நிலமென்பது மண், நீர், காற்று மண்ணில் உள்ள தாதுப்பொருட்கள் தட்வெப்பம் முதலிய இயற்கை வளங்கள் எல்லாம் நிறைந்த இயற்கைச் செல்வம். இவ்வியற்கைச் செல்வங்கள் மனிதனுக்கு உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றைத் தருகின்றன. சுற்றுச்சூழலில் நிலம் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாக உள்ளது. பூமியின் மேற்பரப்பானது வேளாண்மைப்பயிற்சி. கனிம வளங்களை வெளிக்கொண்டு வரச் சுரங்கம் தோண்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேறுதல், நகரத் கழிவுகளைக் கண் மூடித்தனமாக அகற்றுதல் முதலிய அனைத்துக் காரணிகளாலும் மாசுபடுகிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடுகளினாலும், நிலத்தில் நீர் தேங்கிவிடுவதாலும் உவர்ப்புத் தன்மையினாலும், அளவுக்கதிகமாக ஆடு, மாடுகள் மேய்வதாலும், பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்காத காரணத்தினாலும் மண் வள பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கரித்துகள், புகை, தூசி, கதிரியக்க, வீழ்பொருள் போன்றவை காற்றின் மூலம் நிலத்தில் படிகின்றன. இவை மழை நீரால் அடித்துச் செல்லப்படுவதும் உண். இதனால் நிலம் மாசடைகின்றது. இதனை
“நிலத்தின் மாசு மற்றும் மாசாக்கிகளின்
மூலங்கள் பற்றிய ஒரு பொதுக் கண்ணோட்டம்”
(சுற்றுச் சூழலியல், ப. 32)
நிலம்:
1. திடக்கழிவு, சாக்கடை – வீடுகள்
2. திடக்கழிவு – உள்ளுர் ஆட்சி
3. தொழிலகக் கழிவு நீர் – தொழிலகங்கள்
4. தீங்குயிரிக் கொல்லிகள,;
வேதிய உரங்கள்- வேளாண்மை
5. உலேகாகக் கழிவுப் பொருட்கள்
தூசி, எண்ணெய் – போக்குவரத்து
6.கதிரியக்கப் பொருட்கள் பயனற்ற வெப்பம்- அணுக்கதிர் நிலையங்கள், அணுக்குண்டு சோதனை
என்று சியாமளா தங்கமணி சுற்றுச் சூழலியல் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு காரணிகளால் நிலம் மாசு அடையும் படிநிலைகளை கீழேக் காண்போம்.