அத்தியாயம் ஒன்று!
பனிக்காலக் காற்றின் பலமான மோதல், பேருந்தின் யன்னல் ஓரமாக இருந்த எனக்கு, இலேசான விறைப்பைத் தரத் தொடங்கியது. புகைந்து கிடந்த வானத்திலிருந்து விழுந்துகொண்டிருக்கும் இலேசான தூரல், இரவுத் திரையில் கோடுகள் போடுவதை அரைமனதுடன் ரசித்தபடி கண்ணாடிக் கதவினை இழுத்து மூடினேன்.
“ஏய்…. நீயெல்லாம் என்ன ஆம்புளடா….எழுவத்திமூணு வயசு…..மேலுக்கு ஒரு சட்டைகூட போடாமே.., குளிர்ல நானே நடந்து போறேன்…. இருவத்தியேழு வயசுக்காரன்…. நீ இந்த நடுங்கு நடுங்குறே..” பக்கத்து வீட்டுத் தாத்தா என்னை அடிக்கடி கிண்டல் செய்வது நினைவில் வந்தது. தூங்குவோர் மீதும் , அடிக்கடி கொட்டாவி விட்டபடி அப்பப்போ நிமிர்ந்து பார்த்துவிட்டு,மீண்டும் தலையைத் தொங்கப்போட்டபடி வீணிர் வடித்துக்கொள்வோர் மீதும் கடுங்கோபத்துடன்.,
காதில் நுளையச் சிரமப்படும் கண்ராவிப் பாடல் காட்சி ஒன்றினைக், காறி உமிழ்ந்துகொண்டிருந்தது, பேரூந்தின் தொலைக்காட்சிப் பெட்டி. “இடையில் எங்காவது நிறுத்தமாட்டார்களா….”
உடலுக்குள் எழுந்த உந்தல் மனதை ஏங்க வைத்தது.
ஏற்கனவே ரயிலில் பயணிக்க ஏற்பாடு செய்திருந்தேன். இரண்டு நிமிடத் தாமதம்., என்னை பேருந்தில் ஏற்றிவிட்டது. சின்னச்சின்னக் கிராமங்கள், கடைத் தெருக்கள் மட்டுமல்ல.,நிறைந்த ஜனப்புழக்கமுள்ள பகுதிகளில் தரித்தபோதுகூட., தாமதிக்காமல் கிளம்பிய பேருந்து.,
“முரட்டுத்தனம் மிக்க சட்டத்தரணி, மரியாதையீனம் தொடர்பான, தமது மேன்முறையீட்டு முயற்சியில் தோல்வியுற்றார்.” ஜூன் 15, 2016 ‘ரொறன்ரோ ஸ்ரார்’ பத்திரிகை இப்படியொரு தலையங்கத்துடன் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான Joseph Groia என்பவர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, எதிர்த் தரப்பினருக்காக வாதாடிய இவர், வழக்குத்தொடுநர் குறித்துத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதுவே இவர் மீதான குற்றச்சாட்டு.
தாம் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கு எடுத்த முதல் இரு முயற்சிகளும் தோற்றுப் போகவே, மூன்றாவது முயற்சியாக, ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தமது முறையீட்டை Joseph Groia சமர்ப்பித்திருந்தார். அதுவும் தற்போது தோல்வியில் வந்து முடிந்துள்ளது! இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவரது தகாத நடத்தை!
1974 ஜனவரி பத்தாம் திகதி, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கடைசி நாள் நிகழ்ச்சியின்போது, 9 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். அது தொடர்பான விசாரணை யாழ். நீதவான் மன்றில் நடைபெறுகிறது. அந்நாளைய யாழ். பொலிஸ் அதிபர் ஆரியசிங்க, இன்ஸ்பெக்ரர் பத்மநாதனிடம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறார், “இவர்தான் பிரச்சினைக்குக் காரணம். இவரைக் கவனிக்க வேண்டும்.” இவ்வார்த்தைகள் அமிர்தலிங்கத்தின் காதில் விழவே அவர் எழுந்து, நீதிபதி பாலகிட்ணரிடம் முறைப்பாடு செய்கிறார். ஆனால் நீதிபதியோ முறைப்பாட்டாளரையே நீதிமன்றை விட்டு வெளியேற்றுகிறார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த முன்னாள் மாவட்ட நீதிபதி தம்பித்துரை, “திரு. அமிர்தலிங்கம் அவர்கள் மதிப்புக்குரிய, ஆற்றல் மிக்க, ஒரு சிறந்த சட்டத்தரணி மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சுமார் இரண்டரை மில்லியன் தமிழரது மரியாதைக்கும் உரிய ஒரு தலைவர். அத்தகைய ஒருவரை இவ்வாறு நீதிமன்றை விட்டு வெளியேற்றி அவமதிப்பது, முறையற்ற செயல்” எனக் கூறித் தமது ஆட்சேபனையை முன் வைக்கிறார். நீதிபதி பாலகிட்ணர் தமது தவறை உணர்ந்து, அமிர்தலிங்கத்தை மீள அழைத்து, மன்னிப்புக் கோரி, ஆசனத்தில் அமர வைக்கிறார். இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, அவரது அரசியல்!
நண்பர்களே 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது இயக்குனர் தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லெனின் விருது பெறுபவர்களின் படங்கள் தமிழ்நாடு…
ஒருங்கிணைப்பு : ஆர் பி அமுதன் அவரின் “ டாலர் சிட்டி “ உட்பட இவ்வாண்டு திரையிடப்போகும் படங்களின் பட்டியல் விரைவில்.
இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர்.
சென்றாண்டு நடந்த விழாவில் திரையிடப்பட்ட படங்களின் பட்டியல் :
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்கள் நீண்ட காலமாக உள்ளத்தில் பூட்டி வைத்த பல இரகசியங்களை சொல்ல மறந்த கதைகள் என்று கோடிட்டு சொல்லியுள்ள நூல்தான் சொல்ல மறந்த கதைகள். ஒவ்வொரு ஆண் பெண்ணிடமும் மனம் என்னும் அதளபாதாளத்தில் பல இரகசியங்களைக் கொண்ட பல அடுக்குகள் தொல்பொருள் போல புதைந்து கிடக்கின்றன.
” நான் வெளிப்படையானவன் ” எனச் சொல்லும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் வெளிப்படையானவர்கள்தானா ? என்ற சந்தேகம் இருக்கவே செய்கின்றது.
பொதுவாழ்வில் ஈடுபடுவோரும் எழுத்து, ஊடகத்துறையில் ஈடுபடுவோரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரும் தமது அனுபவங்களை வெளிப்படையாக எழுத்து மூலமாக பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். சில உண்மைகளை காலம் வெளிக்கொண்டு வரும் என்பதற்கு உதாரணமாக இருப்பதுதான் லெ.முருகபூபதி அவர்களின் சொல்ல மறந்த கதைகள் என்ற நூலாகும்.
மண்ணுக்கு மேல் கற்களைப் பரப்பி வைத்தாலும் புதையுண்டு கிடக்கும் விதை, கற்களுக்கிடையில் கிடைக்கும் இடைவெளிக்கூடாக முளையாகி வீரிட்டு எழுவது போல் எழுந்திருக்கிறது. இந்நூலில் கிட்டத்தட்ட 19 தலைப்புகளில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் நூலாசிரியர். நம்பிக்கை, எதிர்பாராதது, காவி உடைக்குள் ஒரு காவியம், காலிமுகம், கண்ணுக்குள் சகோதரி, உயிர்ப்பிச்சை, கண்டம், விபத்து, தமிழ் மூவேந்தர்களும் ருஷ்ய மன்னர்களும், அநாமதேய தொலைபேசி அழைப்பு, வீணாகிப் போன வேண்டுகோள், லிபரேசன் ஒப்பரேசன் ஒத்திகை, நிதானம் இழந்த தலைமை, வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை, காத்திருப்பு – புதுவை இரத்தினதுரை, ஏரிக்கரைச் சிறைச்சாலை, மனமாற்றமும் மதமாற்றமும், மரணதண்டனைத் தீர்ப்பு , மனிதம், பின் தொடரும் வியட்நாம் தேவதை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஒவ்வொரு அனுபவக் கட்டுரையும் ஒரு சிறுகதை வடிவத்தைப் பெற்று நிற்கின்றன.
உண்மைகளைப் பேசுவதற்குத் துணிவு வேண்டும். ஆவணப்படுத்தலில் இது ஒரு தனிரகம். எழுத்து ஊடகங்கள் சிந்தனை விரிவாக்கத்தால் புதுப்புது கிளைகளாக வளர்ந்து நிற்கின்றன.