ஆய்வு: ஞானதூதன் இதழில் கருத்துப்படங்கள்

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
செய்தித் தாள்களின் ஒரு புதிய சகாப்தத்தைக் கருத்துப்படங்கள் தோற்றுவித்து வருகின்றன. தலையங்கத்திற்;கு இணையான வகையில் இவை விளக்குகின்றன. பொது மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக இவை அமைகின்றன.

கருத்துப்படங்கள்
“கருத்துப்படங்கள் ஒரு மையக் கருத்தை எடுத்துரைக்கும், எளிமையான படங்களைக் கொண்டவைகளாக இருக்கும். குறைவான சொற்களிலோ, சொற்களே இல்லாமலோ விளக்கப்பட்டிருக்கும். கருத்துப்படங்கள் நேற்றோ, இன்றோ தோன்றியவை அல்ல அச்சகங்கள் தோன்றி இதழ்களாக வெளிவரத் தொடங்கிய காலம் முதலே கருத்துப்படங்கள் ஒவ்வொரு இதழ்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன.”1

ஒரு இதழ் கூற விரும்பும் முக்கியமான கருத்தை மிகச் சுலபமாக அறிய வைத்துவிடும். பல பக்கங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தை ஒரு கருத்துப்படம் எளிதில் விளக்கிவிடும்.

ஞானதூதனில் கருத்துப்படங்கள்
தேச ஒற்றுமை, முன்னேற்றம், கல்வி, எளிமை, வறுமை ஒழிப்பு, சுற்றுச் சூழல் முதலிய பிற நோக்கோடு இதழில் கருத்துப்படங்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நாட்டின் மேல் கொண்டுள்ள அக்கறையும் நாட்டில் நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிந்து அதற்கேற்ப நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளை கருத்துப் படங்களின் வாயிலாக  வெளியிட்டுச் சேவை புரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துப்படத்திற்குரிய அனைத்துக் கூறுகளும் ஞானதூதன் இதழிலும் இடம் பெற்றிருக்கின்றன. சிறுபான்மைச் சமூகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் பொழுதெல்லாம் அதை அரசுக்குச் சுட்டிக்காட்டி தேவையானால் விமர்சனங்கள் எழுதவும் தவறியதில்லை.

பசுமைப் புரட்சி
“பசுமைப் புரட்சி” – என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு ஜீன் மாத இதழில் இயற்கையைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் தொலை நோக்கு பார்வையில் நாடு மற்றும்  மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட கருத்துப்படமாகும். கி.பி. 1700 வரையில் உலகில் உணவுப்பொருட்களை மனிதன் கைகளாலேயே உற்பத்தி செய்தான். ஒவ்வொரு நாட்டு மக்களின் மக்கள் தொகைக்கேற்பத் தானியங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை பற்றாக்குறையே இருந்தது. எனவே உலகில் ஒவ்வொரு நாடும் உணவு உற்பத்தி மூலம் தன்னிறைவு அடைய முயல்கின்றன.”2

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்

அறிமுகம்
 சு. குணேஸ்வரன் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அவற்றில் எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் தனித்துவமானதாக அமைந்துள்ளது. அகமும் புறவும் விரவிய இவ்விலக்கியத்தில் வையைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கால சமூகநிலையை நோக்கமுடியும்.

பரிபாடல் – சொற்பொருளும் அமைப்பும்
பரிபாடல் என்பது ஒரு யாப்பு வகை என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது ‘பரிந்த பாடல்’ எனப்படுகிறது. அதாவது பாடல் கலவையாக ஏற்று வருதல். “பரிபாடல்  என்பது பரிந்து வருவது. அது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் பல வடிவும் வருமாறு நிற்குமென்றுணர்க” (தொல். செய். 118) என்று நச்சினார்க்கினியார் உரைப்பார். இதற்கு தொல்காப்பிய செய்யுளியலில் பின்வருமாறு சூத்திரம் வகுக்கப்பட்டுள்ளது.

“ பரிபாட் டெல்லை
நாலீ ரைம்ப துயர்படி யாக
வையைந் தாகு மிழிபடிக் கெல்லை”  (தொல்.செய். 474)

சிற்றெல்லையாக 25 அடியும் பேரெல்லையாக 400 அடிவரையும் வரும் என பரிபாட்டில் வரும் வெண்பாவுக்கு தொல்காப்பியம் அளவு கூறுகின்றது. பரிபாடல் இசைப்பாடலாகும். இது இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனலாடல் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ளது.

பரிபாடல் கிளப்பும் பிரச்சினை
பரிபாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தனவென்று அறியப்படுகிறது. ஆனால் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் முழுமையாகக் கிடைத்த 22 பாடல்களோடு சிதைவடைந்த வையைக்குரிய ஒரு பாடலும், மேலும் தொல்காப்பிய உரையாசிரியர்களின் மேற்கோட் செய்யுள்களில் காட்டப்பட்ட 13 பாடல்களின் திரட்டுக்களும் உள்ளடங்கலாக தற்போது 24 பாடல்களே பரிபாடல் நூலில் உள்ளடங்கியுள்ளன.

“திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொரு பாட்டு காடுகிழாட் கொன்று மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்”

என்ற பழஞ்செய்யுளால் பரிபாடலில் முழுமையாக இருந்த பாடல்கள் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது.

Continue Reading →