கே.எஸ்.சிவகுமாரனின் ‘ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை’ (ஜீவநதி பதிப்பக வெளியீடு), ஈழத்து உளவியற் சிறுகதைகள் (மணிமேகலை பிரசுர வெளியீடு) மற்றும் ‘அருமையான ஆளுமைகளும், சுவையானமதிப்புரைகளும்’ (மணிமேகலை பிரசுர வெளியீடு) ஆகிய மூன்று நூல்களையும் நண்பர் காலம் செல்வத்திடமிருந்து இன்று பெற்றுக்கொண்டேன். நூல்களைக் கொண்டுவந்து சேர்ப்பித்தற்காக அவருக்கு நன்றியினை இத்தருணத்தில்தெரிவித்துக்கொள்கின்றேன். சிறுகதை நூல் தவிர ஏனைய நூல்களிரண்டும் கே.எஸ்.எஸ் அவர்களின் பல்வேறு புத்தகங்கள் பற்றிய, அவர் இரசித்த ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஜீவநதி பதிப்பகம் நூலினை மிகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. நூலினை ஒரு மூச்சில் வாசிக்க வேண்டுமென்ற அவாவினைத் தூண்டுகின்றது. 73 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் சிறந்ததோர் ஆவணம். இந்நூலினைப்பார்த்தபோது ஒரு சிந்தனையோடியது. இதுவரை கே.எஸ்.எஸ் அவர்கள் எழுதிய நூல்கள், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரு பெருந்தொகுப்பாக இது போன்றதொரு சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டால் அதுவோர் சிறப்பான ஆவணமாகவிருக்கும்.
ஜீவநதி வெளியீடாக வெளியான ”ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை” நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தபோது உடனடியாகத் தோன்றிய எண்ணம் இந்நூலில் விடுபட்டவர்கள் பற்றிய கட்டுரைகள். ஈழத்துச் சிறுகதைகளும் , ஆசிரியர்களும் ஒரு பன்முகப்பார்வை என்றிருப்பதால் அப்பன்முகப்பார்வையில் தவிர்க்கப்பட முடியாத பலர் தவிர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:
1. தொகுப்பு கே.எஸ்.எஸ் அவர்கள் 1962 – 1998 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அக்காலப்பகுதியில் கே.எஸ்.எஸ் மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி எழுதாமலிருந்திருக்கலாம். அல்லது எழுதியிருந்தாலும் தொகுத்த ஜீவநதி பதிப்பகம் அவற்றைக் கவனத்திலெடுக்காமலிருந்திருக்கலாம்.
2. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் வெளியான தொகுப்புகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் தொகுப்புகள் இக்காலப்பகுதியில் வெளிவராதிருக்கலாம். ஆனால் இக்காலப்பகுதியில் ஈழத்துப்படைப்பாளிகள் எழுதிய அரிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் பல வெளியாகியுள்ளன.. அவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பல உள்ளடங்கியுள்ளன. அத்தொகுப்புகளைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்பட்சத்தில் தவிர்க்கப்பட்டவர்களின் தொகுப்புகள் வெளிவராதிருக்கும் பட்சத்தில் கூட நினைவு கூரப்பட்டிருப்பார்கள். மேலும் தொகுப்பில் நீர்வை பொன்னையன் சிறுகதைகள் பற்றிய இரு கட்டுரைகள் இடம் பெற்று:ள்ளன. இதுபோலவே காவலூர் ஜெகநாதனின், செ.யோகநாதனின், யோ.பெனடிற்பாலனின், கோகிலா மகேந்திரனின், சுதாராஜின் சிறுகதைகள் பற்றி ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதற்குப்பதில் அவர்களைப்பற்றி ஒவ்வொரு கட்டுரையும், பதிலாகப் பிற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருக்கலாம். அதே சமயம் ‘மட்டக்களப்புப் பிராந்தியப் பேச்சு வழக்கின் கதை’ கட்டுரை தொகுப்பொன்றிலில்லாத படைப்பாளிகளின் சிறுகதைகளைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.
‘பதிவுகள்’ இணைய இதழ் எனக்குப்பல நன்மைகளைச் செய்துள்ளது. சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்தது. அவர்களில் முக்கியமானவர்களிலொருவர் அமரர் கலை, இலக்கிய விமர்சகரான திரு.வெங்கட் சாமிநாதன்.’ பதிவுகள்’ இணைய இதழில் மதிப்பும், என் மேல் அன்பும் வைத்திருந்தார். அவரைப்போன்றவர்களுடனெல்லாம் தொடர்புகளை இணையம் , குறிப்பாக ‘பதிவுகள்’ இணைய இதழ் ஏற்படுத்தித்தந்தது என் அதிருஷ்ட்டமே.
அவர் பல வருடங்களாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டேயிருந்தார். உண்மையில் அவர் இறக்கும் வரையில் அனுப்பிக்கொண்டேயிருந்தார் என்பேன். அக்டோபர் 20 2015 அவர் மறைந்தார். மறைவதற்கு முன் அக்டோபர் 18, 2015 அன்றும் அவர் பதிவுகள் இணைய இதழுக்குத் தன் கட்டுரையை அனுப்பியிருந்தார். அத்துடன் அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்தான் கீழுள்ளது:
– Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Oct. 18, 2015 at 12:47 a.m.
அன்புள்ள ஆசிரியருக்கு, இத்துடன் ஒரு நீண்ட பேட்டியை முன்று பகுதிகளாக்கி அதனை மீண்டும் உங்கள் சௌகரியத்திற்காக முன்று அங்கங்களாக்கி,. உங்களுக்கு அனுப்பும் சௌகரியத்திற்காக மூன்றாக அனுப்பியிருக்கிறேன் . நீங்கள் இந்த மூன்றையும் இணைத்து ஒன்றாக்கிக்கிக் கொள்ளுங்கள்.
அன்புடன்
வெசா –
பல வருடங்களாக அவரைப்போன்ற பலர் எழுதிய மின்னஞ்சல்கள் பல பல்வேறு கணினிகளில் புதையுண்டு கிடக்கின்றன. அவ்வப்போது கணினிகளை மாற்றுவதால் ஏற்பட்ட விளைவு. மீண்டுமொருமுறை அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டும். அமரர் வெ.சா அவ்வப்போது எனக்கனுப்பிய மின்னஞ்சல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். மின்னஞ்சல்கள் குறுகியவையாக இருந்தாலும் அவை என்னைப்பொருத்தவரை முக்கியமானவை. பதிவுகள் மீதான அவரது மதிப்பினையும், என் மீதான அவரது அன்பினையும் வெளிப்படுத்துபவை.
Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Apr. 23, 2009 at 8:14 a.m.
thank you. I see you are flush with such abundance of contributions that you are not able to cope with it, an enviable position of course. I wish you the same success throughout. Yesterday evening I met a friend from Singapore who said that he has been closely following what I write in Pathivukal. It was then I thought, I must remind you of the position.
thank you,
swaminathan
அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் படைப்புக்கள் உள்ளடங்கிய பெருந்தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
கவிஞர் மு. செல்லையா ஈழகேசரிக்காலப் படைப்பாளிகளில் ஒருவர். சைவப்பெரியார் கா. சூரனின் மாணாக்கர் பரம்பரையின் முதல் வித்து. அவரிடம் சமயம், மொழி, இலக்கியம், ஆகியவற்றைக் கற்றதோடல்லாமல் தமிழில் விசேட தேர்ச்சி பெறும்பொருட்டு கரவெட்டிப் பண்டிதர் திரு க. மயில்வாகனம் உபாத்தியார் அவர்களிடம் இலக்கண இலக்கிய நூல்களையும் சமய அறிவுக்கு அடிப்படையாக புராணத்தையும் சைவப்பெரியார் அவர்களின் வழிகாட்டலிலேயே கற்றுத்தேர்ந்தார். பிற்காலத்தில் மதுரைப் பண்டிதர் பரீட்சைக்காக பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடமும் வித்துவான் ந. சுப்பையாபிள்ளையவர்களிடமும் பாடங்கேட்டார்.
1927 ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து கொண்டு வெளியேறினார். தேவரையாளிச் சமூகத்தின் மத்தியில் இருந்து தோன்றிய முதலாவது பயிற்றப்பட்ட சைவஆசிரியன் என்ற பெருமையும் பெயரும் கவிஞர் அவர்களுக்கே உரியது. பண்டிதர், ஆசிரியர், தலைமையாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், சோதிடர், சமூக விடுதலை விரும்பி, சமூக முன்னோடி ஆகிய பல்பரிமாண ஆளுமை மிக்கவர். சைவசமய அபிமானியாகவும் காந்தீயக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தின்மீது ஆராக் காதல் கொண்டு கதர் உடையணிந்து காந்தியவாதியாகவே தன் வாழ்வை மேற்கொண்டவர்.
இப்பெருந்தொகுதியின் பதிப்பாசிரியர்களாகிய கலாநிதி சு. குணேஸ்வரன் மற்றும் திரு மா. செல்வதாஸ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கவிஞர் மு. செல்லையாவின் படைப்புக்களைத் தேடிக் கண்டடைந்து 632 பக்கங்களில் பெருந்தொகுதியாக்கியிருக்கிறார்கள்.
அகிலத்தில் அதிகம்
“ஆளுமை” செய்தோர்,
ஆண்கள் எனப்பட்டனர்…!
பெருமை பலதைப்
“பேணிக்” காத்தோர்,
பெண்கள் எனப்பட்டனர்…!
குணமும், செயலும்
கொள்கையும் கூடிப்,
பெயரை வகுத்தனவாம்…!
பெயரே மிச்சம்,
பெயர்ந்தன எச்சம்..,
பின்னர் யாரெவராம்…?
இன்று உலக மகளிர் தினம். ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையும், அனைத்துத் தரப்பினருமே சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையுமே சமூகப்பிரக்ஞை மிக்க மனிதர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கமுடியும். அதேசமயம், எப்போதுமே சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவே தம்மை முன்னிறுத்திக்கொள்வார்கள். Playing the victim card. அதைச் செய்யும் ஆண்களும் உண்டு. அது எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளையும், அவர்கள் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் மக்கள் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் குறைவு என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை.
THE AGE OF ABILITY என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 5ஆம் தேதி பகிரப்பட்ட ஒரு காணொளி உரையை பதிவுகள் இணையதள ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் முகநூலில் தன் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளார். NORA ZEMERA என்ற BHUTAN நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான, இளம்பெண்ணின்(பாகிஸ்தானிய தேசிய தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இயங்கிவரும் இவர் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார் என்று நினைக் கிறேன்) இந்த உரையை மகளிர்தினமான இன்று என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. அத்தனை எழுச்சிமிக்க உரை இது. _ லதா ராமகிருஷ்ணன்
நீங்கள் என் இயலாமையைப் பார்க்கிறீர்கள். நான் என் திறமையைப் பார்க்கிறேன். நீங்கள் என்னை ஊனமுற்றோர் என்றழைக்கிறீர்கள். நான் என்னை மாற்றுத்திறனாளி என்று அழைக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நேரலாம். அவை உங்களை உடைந்துபோகச் செய்கின்றன; உருக்குலையச் செய்கின்றன. ஆனால், அவையே உங்களை உங்களுடைய ஆகச்சிறந்த பாங்கில் வார்த்தெடுக்கின்றன; வடிவமைக்கின்றன. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது. எனக்குப்பதினெட்டு வயதாகும்பொது என் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். நான் அவரிடம் சொன்னதெல்லாம் இதுதான்: நான் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால் நான் அப்படியே ஆகட்டும்.”. அந்தத் திருமணம் ஒருபோதும் மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.
திருமணமாகி இரண்டுவருடங்களே ஆகியிருந்தபோது நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ என் கணவர் தூங்கிவிட்டார். கார் ஒரு ஆழ்பள்ளத்தில் விழுந்துவிட்டது. அவர் எப்படியோ சமாளித்து காரிலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். அவர் தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே.
ஆனால், நான் காரிலேயே இருக்கும்படியாகியது. எனக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட பட்டியல் அது. கேட்டு பீதியடைந்துவிடாதீர்கள். மணிக்கட்டில் எலும்புமுறிவு, தோள்பட்டை எலும்பும், கழுத்துப்பட்டை எலும்பும் முறிந்துவிட்டன. என்னுடைய விலா எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டது.
இவ்வாறு இடுப்பு எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டதால் என் நுரையீரல்களும் கல்லீரலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. என்னால் மூச்சுவிட முடியவில்லை. சிறுநீரை அடக்கிக்கொண்டு உரிய நேரத்தில் வெளியேற்றும் கட்டுப்பாட்டை என் சிறுநீரகங்கள் அறவே இழந்துவிட்டன. முதுகுத் தண்டுவடத்தில் மூன்று எலும்புகள் முழுவதுமாக நொறுங்கிவிட்டன. அதன் விளைவாக நான் அதற்குப் பிறகான வாழ்க்கையில் இயங்கவே இயலாதவளானேன்.
வடமேற்கு இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது தலைமை ஆசிரியரும் முத்தமிழ் அறிஞரும் பன்னூலாசிரியருமான கதிரேசர் மயில்வாகனனார் (1919 – 2019) அவர்களின் நூற்றாண்டு விழா 09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகும். கல்லூரியின் ஸ்தாபகர் ( அமரர் ) எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் மருமகளும் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ( அமரர்) ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் துணைவியாருமான திருமதி யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முன்னாள் தலைவரும் பரிபாலன சபை உறுப்பினருமான திரு. இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்துகொள்வர்.
எழுபதுகளிலேயே கனடாவுக்குப்புலம்பெயர்ந்து , இங்குள்ள பிரபல நிறுவனமொன்றில் பணியாற்றி , அண்மையில் ஓய்வு பெற்றவரே நகுலேஸ்வரி அவர்கள். இவரை எனக்கு சிறு வயதிலிருந்தே நன்கு தெரியும். எமது மாணவப்பருவத்திலேயே இவர் அக்காலகட்டத்தில் வெளியான வெகுசன இதழ்களில் வெளியாகிக்கொண்டிருந்த ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களைப் பார்த்து அழகாக ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை வியப்புடன் பார்த்திருக்கின்றோம், கனடாவின் பொருளியல் வாழ்க்கைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் பெரிதாகத் தனது ஓவியத் திறமையில் நாட்டம் செலுத்தவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பின்னர், குழந்தைகளெல்லாம் வளர்ந்து தம் வாழ்வைக் கவனிக்கத்தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் பொழுதுபோக்குக்காக இவரது கவனம் ஓவியத்தின்பால் ஈடுபடத்தொடங்கியது. இருந்தாலும் தன் ஓவியத்திறமையில் பெரிதும் நம்பிக்கை வைத்தவராகத்தெரியவில்லை. அடிக்கடி ‘வோட்டர் கலர்’ ஓவியங்களை வரைவதும் , அவற்றை அழிப்பதுமாக இருந்திருக்கின்றார். அவ்வாறான சமயங்களில் தான் இவர் வரைந்த சில ஓவியங்களைப்பார்த்தேன். எனக்குப் பிரமிப்பாகவிருந்தது.
பொறுமைக்கு இலக்கணமாய்
புவிமீது வந்திருக்கும்
தலையாய பிறவியென
தாயவளும் திகழுகிறாள்
மலையெனவே துயர்வரினும்
மனமதனில் அதையேற்று
குலையாத நிலையிலவள்
குவலயத்தில் விளங்குகிறாள்
சிலைவடிவில் கடவுளரை
கருவறையில் நாம்வைத்து
தலைவணங்கி பக்தியுடன்
தான்தொழுது நிற்கின்றோம்
புவிமீது கருசுமக்கும்
கருவறையை கொண்டிருக்கும்
எமதருமை தாயவளும்
இறைநிலைக்கே உயர்ந்துவிட்டாள்
பெண்பிறவி உலகினுக்கே
பெரும்பிறவி எனநினைப்போம்
மண்மீது மகான்கள்பலர்
கருசுமந்த பிறவியன்றே
காந்திமகான் உருவாக
காரணமே தாயன்றோ
சாந்தியொடு சமாதானம்
சன்மார்க்கமும் தாய்தானே
vilansei@hotmail.com>
பழனிவேளின் கவிதை – ’கஞ்சா’ தொகுப்பிலிருந்து
நமது பரவசத்தைக் கையிலேந்திக்கொண்டு
கிட்டத்தட்ட வேண்டுதல்போல
வருவோர் போவோர் நண்பர்கள் எதிரிகள்
என்று பேதா பேதமின்றி
வில்லை வில்லையாய் அள்ளித் தருகிறோம்
நமது பரவசம் அட்சயம் போல வளருகிறது
தீர்ந்த பாடில்லை.