவறுதலாக விடப்பட்டுவிட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. – பதிவுகள் ] ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு அவர்களின் கலைமன்ற…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது 2016

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!2016 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. நண்பர்களே, மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, சிறந்த ஆவணப்பட இயக்குனரான தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் தங்களின் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தீபா தன்ராஜ்

ஐதிராபாத்தில் பிறந்தவர், சென்னை பெண்கள் கிறித்துவ கல்லூரியில் (1973) ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் (1975) இளங்கலை இதழியல் பயின்றவர். பட்டாபிராமி ரெட்டி மற்றும் எம்.எஸ்.சத்யு திரைப்படங்களில் உதவியாளராக 1980’இல் பணி புரிந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படங்களில் பணி புரிந்து வருகிறார். மிக முக்கியமான ஆவணப்படப் படைப்பாளிகளில் ஒருவர். ஐம்பது ஆவணப்படங்களுக்கு மேல் உருவாக்கியுள்ளார், மற்றும் பயிற்சிக்கான திரைப்படங்கள் பல உருவாக்கியுள்ளார். விருது பெற்ற ஆவணப்படங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல தொடர் திரைப்படங்கள் இதில் அடங்கும். உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

Continue Reading →

நூல் அறிமுகம்: கே.எஸ்.சிவகுமாரனின் ‘முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்’; எஸ். முத்துமீரானின் ‘கக்கக் கனிய’ சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு; தெ. ஈஸ்வரனின் ‘அர்த்தமுள்ள அனுபவங்கள்’

வெலிகம ரிம்ஸா முஹம்மத்சினிமாக்கள் மனித வாழ்வோடு ஐக்கியமான ஒரு ஊடகமாகும். பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்ப்பதாக பலர் கூறினாலும் சினிமாவில் சில யதார்த்தங்களும், சில யதார்த்த மின்மைகளும் காணப்படுவது கண்கூடு. வாழ்க்கையில் நடக்கின்ற சிலதையும், நடக்க வேண்டும் என்ற சிலதையும், நடக்கவே முடியாத சிலதையும் கூட திரைப்படங்கள் வாயிலாக நாம்  கண்டுகளித்து வருகின்றோம்.

சினிமாக்களைப் பார்ப்பது அன்றைய காலத்தில் மிகப் பெரிய சாதனையாக இருந்து வந்தது. அதாவது ஊருக்கே ஒரு திரையரங்கு.. அதில் திரைப்படக் காட்சிகள்! இன்று ஒவ்வொரு வீட்டிலும் சினிமாக்களைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இறுவட்டுக்களாகட்டும், யூடியூப்களில் ஆகட்டும், ஆன்லைனிலாகட்டும், கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளாகட்டும் சினிமாக்களை நாம் விரும்பிய வகைகளில் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பொதுவாக சினமா என்று தமிழ்பேசும் மக்களிடம் சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய சினிமாக்கள்தான். இந்திய சினிமாக்கள் தொழில்நுட்ப ரீதியில் பல மைல் தூரம் சென்றுவிடடதாலும், காட்சி அமைப்புக்களில் காணப்படும் வசீகரத் தன்மையினாலும் இவ்வாறாதோர் பிம்பம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அதையும் தாண்டி நல்ல சினிமாக்கள் நம் இலங்கை தேசத்திலும் வெளி;வந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முன்னைய நிலைகளிலிருந்து மாறுபட்டு புதிய வீச்சுடன் வெளியிடப்படுவது கண்கூடு. ஆனால் வெளிநாட்டுத் திரைப்படங்கள் மிகச் சிறப்பான கதையம்சம் கொண்டவைகளாக காணப்படுகின்றமை பலரும் அறியாத ஒரு விடயமாகும்.

இந்த வகையில் தான் ரசித்த அனைத்து தர சினிமாக்கள் பற்றிய பதிவுகளாகத்தான் கே.எஸ் சிவகுமாரனின் இத்தொகுப்பு 36 தலைப்புக்களில் 136பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.-

சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியவை. எம்மால் கூற முடியாதவற்றை ஒரு கலைஞன் தன் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தும்போது அதை நாம் ரசிக்கின்றோம். தமக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கின்றார்கள்? அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் போன்றவற்றை நாம் அறிவதற்கு ஆவலாக இருப்பதால் சினிமாக்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம் (பக்கம் 01) இல் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.

Continue Reading →

கவிதை: நட்பும் கத்தரிக்கோலும்

ஏதோ நேர்த்திக்காக
வளர்ந்திருக்கும் ஆட்டை
எப்போது வேண்டுமானாலும்
வெட்டிவிடலாம் எனும்
முனைப்போடு
நமது நட்பின் தலையில்
மஞ்சள் நீரை
தெளித்து விடுகிறார்கள்.

Continue Reading →

கவிதை: அறம்!

கவிஞர் வாண்மதிஎண்ணத்தில்
நல்லெண்ணம்
செயலில் நல்வடிவம்
வாக்கின் இனிமை
இப்படிச்சொன்னான்
வள்ளுவன்

ஆனாலும்;
மனதில் தூய்மை
வாக்கில் நேர்மை
காயத்தில் கட்டுப்பாடு
இப்படிச்சொன்னது
சித்தாந்தம்

கூட்டிப்பார்த்து
பிரித்தெடுத்தால்

Continue Reading →

கவிதை: விடைகிடைக்கா வினாக்கள்: ஏன்? ஏன்?? ஏன்???

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஏன் என்னாள்
தேன்நிலவைத் தோற்கடித்து
வெள்ளிவிழா தினத்தன்று
கள் போல் இனித்தார்?
மீன்போல் சுவைத்தார்?

Continue Reading →

கவிதை: ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -கறுத்த கழுகின் இறகென இருள்
சிறகை அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
கிராமத்தை உசுப்பும்

சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
விடைத்து அகன்ற நாசியென
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
பேரோலமெனப் பாயும்

பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்
ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப
மாறி மாறியசையும் அக் காரிருளில்
அவளது உடல்விட்டகழ மறுக்கும்
யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்
மந்திரவாதியின் கசையும்
ஆட்டக்காரர்களின் பறையும்
மட்டுப்படுத்தும்

Continue Reading →