கவிதை: “தமிழுக்கும் அமுதென்று பேர்”

- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்) -மாமுனிவன்   அகத்தியனின்   மகிமையாலே
மரமாக  முழைக்கவென  வந்த  வித்தே..!
தேமதுர  ஓசையில்நீ  செழிக்க  வேண்டித்
தென்மதுரை  மண்ணிலுன்னை  முளைவைத்தோமே..!
பாமணமாய்  பக்குவமாய்  பாற்கடலமுதாய்,
பட்டொளியை  வீசியெங்கும்  பறக்கும்  கொடியாய்,
பூமணத்தைத்  தந்துவக்கும்  தமிழே  நித்தம்,
புன்னகைத்தே  என்னமுதே  தருவாய்  முத்தம்…!

மண்டலங்கள்  போற்றுகின்ற  எழிலைச்  சிந்தா
மணியாள்மே  கலையாளுன்  இடையாள்   நீந்த,
குண்டலங்கள்  காதில்வளை  யாபதி  கரத்தில்,
குறுநடைக்கு  மொலியிலலங்  காரஞ்  செய்யும்
கண்டவர்கள்  நெஞ்சையள்ளுங்  காலின்  சிலம்பும்,
காட்டிவருங்  கன்னியுனைக்  கட்டி  முகர்ந்து,
உண்டிடவோ  உறிஞ்சிடவோ  உன்னிதழ்  தேனே…!
உறவிடவா  என் தமிழே   உன்பெய  ரமுதே…!

Continue Reading →

அறிவித்தல்: முதியோர் உருவாக்கிய முத்துக்கள் 16 சிறு கதைத் தொகுப்பு!

எனது அன்பின் தமிழ் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ள தமிழ் எழுத்தாளர்களே. இந்த தொகுப்பில் நீகள் எழுதிய முதுமையோடும் உங்கள் வாழக்கை அனுபவத்தோடும் இனைந்த சிறு கதைகள்…

Continue Reading →

நூல் அறிமுகம்: பாரதியார் – பன்முகங்கள், பல்கோணங்கள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்

நூல் அறிமுகம்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்நூல்: பாரதியார் – பன்முகங்கள், பல்கோணங்கள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்
தொகுப்பாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
(வெளியீடு : அநாமிகா ஆல்ஃபபெட்ஸ். பக்கங்கள் : 200. விலை: ரூ.150

ஏன் இந்த நூல்? பாரதியாரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இனியும்  வெளிவரும்.அத்தனை அகல்விரிவும்பல்பரிமாணமும் கொண்டவை பாரதி யின்  கவித்துவம். பாரதி ஒருவரேயென்றாலும் அவரை வாசிப்பவர்கள் அனேகம். எனவே பல  வாசிப்புப்பிரதிகளும் சாத்தியம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாரதியை புதிதாக அறிமுகம் செய்துவைக்க வேண்டிய தேவையிருக்கிறது. பாரதியை அணுகுபவர்களில் நுனிப்புல் மேய்கிறவர்களுண்டு; நாவன்மையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் உண்டு. ஆய்வுநோக்கில் மட்டுமே அணுகுபவர்கள் உண்டு. வாழ்வனுபவமாக அவரை வாசித்து உள்வாங்கிக்கொள்பவர்கள் உண்டு. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் நான்காம் வகை. பாரதியாரின் ஏராளமான கவிதைகள் அவருக்கு மனப்பாடம். பேச்சின் நடுவே, மனதிற்குப் பிடித்த வரிகளை வெகு இயல்பாகநினைவுகூர்வார்; மேற்கோள்காட்டுவார். வாய்விட்டு அவற்றைஉரக்கச் சொல்லிக்காட்டுவார். அவர் குரல் தழுதழுத்து கண்ணில்நீர் துளிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பாரதியை வாழ்நெறியாக வரித்துக்கொண்டவராய் எத்தரப்பு மனிதர்களையும் உரிய மரியாதையோடு சமமாக நடத்துவார்.குறிப்பாக, எழுத்தாளர்களை, அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக எந்தப் பணியில் இருப்பினும், படைப்பாளியாய் மட்டுமேபார்த்து அன்போடும் தோழமையோடும் நடத்துவார். திறந்த மனதோடு பிரதிகளையும் மனிதர்களையும் அணுகுபவர்.எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்ற வள்ளுவன் வாக்கின்படி, யார் சொல்லால், செயலால், படைப்பால் என்ன நல்லது,செறிவானது செய்தாலும் மனதாரப் பாராட்டுவார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ‘கசாக்கின் இதிகாசம்’

நூல் அறிமுகம்: கசாக்கின் இதிகாசம் பற்றி....  – 30.10.2017 அன்று ‘ரொறன்ரோ’ தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் மூல வடிவத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இதனை மையமாக வைத்துத்தான் அவ்வுரையினை ஆற்றியிருந்தேன். இருந்தாலும் உரையாற்றும் நேரக் கட்டுப்பாடு காரணமாகக் கூற வேண்டிய யாவற்றையும் கூறினேனா இல்லையா என்ற சந்தேகமிருப்பதால் இக்கட்டுரையினை இங்கு பதிவிடுகின்றேன். – வ.ந.கி –


இங்கு நான் அண்மையில் நான் வாசித்த நூலொன்றினை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இது நூல் பற்றிய அறிமுகமேயன்றி விரிவான திறனாய்வு அல்ல என்பதையும் முதலிலேயே கூறிக்கொள்ள விழைகின்றேன். இதுவொரு புதினம்.  மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு  எழுத்தாளர் யூமா வாசுகியால்  மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  ஓ.வி.விஜயனின் (ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்)  ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலைத்தான் குறிப்பிடுகின்றேன். இம்மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதலில் சுருக்கமாக நாவலாசிரியர் ஓ.வி.விஜயன் அவர்களைப்பற்றிப் பார்ப்போம். ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் மலையாள மொழியில் எழுத்தாளர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக்காரர் எனப்பன்முகபரிமாணங்களைக்கொண்டவர். நாவல், சிறுகதை, மற்றும் கட்டுரை என இவரது இலக்கியக் களம் விரிந்தது. இவரது சகோதரி ஓ.வி உஷா,வும் மலையாளக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2.7.1939இல் கேரள மாநிலத்திலுள்ள கோழிகோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005இல் மறைந்து விட்டார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாக்கித்திய அக்காதெமி மற்றும் கேரள மாநில அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளைப்பெற்ற ஓ.வி.விஜயன் இந்திய அரசின் பத்மபூஷண் விருதினையும் பெற்றவர். இவரது மனைவி தெரசா . அவரும் அமரராகிவிட்டார். ஒரே மகனான மது அமெரிக்காவில் வசிக்கின்றார்.

‘கசாக்கின் இதிகாசம்’ என்னுமிந்த நாவல் மலையாளத்தில் வெளிவந்த ஆண்டு 1969. இதுவே ஓ.வி.விஜயனின் முதலாவது நாவலாகும். இதிகாசமென்றதும் பன்னூறு பக்கங்களைக் கொண்ட விரிந்த நாவலாக இதனை யாரும் கருதி விடாதீர்கள்.  தமிழ் மொழிபெயர்ப்பு 239 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. விக்கிபீடியாக் குறிப்புகளின்படி இந்நாவலை ஆசிரியர் எழுதுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இந்நாவலின் கட்டுக்கோப்பான மொழி இறுக்கத்தின் காரணத்தை உணர் முடிகின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவலாக இதனைக் குறிப்பிடுவார்:

Continue Reading →