நாவல்: புதிய பாதை ( ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’) (13-15)

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]

அத்தியாயம் 13: ஊர் நிலைமை!

“ஹலோ. ஹலோ”

எதிர்த் தரப்பில் குரல் மிக நைந்துபோய் பலஹீனமாகக் கேட்டது. கொழும்புக் ‘கோல்’ போல் தெரிகிறது. யாராயிருக்கும்…

“ஹலோ. ஹலோ. யார் பேசுறது?”

‘அக்கா. அக்கா. இது. அடக்கடவுளே. இது பெரிய தங்கச்சியின் குரல் அல்லவா. இவள் எங்கு நின்று பேசுகிறாள். கொழும்புக்கு எதற்காக வந்திருக்கிறாள்?

“யாரது பெரிய தங்கச்சியோ. எங்கயிருந்து பேசுகிறாய். எதுக்கும் உன்ரை நம்பரைத்தா. நான் உடனே எடுக்கிறன்.”

பெரிய தங்கச்சி நம்பரைத் தந்தாள். இவள் எடுப்பதாக கூறி விட்டு, ‘லைனை’க் ‘கட்’ பண்ணி விட்டுத் திரும்ப ‘டயல்’ பண்ணினாள். சிறிது நேரம் ‘லைன்’ பிசியாக இருந்தது. ஒரு மாதிரிக் கிடைத்து விட்டது.

“ஹலோ. ஹலோ. “யாரு அக்காவா? அக்கா. எதிர்த்தரப்பில் பெரிய தங்கச்சி விம்மத் தொடங்கினாள். தங்கச்சி என்ன விசயம் என்ன நடத்திட்டதெண்டு இப்படி இவள் முடிக்கவில்லை. பெரிய தங்கச்சி குறுக்கிட்டாள்.

“அக்கா. அக்கா. அம்மா. அம்மா”

“அம்மாவா. அம்மாவுக்கு என்ன?” இவள் குரலில் சிறிது பதட்டம் படர்ந்திருந்தது.

‘அக்கா. இம்முறை பெரிய தங்கச்சி ஓவென்று அழத் தொடங்கினாள்.

‘அக்கா அம்மா எங்களை எல்லாம் ஏமாத்திப் போட்டு போய் சேர்ந்திட்டா’

‘என்ன. இவளுக்கு ஒரு கணம் எல்லாம் சுழல்வது போன்றதொரு பிரமை எழத் தலையை இறுகப் பற்றிக் கொண்டாள். சிறிது நேரத்துக்குள்ளாகவே தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டாள்.

Continue Reading →

எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களுக்கான அஞ்சலி!

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று” – குறள் 236

நுணாவிலூர் கா.விசயரத்தினம்சில சமயங்கள் நாட்கள் நகரக்கூடாது என்றே சிந்திக்கத்தோன்றும். மகிழ்வான பொழுதுகளில் இருந்து நழுவிப்போக மனது இடம் தராது.எனினும் காற்று சேதி சொல்லியது.மனதில் அதிர்வைத் தந்தது. நாட்களும் அதிகம் கடந்துவிடவில்லையே. தொலைபேசி அழைப்பு வரும் போது நான் இல்லாத பொழுதெனிலும் அவரின் குரல் பதிவை மீள கேட்கையில் ஆர்வம் மீள எழும்.பேசிக்கொண்டிருந்த நாட்களும் அதிகம்.அந்த குரல் ‘பிறகு..பிறகு..’ என்று பேச்சை நகர்த்தும் விதம் அலாதியானது. காற்றுவெளி மின்னிதழில் அவரின் கட்டுரைகள் அதிகமாகவே வந்திருக்கின்றன.ஆய்வுக்கட்டுரைகள் என இதழை புரட்டிப்பார்த்தால் அவர் கண்முன் வந்து நிற்பார்.அந்த வெறுமை எனி காற்றுவெளியில் தெரியும்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி/நுணாவில் மேற்கில் 02/03/2031இல் கார்த்திகேசு தங்கமுத்து தம்பதியர்க்கு மகனாக பிறந்தவர்.கார்த்திகேசு விசயரத்தினம் ஆரம்பக் கல்வியை மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாசாலையிலும்,தொடர்ந்து சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் கற்றார்.தொஅர்ந்து மேற்படிப்பை கொழும்பில் தொடர்ந்து ஒரு கணக்கியற் பட்டதாரியானார்.கொழும்பிலேயே தன் தொழில் வாய்ப்பைப் பெற்றார். கொழும்பு கணக்காய்வு அதிபதி தினைக்களத்தில் அரச கணக்காய்வாளராக கடமையேற்றார்.மேலும், போட்டிப்பரீட்சைகளில் தோற்றி கணக்காய்வு அத்தியட்சராகவும் தரமுயர்ந்தார்.பல அரச,கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளை ஆய்வு செய்து அரச நாடாளுமன்றிற்கு சமர்ப்பிப்பதனால் நாடாளுமன்ற விவாதங்களிலும் பங்குபற்றுபவருமானார். கலை இலக்கிய ஆர்வலர்.நல்ல நூல்களை வாசிக்கும் ஆவல் மிகுந்தவர்.அதனால் தானோ இலக்கியம் படைக்கும் திறமையையும்,ஆற்றலையும் உருவாக்கிக்கொள்ள அவரால் முடிந்தது. தொல்காப்பியம்,நன்நூல், சிலப்பதிகாரம், நன்நூல்,திருக்குறள், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, மகாபாரதம், கலிங்கத்துப்பரணி, பகவத்கீதை ,திருமந்திரம், கம்பராமாயணம் ,திருவாசகம், நாலடியார் சங்க இலகியங்கள் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை ஆழமாக,நேசிப்புடன் கற்றறிந்து அதனை நம்மவர்களுக்கு கட்டுரைகளாக தந்துமுள்ளார். காதல், காமம், பிள்ளைப்பெறு, மடலேறுதல், களவியல், இன்னும் வாழ்வின் ஒழுக்கநெறிகள்,கல்வி,இசை இன்னும் இன்னும் தொட்டு மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். சில சமயங்களில் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். ஒவ்வொரு காலங்களில் உள்வாழ்க்கை முறைமை,உணவுப்பழக்க முறைகள்,திருமண சடங்குகள்,களவியல் ஒழுக்கம்,காதல்,தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல்,ப்ரிவு,துன்பம் இதர சடங்குகள், அக் காலத்து அக,புறச் சூழல் ,அந்தந்தக் காலத்து மன்னர்கள் பற்றியெல்லாம் தொட்டு ஆய்ந்துள்ளமையை வாழ்த்த வார்த்தையில்லை

இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை தினக்குரல், வீரகேசரி, தினகரன், காலைக்கதிர், தமிழர் தகவல், வடலி, பூங்காவனம், பதிவுகள் (இணையம்) ,காற்றுவெளி (மின்னிதழ்), லண்டன் இசை மகாநாட்டு மலர்  ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தன.

Continue Reading →