அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

அமரர் அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1.உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்    இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2.ஒருவர் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
3.சிறுகதை தமிழ் ஒருங்குகுறி(Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’அமரர் அருண்.விஜயராணி நினைவுச் சிறுகதைப் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
4.போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5.போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
6.சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
7.அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

Continue Reading →

மீள்பிரசுரம்: “பலஸ்தீன மக்கள் போராட்டத்திலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” சாந்தி சச்சிதானந்தம்:-

– சாந்தி சச்சிதானந்தம் எழுதிய “பலஸ்தீன மக்கள் போராட்டத்திலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்”   -என்னுமிக் கட்டுரை அவரது பிறந்தாள் (ஆகஸ்ட் 14)  மற்றும் நினைவுநாள் (ஆகஸ்ட் 27)  கருதி மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. – பதிவுகள் – –


சாந்தி சச்சிதானந்தம்

இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பம் கொடுத்தபோது எங்கள் குழுவில் ஒருவர் “ பாலஸ்தீனத்தைப் பார்க்கப் போகின்றேன்” என தனது விண்ணப்பத்தில் எழுதியதால் எங்கள் எல்லோருக்கும் விசா மறுக்கப்பட்டது. பாலஸ்தீனம் என்பது வேறு நாடு என்கின்ற பொருள்படக் கூறிவிட்டோமாம். இதற்கு, பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையானது 1994ல் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இல்ரேல் அரசாங்கத்திற்குமிடையிலான ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பேரில் ஓர் இடைக்கால நிர்வாக அதிகாரமாக உருவாக்கப்பட்டது. அது ஐந்து வருடங்களுக்கு என விதிக்கப்பட்டிருந்தாலும் வேறு உடன்படிக்கைகள் இல்லாத இடத்தில் 2013ல் உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனிய அரசு என அது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் இருக்கின்றது. இதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பார்வையாளர் அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில,; பாலஸ்தீனம் என்று வேறாகக் கூறி விட்டோமென்று எங்களைத் தண்டித்தனர் இஸ்ரேலிய அதிகாரிகள்.  இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கடைசியாக இஸ்ரேலுக்கு சென்று பார்த்தால்….அதென்ன ஒரு நாடா? பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரை, காஸா நகரங்களைச் சுற்றி மைல்கணக்காக நீளும் இருபதடி உயரச் சுவர்! பாலஸ்தீனியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. அவர்களுக்குப் பயந்து யூதர்கள் வாழும் ஜெருசலேமைச் சுற்றியும் சுவர். நாம் மேற்குக் கரைக்குப் போகப் போகின்றோம் என்றவுடன் எங்களுடன் இருந்த இஸ்ரேலிய நண்பர்கள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது எனக் கழன்று கொண்டார்கள். இதுதான் அவர்களுடைய ஒற்றை நாடா? ஏன் எப்படி என்று ஒரே குழப்பம்தான்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை – தலாத்து ஓயா கணேஷ்

 கே.கணேஷ், மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது. தொலைபேசி,   கைப்பேசி,  ஸ்கைப், டுவிட்டர்,  வைபர்,  வாட்ஸ்அப்  முதலான   சாதனங்கள்  விஞ்ஞானம்  எமக்களித்த வரப்பிரசாதமாயிருந்தபோதிலும் , அந்நாட்களில்  பேனையால் எழுதப்பட்ட   கடிதங்கள்  தொடர்பாடலை  ஆரோக்கியமாக  வளர்த்து மனித   நெஞ்சங்களிடையே  உணர்வுபூர்வமான  நெருக்கத்தையே வழங்கிவந்தன. உலகம்  கிராமமாகச் சுருங்கிவரும்  அதே  சமயம்  மனித  மனங்களும் இந்த   அவசர  யுகத்தில்  சுருங்கிவருகின்றன.

இலக்கியங்கள்   மனிதர்களை  செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்துள்ளன.    அவ்வாறே  கடித  இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே    அறிவுபூர்வமாகவும்  உணர்வு பூர்வமாகவும் நெருக்கத்தையும்    தேடலையும்   வளர்த்து வந்துள்ளன. இலங்கையில்   மலையகம்  தலாத்துஓயாவில்  வாழ்ந்து  மறைந்த இனிய   இலக்கிய   நண்பர்  கே.கணேஷ் –  சுவாமி விபுலானந்தர், சிங்கள  இலக்கிய  மேதை  மார்டின்  விக்கிரமசிங்கா   ஆகியோருடன் இணைந்து   ஒருகாலத்தில்  அகில  இலங்கை எழுத்தாளர்   சங்கத்தை ஸ்தாபித்தவர்.   பின்னர்  இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தை 1950 களில்  உருவாக்கியவர். அப்பபொழுது   நான்  இந்த  உலகத்தையே  எட்டிப்பார்க்கவில்லை.   கே. கணேஷ்   ஈழத்து  தமிழ்  இலக்கிய  முன்னோடி,   படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர். எனக்கும்   அவருக்கும்  இடையே  மலர்ந்த  உறவு  தந்தை –  மகனுக்குரிய   நேசத்தை  உருவாக்கியிருந்தது.   இதுபற்றி  விரிவாக முன்னர்   எழுதிய  காலமும்  கணங்களும்  என்ற  தொடர்பத்தியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

நான்   அவுஸ்திரேலியாவுக்கு 1987  இல்  வந்தபின்னர்,  அவர்  எனக்கு ஏராளமான   கடிதங்கள்  எழுதியிருக்கிறார்.  மாதம்  ஒரு  கடிதமாவது அவரிடமிருந்து  வந்துவிடும்.   நானும்  உடனுக்குடன்   பதில்  எழுதுவேன்.    இடைக்கிடை   தொலைபேசியிலும்  பேசிக்கொள்வோம். அவர்  மறையும்  வரையில்  எனக்கு  கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார்.   அக் கடிதங்களை   தனி நூலாகவும் தொகுக்கமுடியும். பல   நூல்களின்  ஆசிரியர்.   பல  வெளிநாட்டு  இலக்கியங்களை தமிழுக்குத்தந்தவர்.   கனடா  இலக்கியத்தோட்டத்தின்  இயல்விருது பெற்றவர்.

அடுத்த   ஆண்டு  பெப்ரவரி   மாதம்  வந்தால்  நான்  இலங்கையிலிருந்து   அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்து  வந்து  30  வருடங்களாகிவிடும்.     ஏறக்குறைய  மூன்று  தசாப்த  காலத்துள் காலத்துள்    ஆயிரத்துக்கும்   மேற்பட்ட   கடிதங்களை   முன்பு எழுதியிருக்கின்றேன்.   ஆனால்,  கணினி  யுகம்   வந்தபின்னர்   மின்னல் வேகத்தில்    கடிதங்களை    பதிவுசெய்து  அனுப்பிக்கொண்டிருக்கும் அவசர   வாழ்க்கைக்கு  பலியாகியவர்களில்  நானும்  ஒருவன். தற்போதைக்கு   இந்த  மின்னஞ்சலுடன்  நின்றுகொள்வதுதான் மனதுக்கு   ஆறுதலாக  இருக்கிறது.  என்னிடம்  முகநூல் இல்லையென்பதால்  எனது  முகமும்  மறந்துபோய்விடும்  என்று  ஒரு நண்பர்   சொன்னார். முகநூல்களினால் முகவரிகளைத் தொலைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு   மத்தியில்  எனது   மனதில் ஆழமாகப்பதிந்த   மூத்த   இலக்கிய   முகங்களை   அடிக்கடி நினைத்துப்பார்க்கின்றேன். ஏற்கனவே  எனக்கு  வந்த  பல  இலக்கிய  ஆளுமைகளின்  கடிதங்களை   பொக்கிஷம்  போன்று  பாதுகாத்து  வருகின்றேன்.  சில வருடங்களுக்கு   முன்னர்  கடிதங்கள்  என்ற   நூலையும் வெளியிட்டேன்.   அதில்  சுமார் 80   படைப்பாளிகளின்   இலக்கிய  நயம் மிக்க  கடிதங்கள்  பதிவாகியுள்ளன. இன்றும்   என்னோடு  பயணித்துக்கொண்டிருக்கும்  கே. கணேஷ் எழுதிய  கடிதங்களின்  வரிசையில்  ஒரு  சிலதை  இங்கு பதிவுசெய்கின்றேன்.

Continue Reading →